சமூகமானது இனம், மதம், மொழி, ஆண், பெண் பாலியல் இயல்பு, சமூக வகுப்பு என்பவற்றுக்கு ஏற்ப பல்வகைப்பட்டு அமைந்துள்ளது.
மனித சமூகத்தின் அனைத்து வகைகளிலும் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன.
இந்த ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்க சமூகவியலாளர்கள் சமூக வகுப்பு அடுக்காக்கம் எனும் கலைச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
சமூக வகுப்பு தொடர்பான வரைவிலக்கனம்
GIDDENS-1989
பல்வேறு மக்கள் குழுவமைப்புக்களிடையே நிலவும் கட்டமைப்புசார் சமமின்மை அல்லது ஏற்றத்தாழ்வு.
HARAMBOSS HALBOURN – 1990
அதிகாரம்இ கௌரவம்இ செல்வம் என்பன உள்ள உறுப்பினர்கள் அடங்கும் சமூகக் குழுக்கள் காணப்படல்.
DEVISH CARTNER
ஒருவரையொருவர் அணுகுவதில் நெருக்கமான தன்மையைக் கொண்ட பாரிய மனிதக் குழுவே சமூக வகுப்பாகும்.
INSBARK
பொதுவான தொழில்;இ வயதுஇ கல்வி ஆகியவற்றில் ஒத்த வாழ்க்கைப் பழக்கங்கள்இ கருத்துக்கள்இ உணர்வுகள்இநடத்தைகளில் ஒத்த தனியாட்களின் குழுவே சமூக வகுப்பாகும்.
சமூக வகுப்பின் வகைகள்
இலங்கைச் சமூகத்தில் காணப்படும் சமூக வகுப்புக்கள்
சமூக அடுக்காக்கம் சமூக வகுப்பு பற்றிய நோக்கு
ஒரு சமூகத்தினை பல்வேறு குழுக்களாக வகைப்படுத்துவதை சமூக அடுக்காக்கம் என சமூகவியலறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
சமூக அடுக்காக்கத்திற்கு அமைவாக சமூகத்திலுள்ள குழுக்களின் ஒழுங்கு அமைவும் அடுக்காக்கங்களுக்கான சமூக மதிப்பும் வேறுபட்டு அமைவதை காணலாம்.
இவ்வாறு சமூக படிநிலையில் காணப்படும் பல்வேறு வகைப்பட்ட குழுக்கள் வேறுபாடான அந்தஸ்த்தைக் கொண்டவையாக காணப்படும்.
இவ்வாறே சமூகத்தின் வௌ;வேறுப்பட்ட அடுக்கமைவிலுள்ள குழுக்களுக்கு வாய்ப்புக்களும், வசதிகளும் ஒரே மாதிரியாக கிடைப்பதில்லை.
சமூக அடுக்காக்கத்தின் உயர்நிலையில் உள்ள மேலடுக்கக் குழு பல்வேறு வகைபட்ட நன்மைகளை, சாதகமானத் தன்மைகளை அனுபவிக்கின்ற வேளை கீழ் நிலையில் உள்ள அடுக்க சமூகக் குழுவானது பல்வகைப்பட்ட இடர்பாடுகளையும் சிரமங்களையும் அனுபவிப்பதாகக் காணலாம்.
இதன் போது பொருளாதாரம், கல்வி, சமூக அங்கீகாரம் என்பன கருத்திற் கொள்ளப்பட்டு வந்துள்ளமையை நோக்கக் கூடியதாக உள்ளது.
சமூக அடுக்காக்கம் பற்றிய வரைவிலக்கணங்கள்.
கார்ள் மார்க்ஸ்
“சமூக அடுக்கமைவுக்கான அடிப்படைகளை பொருளாதாரக் காரணிகள் தீர்மானிக்கின்றன. இதனையே நாம் சமூக வகுப்பு என்கின்றோம்.”
இன்ஸ்பர்க்
“சமூக அடுக்கமைவு என்பது சமூகக் கூறுகளை அந்தஸ்த்தின் அடிப்படையில் பல்வேறு குழுமங்களாக வகுப்பதாகும்.”
என்டனி கிட்டின்ஸ்
“மக்கள் குழுக்களிடையே காணப்படுகின்ற அமைப்பாக்கப்பட்ட சமத்துவமின்மையே சமூக அடுக்கமைவாகும்.”
