சமூகமயமாக்கலின் கருவிகள் பற்றிய அறிமுகம்……
குழந்தை ஒன்றினை சமூகத்துக்கு உரித்தான வளர்ந்த ஒருவராக்குவதற்கும் அக்குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய இஏற்றுக்கொள்ளக்கூடிய இதண்டனை வழங்கக்கூடிய சகல சமூகக் குழுக்களும் சமூகமயமாக்கல் கருவிகள் எனப்படும்.
குடும்பம்
சம வயது குழவினர்
பாடசாலை
சமய பண்பாட்டு நிறுவனங்கள்
இளைஞர் கழகங்கள்
தனியார் வகுப்புகள்
தொழிற் குழக்கள்
தொடர்புச் சாதன ஊடகங்கள்
அரசியல் குழக்கள்
அனர்த்தங்கள்/இடப்பெயர்வுகள்
தனியாரை சமூகமயப்படுத்துவது தொடர்பாக பாடசாலை பொறுப்புகளை நிறைவேற்றுவார்…
சமூகமயமாக்கலில் பாடசாலையின் பங்கு
ஒவ்வொரு மனிதனதும் இரண்டாவது இல்லமே பாடசாலைகளாகும். வீட்டில் உலாவித் திரிந்த, தன் பெற்றோரின் கரங்களைப் பற்றிக் கொண்டிருந்த மனிதன் மாணவன் என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டு பாடசாலை என்ற அறைகளுக்குள்ளே, ஆசிரியர் என்ற புதிய தாய், தந்தையின் கரங்களைப் பற்றிக் கொள்கிறான் என்பதுவே ஒரு புதுமையான நிலைமாற்றம் எனலாம். ஆசிரியருடன் இணைந்த வாழ்வியலுடன் தொடர்பு பட்ட மனிதனின் வாழ்வு சீர்மியம் நிறைந்தே காணப்படுவதும், சமூகமயமான போக்கைக் கொண்டிருப்பதும் இயல்பாகும்.
பாடசாலை ஒரு பரந்த பணியைச் செய்யும் நிறுவனமாகும். அங்கே கலைத் திட்டம் , இணைக் கலைத் திட்டம், மறைக் கலைத் திட்டம எனப் பல்வேறு நடவடிக்கைகளும் நடந்து வருவதைக் காணலாம். கலைத் திட்டம் தவிர ஏனையவை மாணவனின் சமூகமயமாதல் பற்றிய செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டங்களாகும்.
மாணவனுக்கு வாழ்வதற்கான வழியை இணை, மறை கலைத் திட்டமே சொல்லிக் கொடுக்கின்றன. எல்லா செயற்பாடுகளுக்கும் ஆசிரியர்களே பொறுப்பாக உள்ளனர். ஒவ்வொரு மாணவனும் அவன் வாழும் சமூகத்தை வழி நடாத்தும் அறிவுப் பலமும், நடத்தைப் பலமும் கொண்ட பூரண ஆளுமைகளாகப் பாடசாலையை விட்டு வெளியேறியவெளியே வர வேண்டும் என்ற முனைப்புடன் பயிற்றுவிக்கப்படுகிறான்.
ஒரு மனிதனை சமூகமயமாக்குவதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பானது மிக முக்கியமானதாகும்.அந்த வகையிலே பாடசாலையில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வியல் செயற்பாடுகள் அவனது வாழ்வை சீர்மையடையச் செய்கின்றது.
பாடசாலையின் பிரதான பணி கல்வியை வழங்குவதாயினும், பாடாலைகள் கல்வியின் மூலம் சமூகப் பயிற்சியை ஏற்படுத்துவதற்கு முயல்கிறது எனலாம்.
இதனையே டர்கயிம் என்பவர் “கல்வி நிறுவனமொன்றின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டியது எதிர்காலப் பொறுப்புகளை ஏற்கக் கூடிய விதத்தில் சிறுவர்களை சமூகமயமாக்குவதாகும்” எனக் கூறினார்.
