Breaking News

கல்வித் தத்துவவியலாளர்கள்

பிளேட்டோ (கி.மூ 427 - 347) இலட்சியவாதம்



கல்வியின் மூலம் பூரண ஒழுக்கம் நிறைந்த நபர்களை உருவாக்குதல் வேண்டும் அதனூடாக இலட்சியவாத நபர்களை கொண்ட சமூகம் ஒன்றை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும்.

ஆழ்ந்த சிந்தனை ஆற்றலை வளர்ப்பதற்கு கலைத்திட்டம் ஒன்றே முன்மொழிதல் ஆரம்பக்கல்வி இசை உடற்கல்வி
இடைநிலைக்கல்வி விஞ்ஞானம் கணிதம் தர்க்க சாஸ்திரம்

ஒரு பிள்ளையை 55 வருடங்களுக்கு கல்விமுறையில் சம்பந்தப்படுத்தல்.

முறைசார்ந்த கல்வியானது ஆறு வயதில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

சிந்தனை ஆற்றலை வளர்க்க கூடிய கற்பித்தல் முறைகளை முன்வைத்தல்.

விளையாட்டு முறை,இசை ,கதை கூறல் முறை, நடித்தல்.

கல்வி மட்டங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடாத்துதல்.

பொதுவான கற்பித்தலின் மீது அதிக கவனம் செலுத்துதல்.

பிளேட்டோவின் கல்வித் தத்துவம் பிற்கால செல்வாக்கு

1.வாழ்நாள் கல்வி.
2.பிள்ளை மையக் கல்வி.
3.விழுமியக் கல்வி.
4.குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிரஜைகள் கல்வியில் தாக்கம்.
5.ஆண் பெண் இரு பாலருக்கும் சமமான கல்வி.
6.கல்வியானது அரச நிர்வாகத்தின் கீழ் வழங்கப்படல்.

ஜுன் ஜெக் ரூசோ ( 1972 - 1778 ) இயற்கைவாதம்



*இயற்கைக்கேற்ப பிள்ளை வளர வேண்டும்.

*பிள்ளையை பிள்ளையாக கருதுதல்.

*கல்வியானது ஐந்து கட்டங்களைக் கொண்டது
1. குழந்தைப் பருவம் - பிறப்பிலிருந்து இரண்டு வயது வரை
2. பிள்ளைப் பருவம் - 2 வயதிலிருந்து 12 வயது வரை
3. முன் கட்டிளமைப் பருவம் - 12 வயதிலிருந்து 15 வயது வரை
4. கட்டிளமைப்இளமைப்பருவம் - 15 வயதிலிருந்து 19 வயது வரை
5. வயது வந்தோர் - 20 வயதிற்கு மேற்பட்டோர்

*பிள்ளை மையக் கல்வி.

*ஆசிரியரின் மாத்திரம் தங்கி பல்வேறு ஊடகங்களை பயன்படுத்தி கற்பித்தல் ( அவதானிப்பு, தேடல் ,சுற்றுலா )

*மாணவரின் விருப்பங்கள் ஆற்றல்கள் மீது கவனம் செலுத்தி பாடத்திட்டத்தை தயாரித்தல்.

*தேர்ச்சி மையக்கற்பித்தல்.

*தண்டனை முறையை தடை செய்தல்.

*தனியாள் கற்பித்தல் முறையில் அதிக கவனம் செலுத்துதல்.

கார்ல் மாக்ஸ் ( 1818 - 1883 ) மாக்சியக் கல்வி

*கல்வியானது அரசினால் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

*கல்வியில் சமய செல்வாக்கை நீக்குதல் வேண்டும்.

*கல்வியானது கட்டாயமாக்கப்படல் வேண்டும்.

*கல்வி வர்க்க பேதமின்றி வழங்கப்படல் வேண்டும்.

*கற்றல் ஒருங்கிணைந்ததாக இருத்தல் வேண்டும்.
9 - 12 வயது நாளொன்றுக்கு 2 மணி நேரம் வேலை செய்தல்
13 -14 வயது நாளொன்றுக்கு 4 மணி நேரம் வேலை செய்தல்
14 - 17 வயது நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் வேலை செய்தல்

*கல்வியின் மூலம் முழுமையான விருத்தி பெற்ற மனிதனை உருவாக்குதல்.

*கல்வியில் சமவாய்ப்பை வழங்குதல்.

*கட்டாய கல்வி

*கல்வி வாய்ப்புகளை தேசிய உற்பத்தியோடு தொடர்பு படுத்துதல்.

மகாத்மா காந்தி



* கல்வியானது மூன்று பிரதான அடிப்படைகளைக் கொண்டது.
1. உடற்சார்பயிற்சி
2. நுண்மதிப்பயிற்சி
3. ஆத்மீகப்பயிற்சி

*காந்தியடிகளின் தத்துவத்தின் நோக்கங்கள் 5 ஆகும்
1. ஆரம்பக் கல்வி அனைவருக்கும் கட்டாயமானது ஆகும்.
2. கல்வியானது கைத்தொழில் துறை நோக்கி ஒழுங்கமைக்கப்படுதல்.
3. கல்வியின் மூலம் சுய கட்டுப்பாடும் சுய ஒழுக்கமும் வளர்தல்.
4. கல்வியானது தாய்மொழியில் வழங்கப்படுதல்.
5. கல்வியானது பலவந்தமாகத் திணிக்கப்படுதலாகாது.

 Thank you
Notes by Anbu✌️✌️✌️

Post a Comment

0 Comments

close