கல்வி சமூகவியல் ஓர் அறிமுகம்
• சமூகவியலின் பிரயோகத் துறைகளில் ஒன்றான கல்வி சமூகவியல் 20ம் நூற்றாண்டின் முன்னரைப்பகுயில் துரிதமாக வளர்ச்சிப் பெறத் தொடங்கியது. கல்வி நிறுவனங்களையும் அவற்றின் செயற்பாடுகளையும் சமூகவியல் சார்ந்த நோக்கில் இருந்து கார்கின்ற இயலாக கல்வி சமூகவியல் அமையும் பொழுது கல்விக்கும், சமூக தொகுதிக்கும் இடையிலுள்ள தொடர்புகளும் சக நிறுவனங்கள் கல்வியில் கொண்டுள்ள வகிபங்கும் இங்கு முக்கிய பொருளாக இடம்பெறுகின்றது.
• சமூக உறவுகள், சமூக அடுக்கமைவுகள், இவை பற்றிய மனப்பாங்குகள் கல்வி நிறுவனங்களிடையே நிகழும் ஊடகங்கள் சார்ந்த ஒழுங்கு துறைகள் ஆசிரிய – மாணவ உறவுகள் போன்ற விடயங்களில் கல்வி சமூகவியல் செல்வாக்கு செலுத்துகிறது.
• பொதுச் சமூவியலின் சகல அம்சங்களும் அடங்குவதுடன் கல்வி சார்ந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இத்தகைய “கல்வி சமூகவியல்” எனும் சொற்றொடரை முதன் முதலில் பயன்படுத்தியவர். கில்லட் என்பவராவர். மேலும் 1907ம் ஆண்டு தான் ஆசிரிய பயிற்சி கல்லூரிகளினுச. து.ஆல் “கல்வி சமூகவியல்” ஒரு தனிப்பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கல்வி சமூகவியல் என்றால் என்ன?
• கல்வி செயல்முறையானது ஒரு சமூக செல்முறையாகும் என்பது சமூகவியலின் அடிப்படை கருத்தாகும்.
• சமூகவியலின் விதிகளையும், முறைகளையும் பயன்படுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கு விடைக்கான கல்வி சமூகவியல் பயன்படுத்தப்படுகிறது.
• இதற்கமைய “கல்வி சமூகவியல்” என்பது கல்வி மற்றம் சமூகம் இவை இரண்டின் தொகுப்பு எனலாம்.
• கல்வியின் தத்துவங்களினதும் பயிற்சிகளிலும் பயன்படுத்துகின்ற சமூகவியல் கோட்பாடுகளை பற்றிய கற்கையாகும்.
• பிரௌன் (டீசழறn) என்பவரது கருத்துப்படி கல்விச் சமூகவியல் என்பது தனிநபருக்கும் அவரின் கலாசார சூழலுக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றிய கல்வியாகும்.
• இது சமூகத்தை மட்டும் சாந்ததல்ல கல்வியும் சார்ந்ததாகும் கல்வி சமூகவியல் கலாசாரங்கள் சக நிறுவனங்கள் கல்வி படிப்பறிவு வெளி உலக அறிவு முதலான விடயங்களை பற்றிய கற்றை நெறியாகும்.
கல்வி சமூகவியல் பற்றிய வரைவிலக்கணங்கள்
• பின்னே (FINNEY)
“கல்வி பிரச்சினைகளுக்கு சமூகவியலின் அடிப்படையில் விளக்கம் தரும் இயலே கல்வி சமூகவிளலாகும்.
• குல்ப் (KULP)
“கல்வி ஒரு சமூக சீர்திருத் கருவியாகும். ஆகவே கல்வி நிலையங்களை சமூக நிலையங்களாக கருதி ஆராயும் விஞ்ஞானமாகும்.
• ஒல்வின் குட் (AVIN GOOD)
“சமூக குழக்களின் ஒறுப்பினராக மனிதனால் பெறப்படும் கல்வி பற்றியும் இத்தகைய குழக்களில் பயனுள்ள வகையில் வாழ்க்கை நடத்த மனிதனுக்கு தேவைப்படும் கல்வி பற்றியும் எடுத்துரைப்பதே கல்வி சமூகவியல்.
• காட்டர் (CARTER)
“கல்வி சமூகவியலானது கல்வி செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறும் சமூக நிலைமைகள் சிலவற்றை குறிப்பாக பெறுமதிமிக்க கல்வி நிகழ்ச்சி திட்டங்களையும் கல்வி செயற்பாடுகளில் இடம்பெறும் கட்டுபாடுகளையும் எடுத்துகாட்டும் இயலாகும்.