பாடசாலை கல்வி பெறும் ஒரு நிலையம் மட்டுமன்றி சமூகத்தின் ஒரு சிறு மாதிரி உருவம் என்பது ஜோன் டூவியின் அபிப்பிராயமாகும்.
இன்றைய கல்வி முறை வெறுமனே அறிவை மாத்திரம் பெறுகின்ற மரபு ரீதியான பழைய கல்வி முறைமைக்கு முற்றிலும் மாற்றமானது.
நவீன கல்வித் தத்துவங்களில் மிகப் பிரதானமாக வாழக் கற்றல், மற்றவர்களோடு சேர்ந்து வாழக் கற்றல் என்பன முக்கியமாக இடம் பெறுகின்றன.
அந்தவகையில் கல்விக்கு வரைவிலக்கணம் கூறும் நவீன சமூகவியலாளர்கள் 'வாழ்க்கையே கல்வி, மனிதப் பண்பு வளர்ச்சியே கல்வி' என்கின்றனர் மேலும் இதற்கான பயிற்சி பாடசாலைகளில் வழங்கப்படுகிறது.
சமூக நன்மை கருதி செயல்படும் சிறந்த ஆளுமையை தனியாட்களிடம் உருவாக்குவதற்கு பாடசாலை முக்கியமான சில கடமைகளை நிறைவேற்றுகிறது.
பாடசாலை கலைத்திட்டத்தில் சமூக செயற்பாடுகளுக்கான பயிற்சியும் வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் பாடசாலையில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டி, கல்விச் சுற்றுலா முறை, குழுமுறைக் கற்பித்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் சமூகத்தோடு பரஸ்பரம் தொடர்வு ஏற்படுத்திக் கொள்ளவும் குழுக்களாகச் செயற்படவும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.மூலமே வழங்கப்படுகிறது எனலாம்.
கலைத்திட்டம்
கலைத்திட்டம் என்னும் ஆங்கிலத்தில் curriculum என்றும் அழைக்கப்படும் சொல்லானது carrere எனும் இலத்தீன் மொழிச் சொல்லிருந்து பெறப்பட்டாதாகும் , ஓட்டம் என்று பொருள்படும் அதாவது கலைத்திட்டம் என்பது இலக்கை அடைவதற்கான ஓட்டப்பாதை என்று பொருள்கொள்ளப்படுகின்றது. கலைத்திட்டம் தொடர்பாக அது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட நிபுணர்கள் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்களின் ஊடாக அதனை விளக்க முற்பட்டனர். அவற்றுள் எலிசபெத் (1965) என்பவரின் கூற்றுப்படி கலைத்திட்டம் என்பது கற்பிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாடவிடயங்களின் அளவு எனவும் குரோவும் குரோவும் என்போர் கலைத்திட்டம் கற்பவர்களின் அனைத்து அனுபவங்களையும் உள்ளடக்கியதாகும். பாடசாலையின் உள்ளே அல்லது வெளியெ பெற்றுக்கொள்ளப்படும் அனைத்து அனுபவங்களும் அதனுள் அடங்கும் மாணவர்களை உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் மனவெழுச்சி ரீதியாகவும் சமூகரீதியாகவும் ஒழுக்கரீதியாகவும் அறரீதியாகவும் விருத்தி செய்வதில் கலைத்திட்டம் பெரும் பங்கு வகிக்கின்றது.
கலைத்திட்டம்
ஒரு கலைஞன் தனது கையிலுள்ள பொருட்களை தனது கலைக்கூடத்தில் தனது எதிர்பார்ப்பிற்கு ஏற்றவகையில் உருவாக்கி எடுப்பதற்கான ஒரு கருவியே கலைத்திட்டம் ஆகும்.
