Breaking News

இலங்கையில் கல்வியில் சமகால அபிவிருத்தியும் சமூக மாற்றங்களும்

 




உலகை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் கல்விஎன்று முழங்கியவர் நெல்சன் மண்டேலா, அவருடைய வார்த்தை பொய்யாகவில்லை. கல்வியே ஒருவனுடைய உள்ளத்தையும் அறிவினையும் பண்படுத்தும் மாபெரும் சக்தியாகும்.

 அந்த வகையில் “Education”எனும் சொல் “Educare”எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதே ஆகும். கல்வி எனும் விடயம் பற்றி பல அறிஞர்கள் பல உள்ளார்ந்த கருத்தை தம் அனுபவத்தில முன்வைத்துள்ளனர்.

ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்ததுஎனும் கருத்து சிறந்ததே. அந்தவகையில் இலங்கையின் கல்வி வளர்ச்சி பற்றி பார்த்தோமானால் இலங்கையில் கல்வி ஆரம்பத்தில் எவ்வாறு கொடுக்கப்பட்டது என்று பார்க்கும்போது ஆரம்பகால மன்னர்கள் தமது புதல்வர்களை குருகுல கல்வியிற்கு அனுப்பி கல்வியினை புகட்டினார்கள்.

 சிறந்த அரசனாக வேண்டுமானால் வில்வித்தைஇ அறிவுப்பயிற்சி, உளப்பயிற்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதன் காரணமாக உருவெடுத்தது இந்த குருகுலக் கல்வி.

இன்றைய நவீன யுகத்தில் கல்விக்கான அனைத்து வாய்ப்பு, வசதிகள் மற்றும் சந்தர்ப்பங்கள் என்பன திறந்து விடப்பட்டுள்ளன.

  ஒருவர், துறையொன்றில் அல்லது பல துறைகளில் ஆழமாக கால் பதிக்க இது வழிவகுத்துள்ளது. சமூக மாற்றத்தினை வழிநடத்துவதிலும் பிரதான பங்கு கல்விக்கு உண்டு.

சமூகத்திற்கான விழுமியங்களை உருவாக்குவதிலும் சமூக மூலதனங்கள், ஒற்றுமை, சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல், நட்புணர்வு ஆகியவற்றை சமூக கட்டமைப்புக்குள் பலப்படுத்துவதிலும் கல்வியின் பங்களிப்பு முதன்மையானது.

அனைவருக்கும் கல்வி என்பது மனித இனம் முழுவதற்கும் கல்வி வழங்குதல் என்பதை குறிக்கின்றது. இந்த அறிவியல் யுகத்தில் நாமும் இணைந்து கொள்ள, மேலும் அதன் சவால்களுக்கு ஈடு கொடுக்க வேண்டுமானால் கல்வியறிவு பெற்றிருப்பது அவசியமாகும்.

கல்வி, சமூகம் என்ற இரு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட எண்ணக்கருக்களாகும்.

 கல்வி என்பது பிள்ளையின் உள்ளே இருக்கின்ற ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதால் கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகிறது.

 பல்வேறு கல்விசார் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுத் தருவது கல்வியாகும்.

அறிவு, திறமை போன்றவற்றை வழங்கி ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை போன்றவற்றை வழங்கி ஒரு முழுமையான ஆற்றல் படைத்தவனாக கல்வி மாற்றுகின்றது.

ஒரு சமூகத்தின் முன்னேற்றம் சமூக நகர்வு, சமூக வளர்ச்சி, எழுச்சி, அபிவிருத்தி, என்பன அச்சமூகத்தின் கல்வியை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகிறது.

ஆரம்பகாலத்தில் குறுகிய நோக்காக கொண்டு கல்வி வழங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் பரந்த நோக்காக மாற்றம் பெற்றது. அந்நியருடைய ஆக்கிரமிப்பின் வழியே பிற்பட்ட காலத்தில்தான் கல்வி பரந்த நோக்காக மாற்றம் பெற்றது.

ஆக்கிரமிப்புக்கள் பல இலங்கை மீது தொடுக்கப்பட்டன. அதில் 1505இல் இலங்கையினை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் தம் மதம், மொழி என்பவற்றை பரப்ப கையாண்ட உத்தியே கல்வி ஆகும். போர்த்துக்கேயர்கள் அனைவருக்கும் கல்வியை வழங்கினார்கள்.

 அப்போதுதான் தங்களுடைய கத்தோலிக்க மதம் மக்களிடையே பரப்பப்படும் என்பதற்காக. இதன்போது உருவாக்கப்பட்ட பாடசாலைகளாக பாரிஸ் பாடசாலை, ஆரம்ப பாடசாலை, கல்லூரி, அனாதை பாடசாலைகள் என்பன ஆகும்.

இதன் பின் 1658ல் இலங்கையை கைப்பற்றிய ஒல்லாந்தர் தமது புரட்டஸ்தாந்து மதத்தை பரப்ப கட்டாயக்கல்வி முறையினை கையாண்டார்கள்.