• ஒட்டாவே (OTTOWAY)
“கல்வி ஒரு செயன்முறை என்ற எடுகோளுடன் ஆரம்பித்து அது சமூத்தினுள் சென்றடையும் பொழுது கல்வியின் இயல்புகளை சமூகம் தீர்மானிக்கின்றது எனும் அடிப்படையில் சமூகவியல் கோட்பாடுகளில் வினைத்திறனும் செயற்றிறனும் பிரயோகத் தன்மையும் கொண்ட இளலாகும்.
கல்வி சமூகவியல் பற்றிய முக்கிய குறிப்புகள்
• கல்வியில் சமூவியலின் அவசியத்தை முதன் முதலில் உணர்ந்தவர் E.G.பெயின் (E.G.PAYNE) என்பவராகும்.
• கல்வி சமூகவில் (EDUCATION SOCIOLOGY) எனும் சொற்றெரடரை முதன் முதலில் பயன்படுத்தியவர் DR.J.M. கில்லட் ஆவார்.
• முதன் முதலில் அமெரிக்காவில் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் 1907ம் ஆண்டு முதல் கல்வி சமூகவியல் தனித்து ஒரு பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது.
• 1947ம் ஆண்டில் கல்வி சமூகவியல் பற்றிய முதலாவது நூல் W.ரொபின்ஸன் ஸ்மித் (W.ROBINSON SMITH) என்பரால் எழுதப்பட்டது.
• நவீன கல்வி சமூகவியலின் தந்தையான விளங்குபவர் துரகைம் (DURKHEIM 1858 – 1917) ஆவார்.
கல்வியின் இயல்வு இனம் காணப்பட்ட அடிப்படைகள்
• சமூகம் ஓர் உயிரி என்ற என்ற வகையில் சமூகத்தினால் சமூகத்திற்கு வழங்கப்படும் கல்வி
• கல்வியின் மூலம் கலாசாரத்தினை கையளித்தல்
• ஜனநாயக சமூகத்தின் சிறிய அமைப்பான பாடசாலை இனங்காணப்பட்டமை
கல்வி சமூகவியலின் முக்கியத்துவம்
• சமூகத்தில் ஆசிரியர் பங்கினை தெளிவாக்கி அதனை மேலும் முக்கியமானதாக உயர்த்தல்.
• ஆசிரிய மாணவரின் இடைத்தொடர்பின் சமூக விளைவுகளை உணர்ந்து கற்றலை ஊக்குவிக்க இவற்றை பயன்படுத்துதல்.
• EX – வகுப்பறை கல்வி நிலை
இடைவினை பகுப்பாராய்தல்.
• பாடசாலை அமைந்திருக்கம் சமுதாய தேவைகளை உணர்தல்
• பாடசாலைக்கம் பிற சமூக நிறுவனங்களுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பினை உருவாக்கல்.
• சமூகத்தில் காணப்படும் பல்வேறு போக்குகளை ஆராய்ந்து இவை தனி நபர்களையும், பாடசாலைகளையும் தீய அல்லது கெடுதல் பயக்கும் செல்வாக்குகளை அகற்றுதல்.
• மாணவர்களிடையே ஜனநாயக பண்பு வரை உதவுதல்.
• கலைத்திட்டத்தினை பயன்மிக்கதாக மாற்றியமைத்தல் - இதனூடாக சமுதாய பாடசாலை என்பதன் வளர்ச்சிக்கு உதவுதல்.
கல்வி சமூகவியலின் மூன்று வளர்ச்சி கட்டங்கள்
• முதலாவது கட்டமானது ஆய்வு அடிப்படையில் இடம் பெறவி;ல்லை கல்வி சமூகவியல் ஆசிரியர் பயிற்சியின் ஒரு பகுதியாக மட்டும் உள்ளடங்கியிருந்தது. 1910 இல் கொலம்பியா பல்கலைகழகத்தில் கல்வி சமூகவியல் தொடக்கி வைக்கப்பட்டது.
• 1920 களில் கல்வி சமூகவியலின் வளர்ச்சியின் இரண்டாவது காலகட்டமாகும். இது நியம கல்வி சமூகவியல் கால கட்டமாகும். இக்கால பகுதியிலேயே கல்வியின் உள்ளடக்கத்திற்கும் விஞ்ஞான ரீதியான அடிப்படைகள் உருவாகின.
• மூன்றாவது கட்டத்தில் கல்வி சமூகவியலானது கல்வி சார் பிரச்சினைகளின் சமூகவியல் என்ற நோக்கில் இடம் பெறலாயிற்று. 1930 இரண்டாம் உலகப்போர் முடியும் வரையில் கல்வி சமூகவியலின் பிரயோக அடிப்படைகள் முதன்மை பெற்றது.