இந்தவகையில் மாணவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக வெளியேற்றுவதில் பாடசாலைக் கலைத்திட்டம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
கற்பித்தல் என்பது வகுப்பறை மட்டத்திலும் சமூகமட்டத்திலும் ஏற்படுத்தும் மாற்றம் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும் அரசியல், சமூகப் பொருளாதார ரீதியில் விருத்திப்பாதைக்கு இட்டுச் செல்வதோடு தேசத்திற்கும், நாட்டிற்கும் பொருத்தப்பாடுடைய கல்வியையும் வழங்குதல் வேண்டும்.
அந்தவகையில் ஒரு நிறுவனம் தனதுசெயற்பாடுகளை கட்டுறுதியுடனும் வடிவமைத்துக் கொள்வதற்கு கலைத்திட்டத்தில், இணைக்கலைத்திட்டம், மறைக்கலைத்திட்டம், மையக்கலைத்திட்டம் என்பவற்றை முறையாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு தனது முகாமைத்துவப் பண்புகளை சரியாக நிதானமாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்திலிருந்து நேரடியாக பாடசாலைக்குச் செல்லும் பிள்ளையை சமூகமயமாக்கல் செயற்பாட்டில் ஈடுபடுத்தும் செயற்பாடுகளாக பாடசாலை இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொழிற்படுகின்றன.
இன்றைய பாடசாலைச் செயற்பாடுகளை எடுத்து நோக்கின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைப் போன்றே இணைப்பாடச் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
கலைத்திட்டம் நிகழும் விதம்
கலைத்திட்டமானது குறிப்பிட்ட இலட்சணங்களை கொண்டிருத்தல் வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அவற்றுள் சில கீழ்வருமாறு…
கல்வியின் அடிப்படை குறிக்கோள்களை அடையக்கூடியது.
மாணவர்களின் சகல செயற்பாடுகளையும் உள்ளடக்கிய ஓர் முழுமையான செயற்பாடாகக்கூடியது.
இளம் தலைமுறையின் எதிர்கால நிலைப்புக்குத் தேவையான அனுபவங்களை வழங்குவதாக அமைதல்.
ஒவ்வொரு தனியாளினதும் முழுமையான சமூகத்தினதும் தேவைகளை பிரதிபலிப்பதாக அமைதல்.
கல்வியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து ,இற்றைப்படுத்தப்படுதல்.
பாடசாலையின் உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் கற்றலுடன் தொடர்புபட்டு காணப்படுதல்.
மாணவர்களது சமநிலைமிக்க ஆளுமைக்கு உதவக்கூடியதாக ,இருத்தல்.
தொடர்ச்சியான ,இயங்குதன்மை கொண்டதாக காணப்படுதல்.
மாணவர்கள், பாடசாலை, பிரதேசங்களை கவனத்தில் கொண்டு பரந்த நோக்கங்களை அடையக்கூடியவகையில் அமைந்திருத்தல்.
நடைமுறையிலுள்ள கல்வி முறைமையின் முழுமையாக பாடமாக கலைத்திட்டம் காணப்படல் வேண்டும்.
இவ்வாறான அம்சங்களை கொண்டுள்ள கலைத்திட்டம் பூரண கலைத்திட்டமாகும்.
முறைசார் கலைத்திட்டம்
கல்வி அமைச்சின் விதந்துரைகளுக்கு அமைவாக பாடசாலையில் நடைமுறைப்படும் கலைத்திட்டமாகும். பாடசாலைக்கல்வியினூடாக வழங்க வேண்டிய அறிவுத்தொகுதி, திறன்கள், உளப்பாங்குகள் உள்ளடங்கிய சகல கல்விச்செயற்பாடுகளின் தொகுதியாக ,இது அமைந்திருக்கும்.
முறையில் கலைத்திட்டம்
பூரணமனிதனை உருவாக்குவதற்கு உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் இணைத்ததே ,இவ் கலைத்திட்டமாகும்.