சமூக அடுக்கமைவில் பின்வரும் இரண்டு வகையான சமூக முறைமைகள் காணப்படுகின்றன
01. இனம்
02. மொழி
03. வயது
04. பால்நிலை
05. சமூக வகுப்பு
சமூக ஒழுங்கமைப்பு பற்றிய கொள்கைகள்.
1. செயல்வாதம் ( FUNCTIONALISM)
ஒரு சமூகமானது ஒழுங்கு முறையாகவும், சீரான போக்கிலும் செயற்படுவதற்க்கு சில அடிப்படை அம்சங்களை éரணப்படுத்தியிருக்க வேண்டும். இதனால் ஒரு சமூகததின் சீரான இயக்கத்திற்கு ஒழுங்கு, கட்டுபாடு, உறுதிப்பாடு என்பன அவசியம் என்பதையும் சமூக அடுக்கமைவானது இதற்கு உறுதுணையாக அமைதல் வேண்டும் எனவும் இக் கொள்கையானது வற்புறுத்துகிறது.
செயல்வாதம் தொடர்பில் சமூகவியல் அறிஞர்களின் கருத்துக்கள்
டெல் கொட் பாசன்ஸ்
சமூகத்தில் நிலவுகின்ற ஒத்துழைப்பு, உறுதிநிலை, ஒழுங்கு நிலை என்பன பெறுமானங்களில் தங்கியுள்ளன.
பெறுமானங்களில் உள்ளடக்கியுள்ள பெறுமதிமிக்கவையையும், நல்லனவற்றையும் உள்வாங்கிக் கொள்வதில்; உடன்பாடு நிலவுதல் வேண்டும்.
சமூக அடுக்காக்கம் என்பது சமூகத் தொகுதியிலுள்ள கூறுகளை பொதுவானதொரு பெறுமான முறைக்கு ஏற்ப வரிசைப்படுத்தலைக் குறித்து நிற்கின்றது.
அநேகமான சமூகங்களின் பெறுமானம் என்பது முக்கிய கூறாகக் கொள்ளப்படுவதனால் சில பொதுவான பெறுமானங்களின் மூலம் சமூக அடுக்கமைவானது தீர்மானிக்கப்படுகின்றது.
KINGELEY DAVIS AND WILLBEART MOORE (1945)
சமூக அடுக்கமைவானது சகல சமூகங்களிலும் இடம்பெறுகின்ற செயன்முறையாகும்.
ஒரு சமூகமானது வினைத்திறன் மிக்கதாக செயற்பட வேண்டுமாயின் செயல்நிலை அடிப்படையில் சில தேவைகளைப் éர்த்தி செய்து கொள்ளல் வேண்டும்.
சமூகம்; வெற்றிகரமானதாக தொழிற்படுவதற்கு வகிபங்கு ஒதுக்கீடு என்பது மிக அவசியமானதாகும்.
திறமைமிக்க தனிநபர் சமூகத்தின் உயர்நிலை பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை தீர்மானிப்பதற்கு சமூக அடுக்கமைப்பு வழிப்படுத்துகிறது.
கார்ள்மார்க்ஸ்
(இவரது சற்று மாறுபட்ட கருத்தாகும்)
அடுக்கமைவுக்கு உட்பட்ட சகல சமூகங்களிலும் ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என இருவகை வர்க்கத்தினர் தொழிற்படுகின்றனர்.
ஆளும் வர்க்கமானது ஆளப்படும் வர்க்கத்தினை அடக்கி ஆளுவதுடன் சுரண்டலுக்கும் உட்படுத்தபடுகின்றது.
பொதுவாக சமூகத்திலுள்ள சட்டதிட்டங்களும் அரசியல் முறைமைகளும் ஆளும்; வர்க்கத்தோடு சார்பானதாகவே உள்ளது.
மாக்சிய கண்ணோட்டத்தில் சமூக அடுக்கமைவானது உற்பத்திக் கருவிகளை உரிமை கொள்வதன் அடிபடையில் அமைகிறது.
முதலாளித்துவ சமூக அமைப்பில் உற்பத்தி சாதனங்களுக்கு உரிமை பாராட்டுவோர் “é;வாக்கள்” எனவும் உழைப்பினை மட்டும் உரிமையாக கொண்டு é;வாக்களிடம் கூலிக்காக உழைப்போர் “பாட்டாளிகள்” எனவும் அழைக்கப்படுவர்.