அதில் 15 வயதுக்குட்பட்ட அனைவரும் இக்கல்வியை கற்க வேண்டிய நிலை உருவாயிற்று. அது மட்டுமல்லாது பெண்கல்வி கலைத்திட்டம், பாடஉள்ளடக்கம், விடுமுறை ஒழுங்கு, ஆசிரியருக்குரிய அடிப்படைதகைமை தொடர்பான கட்டளைகள் போன்ற விடயங்களை கல்வியில் புகுத்தியமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
அடுத்ததாக 1798-1930 காலப்பகுதிக்குள் ஆங்கிலேயர்கள் கல்வியில் மாறாத தடங்களை உருவாக்கிச் சென்றனர்.
 முதலாவது பாடசாலை ஆணைக்குழு 1834ல் உருவெடுத்தது. இதன் வளர்ச்சியில் 1869ல் உருவாக்கப்பட்ட பொதுப் போதனை திணைக்களப் பணிப்பாளர் ; J.S லோரி அவர்கள் மிஷனரி பாடசாலைகளை அரசாங்க மிஷனரிபாடசாலைகள் மேற்பார்வைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார்.

பின் அந்நியராட்சியில் படிப்படியாக வளர்ச்சி கண்ட இலங்கைக் கல்வி 1948ம் ஆண்டு சுதந்திரத்தின் பின் 1970 அதிகளவு பட்டதாரிகள் இருந்தும் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் அளவிற்கு கல்வியின் பாதை விரிவாக்கப்பட்டு 1972 கல்விச் சீர்திருத்தம், 1997 கல்வி சீர்திருத்தம் என்று பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு 1939 கல்விச்சட்டமே இப்பொழுது நடைமுறையில் உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இலங்கைக்கல்வியானது பலவகையில் நவீன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு காணப்படுகின்றது. மாணவர்களின் கல்வியை வலுப்படுத்த 5E முறை, KASP முறை போன்றன அவர்களுடைய எண்ணங்கள்,புதிய ஆற்றல்களை தூண்டும் வகையில் அமையப்பெற உருவாக்கப்பட்டவையாகும்.

1997ம் ஆண்டு கல்வித் திருத்தத்தில் தொடர்பாடல் பற்றிய கற்கை கொண்டு வரப்பட்டபோதிலும் அன்று கவனஈர்ப்பு இருக்கவில்லை. ஆனால் 2013இல் தொழிநுட்பக்கற்கை பிரிவு மிக முக்கிய பிரிவாக கொண்டுவரப்பட்டு இன்று பாரிய வளர்ச்சியை கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1997ம் ஆண்டு கல்வித் திருத்தத்தில் தொடர்பாடல் பற்றிய கற்கை கொண்டு வரப்பட்டபோதிலும் அன்று கவனஈர்ப்பு இருக்கவில்லை. ஆனால் 2013இல் தொழிநுட்பக்கற்கை பிரிவு மிக முக்கிய பிரிவாக கொண்டுவரப்பட்டு இன்று பாரிய வளர்ச்சியை கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்றி அனைவருக்கும் கணினி கல்வி வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1983இன் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் கணினி வள நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டும் அதன் அறிவுபெரிதும் இன்மையால் கவனயீனமாக விட்டுவிடப்பட்டது. இன்று இந்நிலை மாறி இணையத்தையும் கணினி பற்றிய அறிவு இல்லாதவர்கள் மிக  சொற்ப எண்ணிக்கையே என்று கூறும் அளவிற்கு மாறியுள்ளது.



மேலும் இன்று 1-13 வரை அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்ற சட்டம் அமுலில் உள்ள நிலையும் பொதுச்சாதாரண பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்குரிய 26 தொழிற்பாடத்தில் தொடர்பாடல் முக்கியப்படுத்தப்பட்டுள்ளமையும் வளர்ச்சியின் போக்கே. அது மட்டுமன்றி பிரயோக கற்கை நெறியும் அவசிய நிலைமை பெற்றுள்ளது. இக்கற்கை மூலம் KASP சான்றிதழும் ADVANCED CERTIFICATE IN VOCATIONAL EDUCATION எனும் தரச்சான்றிதழும் வழங்கப்படுகின்றது


மேலும் இலத்திரனியல் மயமாக்கப்பட்ட கல்வியில் சுவிஸ்லாந்து போன்று அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இலத்திரனியல்இல் செயற்டபடுத்தப்படுகின்ற நிலை இலங்கையில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. உதாரணமாக திறந்த பல்கலைகழகங்களில் தொலைக்கல்வி (online education or virtual learning) காணப்படுகின்றது அத்துடன் பல்கலைகழக நுழைவுக்கான விண்ணப்பபடிவங்கள் அனைத்தும் இலத்திரனியல் மயமாக்கப்பட்டமையும் கல்வி நவீனத்துவத்தை சான்று பகிர்கின்றது.

இது தவிர smart classes அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அந்தவகையில் கண்டி, முல்லைத்தீவு போன்ற பல இடங்களில் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கான வயடி கொடுக்கும் திட்டம் சில பிரகேசங்களில் நடந்தேறிய நிலை இலங்கைக்கல்வியின்  வளர்ச்சியினை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.


எதிர்காலத்தில் இலங்கைக் கல்வி முற்றுமுழுதாக E-EDUCATION ஆக மாறிவிடும். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையே.தொழிநுட்பரீதியான நவீன போக்கில் அமெரிக்கா,சுவிட்சலாந்து,சிங்கப்பூர் போன்ற நாடுகள் பல ஆண்டு முன்னிலை வகிக்கின்றது என்பதோடு இலங்கை பல ஆண்டு பின்னிலையில் உள்ளது என்பது கவலைக்கிடமே.ஆனால் எதிர்காலத்தில் துரித வளர்ச்சி ஏற்படுவதற்கான தடங்கல் உருவாகி வருவதை எம்மால் உணர முடிகின்றது.



THANK YOU

NOTES BY ANBU

 

 

Post a Comment

0 Comments

close