* மனித உரிமை என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானதாகும் நிறம், இனம், சாதி, பால் சமூக வேறுபாட்டை கருத்திற் கொள்ளாது அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படல் வேண்டும்.
* மனித உரிமைகள் சர்வதேச சமூகத்தினால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
*மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலகப் பிரகடனம் ஐ.நா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
*அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனமானது சில அடிப்படைகளைக் கொண்டது.
1. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
2. சர்வதேச பொருளாதார சமூக கலாசாரத்திற்கான உடன்படிக்கைகள்
*சர்வதே சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் ஐந்து பிரதான பகுதிகள்
1.சிவில் உரிமைகள்
2. அரசியல் உரிமைகள்
3. பொருளாதார உரிமைகள்
4. சமூக உரிமைகள்
5. பண்பாட்டு உரிமைகள்
*சிறுவர் உரிமைகளும் கல்வியும்
பிள்ளைகளின் உடல் உள மற்றும் சமூக ரீதியான வளர்ச்சிக்கான உரிமைகள் அடங்கிய ஐக்கிய நாடுகளின் பிரகடனம் ஒன்று அமுலில் உள்ளது.
*சிறுவர் உரிமைகளுக்கான அனைத்துலக பிரகடனம் சிறுவர் சமவாயம் எனும் பெயரால் அழைக்கப்படும்.
*இதற்கமைய 18 வருட வயதிற்கும் குறைவான அனைவரும் சிறுவர் ஆவர்.
*54 உறுப்புரிமை கொண்ட மேற்படி சமவாயத்தில் பிள்ளைகளின் உரிமைகள் தொடர்பான அனைத்துலக பிரகடனமானது 1989ஆம் ஆண்டு ஐ.நா சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
*இதற்கு விரைவான மக்கள் அங்கீகாரமும் கிடைக்கபட்டது.
உதாரணம் 1993 மே மாதம் 18 ஆம் திகதி ஆகும் போது 159 நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன.
*மேற்படி சமவாயத்தின் மூலம் பிள்ளைகளின் சிவில் உரிமையும் சுதந்திரமும், குடும்பச் சூழலும் மற்றும் பிள்ளை பாதுகாப்பும், அடிப்படை சுகாதார மற்றும் நலன்புரி நடவடிக்கைகள், கல்வி, பிள்ளைகளுக்கான விசேட பாதுகாப்பு போன்ற துறைகள் தொடர்பில் பொது அடிப்படைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
* சிறுவர் சமவாயத்தின் 28 வது உறுப்புரை " கல்வியை பெறுவதற்கு அனைத்து பிள்ளைகளுக்கும் உரிமை உள்ளது குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வியே கட்டாயமாக்குவதுடன் அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் " என குறிப்பிடுகின்றது.
28 வது உறுப்புரைக்கமைய கல்வியைப் பெறுவதற்கான அடிப்படை உரிமையை பாதுகாப்பதற்காக செய்யவண்டியவை.
1. ஆரம்ப கல்வியை கட்டாயமாக்குவதும் அதனை எல்லோருக்கும் இலவசமாக வழங்குதலும்.
2. பல்வேறு வழிகளிலும் இடைநிலை கல்வியை பெற்றுக்கொள்வதற்கு வலியுறுத்தல்.
3. கல்வி மற்றும் தொழில் தொடர்பான தகவல்களை சகல பிள்ளைகளும் பெற்றுக் கொள்வதற்கும் அதற்கான அனுமதியை பெறுவதற்கும் வழிவகுத்தல்.
4. பாடசாலையில் முறையாக வந்து கற்பதற்கும் இடைவிலகலை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல்.
பிள்ளைகளின் கல்வி உரிமைகளை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்
1. கல்வியில் சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்தல்.
உதாரணம் கட்டாயக் கல்வி
2. பொதுக் கலைத்திட்டம் ஒன்றை உருவாக்கல்.
3. புலமைப்பரிசில் முறை
4. பாடசாலைகளுக்கு இடையிலான வேறுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுத்தல்.
5. இலவச பாடநூல்களை வழங்குதல்.
மேற்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்த போதிலும் கல்வியை வழங்குதல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மேற்படி விடயங்களை முறையாக அமல்படுத்துவதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
Thank you
Notes by Anbu🙏🙏🙏


0 Comments
THANK YOU COMMIN US