கல்வி சமூகவியல் அடிப்படைகள்
• கல்வியின் உண்மையான இலக்குகள் தனியாள் மற்றும் சமூக சார்ந்த கல்வி இலக்குகளில் தங்கியுள்ளன என்பதை நாம் அறிவோம். தனியாள் ஒருவருடைய இருப்பானது அவர் சமூகத்தில் உள்ள பல்வேறு குழக்களிடையே காணப்படும் தொடர்புகளை உறவுகளை பற்றியறிவதில் கவனம் செலுத்தியுள்ளது.
• மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதனால் தனியாட்களுக்கு வழங்கப்படும் கல்வியும் சமூத்தை அடிப்படையாக கொண்டு அமைதல் முக்கியமானது கல்வி முறையானது சமூத்தின் இலக்குகளையும், நோக்கங்களையும் சகூக அமைப்பினையும் சமூகத்தின் காட்டுபாடுகளையும் ஏற்படுத்தும் காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
• சமூகம் சார்ந்த நோக்கில் கல்வி சமூகவியல் கல்வி நிறுவனங்கள் கல்வியின் கலாசார மற்றும் பொருளாதார பின்னணி, சமூகம் சார்ந்த மனப்பாங்குகள் தனியாள் ஒருவரின் செல்வாக்கு செலுத்தும் சமூகவியல் காரணிகள் பற்றி ஆராய்தல்.
• கல்வி அடிப்படைத் தொழிற்பாடுகள் என்ற வகையில் இரண்டு விடயங்களை எடுத்துக் காட்டலாம். பிள்ளைகளின் ஆளமையில் முழமையான விருத்தியை உருவாகுதல் சமூக பயன்பாட்டுள்ள உறுப்பினராய் பிள்ளை வளர துணையாதல்.
கல்வி சமூகவியல் அடிப்படைகள்
• கல்வியின் உண்மையான இலக்குகள் தனியாள் மற்றும் கமூகம் சார்ந்த கல்வி இலக்குகளில் தங்கியுள்ளன. என்பதனை நாம் அறிவோம் தனியாள் ஒருவருடைய இருப்பானது அவர் சமூகத்தில் உள்ள பல்வேறு குழுக்களிடையே காணப்படும் தொடர்புகளை உறவுகளை பற்றயறிவதில் கவனம் செலுத்தியுள்ளது.
• மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதனால் தனியாட்களுக்கு வழங்கப்படும் கல்வியும் சமூகத்தை அடிப்படையாக கொண்டு அமைதல் முக்கியமானது. கல்வி முறைமையானது சமூகத்தின் இலக்குகளையும், நோக்கங்களையும் சமூக அமைப்பினையும் சமூகத்தின் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தும் காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
• சமூகம் சார்ந்த நோக்கில் கல்வி சமூகவியல் கல்வி நிறுவனங்கள், கல்வியின் கலாசார மற்றும் பொருளாதார பின்னணி, சமூகம் சார்ந்த மனப்பாங்குகள், தனியாள் ஒருவரின் செல்வாக்கு செலுத்தும் சமூகவியல் காரணிகள் பற்றி ஆராய்தல்.
• கல்வி அடிப்படைத் தொழிற்பாடுகள் என்ற வகையில் இரண்டு விடயங்களை எடுத்துக்காட்டலாம். பிள்ளைகளின் ஆளுமையில் முழுமையான விருத்தியை உருவாக்குதல் சமூக பயன்பாட்டுள்ள உறுப்பினராய் பிள்ளை வளர துணையாதல்.
கல்வி சமூகவியல் நோக்கங்கள்
• சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கினை தெளிவாக்கி அதை மேலும் முக்கியமானதாக உயர்த்துதல்
• சமூக நிலையங்களில் கல்வி பயன்களை ஆராய்தல்
• ஆசிரிய மாணாக்கள் தொடர்பின் சமூக விளைவுகளை உயர்த்தும் கற்றலை ஊக்குவிக்க இவற்றை பயன்படுத்தல்
• பள்ளி அமைந்திருக்கும் சமுதாயத்தின் தேவைகளை உணர்தல்
• பள்ளிக்கும் பிறசமூக நிறுவனங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பினை உருவாக்கல்
• சமுதாயத்தில் இன்று காணப்படும் பல்வேறு போக்குகளை ஆராய்ந்து தனி மனிதர்களையும், பள்ளிகளையும் இவை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை தெளிவாக்கல் போன்றவையாகும்.
கல்வி சமூகவியலானது தனியாள் என்ற ரீதியில் தொடர்புறும் விதம்.
