கல்வி என்பது தத்துவவியலாளர்களாலும் கல்வியலாளர்களாலும் பல்வேறுபட்ட வகையில் வரைவிலக்கணம் படுத்தப்பட்டுள்ள ஓர் எண்ணக் கருவாகும் அந்த வகையில் கல்வி என்பதே பழக்கப்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல கல்வி தொடர்பாகப் பின்வரும் வரைவிலக்கணங்கள் கவனம் செலுத்துக
1. எந்த ஒரு சந்ததியினரும் பின்பற்றுவதற்தாக அல்லது முன்னேற்றுவதற்காக நமது இளைய சந்ததியினருக்கு கலாசாரத்தை ஒப்படைத்தலே கல்வியாகும்.
ஜோன் ஸ்டூவர்ட் மில்
2. நுண்மதி, மனவெழுச்சிகள் மற்றும் உடல் உள ரீதியில் முன்னேறியுள்ள மனிதன் மேற்கொள்ளும் சதாகாலச் செயற்பாடே கல்வியாகும்.
ஹேர்மன் ஹொன்
3. தான் வாழும் சமூகத்தில் தனக்கு கிடைக்க வேண்டிய இடத்தை பெற்றுக் கொள்வதற்காக உரிய அனுபவங்களை வழங்குவதே கல்வியாகும்.
ஈ.சீ மூவர்
4. கல்விக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை கட்டியெழுப்புவதே கல்வியாகும். சிலருக்கு அது தத்துவமாகும் வேறு சிலருக்கு அது அறிவை கையாளும் ஊடகமாகும்.எவ்வாறாயினும் கல்வி என்பது முன்னேற்றமான கலையாகும்.
லெஸ்டர் ஸ்மித்
5. பிள்ளைக்கு தனது சூழலில் வாழ்வதற்குத் தேவையான அனுபவங்களை வழங்குதல் கல்வியாகும்.
ஜோன் டூயி
6. யுத்தத்திலும், சமாதானத்திலும் தனித்தும், பொதுவாகவும் அனைத்து செயல்களையும் நீதியாகவும், முன்மாதிரியுடனும் நிறைவேற்றக்கூடிய மனிதனை உருவாக்குவதே கல்வியாகும்.
ஜோன் மில்டன்
7. கல்வி என்பது அனுபவங்கள் பற்றிய தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற புதுப்பித்தல் ஆகும். கல்விச் செயல் ஒழுங்கின் இலக்கும் அதுவேயாகும்.
A mentor
8. சிறுபராயத்தில் இயற்கையில் வளரும் பிள்ளைக்கு நல்ல பயிற்சியும் பழக்க வழக்கங்களையும் வழங்கி அபிவிருத்தி செய்தல் கல்வியாகும்.
பவ்லோ பிரேயர்
9. கல்வி என்பது அழுத்தங்களின்றும் விடுபட்ட இயற்கையான வளர்ச்சி ஆகும்.
ரூஸோ
10. கல்வி என்பது பிள்ளையில் உயர் மானிட பண்புகளை பயிற்று விப்பதற்கான திட்டமிட்ட முயற்சி ஆகும்
ஆர்.எஸ்.பீட்டர்ஸ்
11. வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் வழங்கும் வண்ணம் நுண்மதி வளர்ச்சியை ஏற்படுத்தலும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதலுமே கல்வியாகும்.
பிரான்சிஸ் பேகன்
12. கல்வி என்பது அறிவு திறன் மனப்பாங்கு நபரொருவர் பெற்றுக்கொள்ளும் நிலையானதும் தொடர்ச்சியான ஆனதும் நடத்தை மாற்றமாகும்.
13. கல்வி என்பது ஒரு சந்ததியினர் தமது கலாச்சாரத்தை இன்னொரு சந்ததியினருக்கு கையளித்லாகும்.
14. கல்வி என்பது வாழ்க்கை முறையே தவிர எதிர்கால வாழ்க்கைக்கு தயார்படுத்துதலன்று
கல்வி என்பது அனுபவங்களை ஒழுங்கமைப்பதும் மீள ஒழுங்கமைப்பதாகும் ஆகும்.
ரூஸோ
15. கல்வி என்பது வாழ்க்கையாகும் மாறாக எதிர்கால வாழ்க்கைக்கு தயார்படுத்துதலன்று.
கல்வி என்பது அனுபவங்களை ஒழுங்கமைத்தலும் மறுசீரமைத்தலும் ஆகும்
ஜோன் டூயி
16. கல்வி என்பது நபர் ஒருவரின் தலை,உள்ளம், கை போன்றவற்றில் உள்ள திறன்களை அறிந்து கொண்டு அவற்றை முழுமையாக விருத்தி அடைய செய்தலாகும்
மகாத்மா காந்தி
Thank you
Notes by Anbu✌️✌️✌️

0 Comments
THANK YOU COMMIN US