சமூக வகுப்பும் கல்வியும்
கல்வி வாய்ப்புக்களை தீர்மானிப்பதில் சமூக வகுப்பானது பல்வேறு வகைகளில் முக்கிய காரணியாக திகழ்கிறது. சமூகம் ஒன்றின் கல்வி விருத்திக்கு சமூகம் காரணமாக அமைவதை போல கல்வியானது சமூக அபிவிருத்திக்கான பிரதான காரணியாகவும் தொழிற்ப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது. தனியாட்களின் ஆளுமைக்கு அடிப்படையாக கல்வி விளங்குவதோடு சமூக நலன்களை பேணுவதற்கும் இது துணையாக அமைகின்றது. சமூக வகுப்பானது கல்வி முறைமைகளிலும், கல்வி நிர்வாக முறைமைகளிலும் முக்கிய வகிபாகத்தினை பெற்றுள்மையினை அவதானிக்கலாம். சமூக வகுப்புக்களுக்கு இடையே காணப்படும் உயர்வு தாழ்வு வேறுபாடுகளை இழிவளவாக்குவதில் கல்வி ஒரு முக்கியமான வழிமுறையாக உள்ளது. கல்வியானது சமூக வகுப்பினை உள்ளவாறு பேணுவதற்கும் உறுதுணையாக தொழிற்படுகிறது.
பெற்றோர்களுடைய கல்வி நிலைமை, பொருளாதார நிலைமை, தொழில் தராதரம் என்பன பிள்ளைகளின் பாடசாலை கல்வியுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது.
சமூக வகுப்பானது பிள்ளைகளின் பாடசாலை தெரிவு, பாடசாலை கல்வியில் நீடித்திருக்கும் காலம், அவர்களது கல்வி அடைவ மட்டம் என்பவற்றினை தீர்மானிக்கின்றது.
பெற்றோர்களின் சமூக வகுப்பே பிள்ளைகளின் சுகாதாரம், போசணை, புலன் தொழிற்பாடுகள் என்பவற்றை தீர்மானிப்பதாகவுள்ளது.
நகர்ப்புறங்களில் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்பு உயர் மற்றும் மத்திய வகுப்பினருக்கே உண்டு.
கல்வி வாய்ப்புக்களை விரிவுப்படுத்;துவதாலும் நீடிப்பதாலும் குடும்ப பின்னணி அதிகளவில் தாக்கம் செலுத்துகிறது. வீட்டு வசதி, தொழிநுட்ப சாதன வசதி கற்பதற்கான சூழல் ஊக்குவிப்பு முதலியன கல்வியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
தொழிலாளர் வகுப்பை சேர்ந்தவர்கள் கல்விக்கு வழங்குகின்ற பெறுமானம் மிகவும் குறைவானதாகும். இவர்கள் கல்விக்கு பெருமளவு முதலீடு செய்ய முடியாத நிலைமைகள் உள்ளன. இதனால் குறைந்த வயதில் பாடசாலையை விட்டு விலகுதல், உடனடியாக நன்மை பெறும்; வகையில் தொழிலொன்றை நாடுதல் என்பவற்றுக்கே முக்கியத்துவம் வழங்குகின்றனர். இவர்கள் உயர் தொழில் அந்தஸ்தினை அடைவதில் குறைந்தளவு பெறுமானங்களையே கொண்டுள்ளனர். பெற்றார்களின் கல்வி மீதான ஆர்வமும் சமூக வகுப்பின் செல்வாக்குக்கு உட்படுகிறது.
கலாசார இழப்பு மற்றும் கலாசார வறுமை காரணமாக தொழிலாளர் வகுப்பின் பிள்ளைகளது கல்வி அடைவுகளில் பாரிய தாக்கம் ஏற்படுகின்றது. கல்வியில் சமவாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலமாகவே இத்தகைய பாதிப்புக்களை நீக்க முடியும்.
இவ்வாறாக சமூக வகுப்பானது கல்வியில் பல்வேறு வகையில் தாக்கம் செலுத்துகிறது. இத்தகைய செல்வாக்குகளை சமநிலைப்படுத்தும் வகையில் நியாயத்தன்மையுடன் கூடிய கல்வி முறைமையொன்றைச் செயற்படுத்துவதற்கு சகல அரசுகளும் முன்வர வேண்டும்.
THANK YOU
NOTES BY ANBU



1 Comments
Super 👌👍
ReplyDeleteTHANK YOU COMMIN US