• கல்வி சமூகவியல் தனியாளை சமூகத்திற்கு பொருத்தமான ஆக்கத்திறனுள்ள பூரண மனிதனாக வடிவமைக்கின்றது. இது பற்றி நோக்குகையில் பள்ளியில் வழங்ப்படும் கல்வியின் கல்வி மூலம் தனி ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் முதல் தடவையாக சகபாடிக் குழுவினருடன் பழக்குவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
• தனியாள் சமூத்தில் மூத்தோர் எவரினதும் குறுக்கீன்றி சுதந்திரமாக ஒன்றுகூடி விளையாடுவதற்கான வாய்ப்பினையும் தன்னை நிலைப்படுத்துவதற்குமான வழிகாட்டகல்ளையும் கல்வி சமூகவியல் மூலம் பெறுகின்றான்.
• இறுதியாக பண்பாட்டு சூழலானது தனியாள் மீது செலுத்தும் செல்வாக்கினை ஆராய்வதுடன் அச்சூழலை மாற்றியமைக்கும் வழிமுறையாகவும் அமைகின்றது. என்ற ரீதியில் கல்வி சமூகவியலானது தனியாள் ரீதியில் தொடர்பபடுகிறது எனலாம்.
• கல்வி சமூகவியல் தனியாளை சமூகத்திற்கு பொருத்தமான ஆக்கத்திறனுள்ள பூரண மனிதனாக வடிவமைக்கின்றது. இது பற்றி நோக்குகையில் பள்ளியில் வழங்ப்படும் கல்வியின் கல்வி மூலம் தனி ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் முதல் தடவையாக சகபாடிக் குழுவினருடன் பழக்குவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
• தனியாள் சமூத்தில் மூத்தோர் எவரினதும் குறுக்கீன்றி சுதந்திரமாக ஒன்றுகூடி விளையாடுவதற்கான வாய்ப்பினையும் தன்னை நிலைப்படுத்துவதற்குமான வழிகாட்டகல்ளையும் கல்வி சமூகவியல் மூலம் பெறுகின்றான்.
• இறுதியாக பண்பாட்டு சூழலானது தனியாள் மீது செலுத்தும் செல்வாக்கினை ஆராய்வதுடன் அச்சூழலை மாற்றியமைக்கும் வழிமுறையாகவும் அமைகின்றது. என்ற ரீதியில் கல்வி சமூகவியலானது தனியாள் ரீதியில் தொடர்பபடுகிறது எனலாம்.
• கல்வி முறைமையானது சமூக அமைப்பினை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகிறது. கல்வி அமைப்பு, கற்பிக்கும் பாடங்கள், கற்பித்தல் முறைகள், கல்வியின் இறுதி இலக்கு என்பன சமூக அமைப்பு அதன் குறிக்கோள்கள் நோக்கங்கள் என்பவற்றுடன் இணைந்தவை இதனால் சமூகபயன்மிக்க கல்வியினை உருவாக்க ஆசிரியருக்கு கல்வி சமூகவியல் அறிவு அவசியமானது.
• பாடசாலையில் பயிலுகின்ற மாணவர்களை சமூக இயல்பினர்களாக்கும் செயன்முறை ஆசிரியர்களின் பிரதான பணிகளில் ஒன்றாகும். இச்செயன்முறை வெற்றிக்கு ஆசிரியருக்கு கல்வி சமூகவியல் அறிவு அவசியமாகும்.
• தனிமனித ஆற்றலினால் சமூக வளர்ச்சி பெறுகின்றது என்பதனையும் சமூகத்தினர் தனிமனிதர்கள் பல்வேறு பெயர்களில் முடியும் என்பதில் உள்ள திருத்தலம் ஆகும் இதனை மாற்றுவதற்கு அவர்களுக்கு கல்வி சமூகவியல் அறிவு அவசியமாகும்.
• தமது கல்விப் பணியின் மூலமாக ஆசிரியர்கள் ஆற்றக்கூடிய செயற்பாடுகளை விளக்குவதற்கு அவர்களுக்கு கல்வி சமூகவியல் அறிவு அவசியமாகும்.
• சமூகத்தின் பண்டைய மரபுகளை பேணி அவை சிதைவடையாமல் பாதுகாத்து அடுத்து வரும் பரம்பரையினருக்கு ஒப்படைத்தல் கல்வியின் நோக்கங்களும் ஒன்றாகும். இந்நோக்கத்தினை முறையாக நிறைவேற்ற அவர்களுக்கு கல்வி சமூகவியல் தொடர்பான அறிவு அவசியமாகும்.
THANK YOU



1 Comments
👍👍👍
ReplyDeleteTHANK YOU COMMIN US