இணைக்கலைத்திட்டம்
பாடத்திட்டத்துடன் சேராத பாடசலையினால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் யாவும் ,இதனுள் அடங்கும் விளையாட்டுக்கள், போட்டிகள், கழகங்கள், சங்கங்கள், சாரணீயம், கல்விச்சுற்றுலாக்கள், கண்காட்சி, முதலுதவிக் குழுக்கள், நாடகங்கள், மாணவர் படையணி சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
கலைத்திட்ட மாதிரிகள்…
கலைத்திட்டம் ஒன்றிற்கு முன்திட்டமிடல் கலைத்திட்ட மாதிரிகை எனப்படும். இவ்வாறான கலைத்திட்ட மாதிரிகைகளில் 3 வகையான மாதிரிகைகள் அதிகளவு முக்கியத்துவமுடையவையாகும். அவை
குறிக்கோள் மாதிரிகைகள்
வட்டத்தன்மை கொண்ட மாதிரிகைகள்
இயங்கு தன்மை கொண்ட மாதிரிகைகள்
குறிக்கோள் மாதிரிகைகள்
குறிக்கோளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட மாதிரிகைகளே குறிக்கோள் மாதிரிகை எனப்படும். இவ்மாதிரிகையில் பின்வோர் கலைத்திட்டங்களை இயற்றி உள்ளனர்.அவர்கள் னு.று ரல்ப் ரைவர், ஹில்டா டாப்பா, கேர், டெனிஸ் லோட்டன் என்போராகும்.
வட்டத்தன்மை கொண்ட மாதிரிகைகள்
கலைத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு கூறுகளும் பிரிக்கமுடியாதவாறு ஒன்றிலொன்று தங்கியிருப்பதை வெளிப்படுத்திக் காட்டுகின்ற மாதிரிகைகள் வட்டத்தன்மை கலைத்திட்டம் மாதிரிகைகளாகும். அவ்வகை மாதிரிகைகள் குறிக்கோள் மாதிரிகையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய உருவாக்கப்பட்டது. வட்டத்தனை;மை மாதிரிகைகள் வீலரின் மாதிரிகை மற்றும் நிக்கலஸின் மாதிரிகைகள் முக்கியத்துவமிக்கவையாகும்.
இயங்கு தன்மை கொண்ட மாதிரிகை
இவை சுதந்திரமானலும் வித்தியாசமானதும் ஆன முன்னைய இரு கலைத்திட்ட மாத்திரிகைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மாதிரிகையாகும்.
கலைத்திட்டத்தின் நன்மைகள்
சமூக பாதுகாப்பும் மேம்பாடும் ஏற்படுத்தப்படுகிறது.
அறிவு விருத்தி.
நாளாந்த வாழ்வின் பிரச்சனைகள் பற்றிய அறிவு.
ஒழுக்க விழுமிய விருத்தி.
தேசிய கலாச்சாரம் தொடர்பான அறிவும் தெளிவும்.
வாழ்க்கைத்திறன் சமூக பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவு.
கலைத்திட்டத்தின் பலவீனங்கள்
நேரமுகாமை இன்மை
மேற்பார்வைப் குறைப்பாடு
ஊக்குவிப்பு இன்மை
தொடர்ச்சியான கணிப்பீடு, மதிப்பீடு இன்மை
சமவாய்ப்புக்கள் வழங்கப்படாமை
கலைத்திட்டத்தின் பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்பங்கள்
இருக்கின்ற வளங்களை எவ்வாறு பிரச்சினை இன்றி நியாயமான முறையில் சகலருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் உச்சப்பயன் கிடைக்கும் வகையில் பகிர்ந்த கொள்ளுதல்.
அதற்கு முறையான திட்டங்களை வகுத்தல் அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தல். அவதானித்தல், மேற்பார்வை செய்தல், பதிவுகளைப் பேணுதல், கண்காணித்தல், பரிகார நடவடிக்கைகளை முன்னெடுத்தல், பிரதிபலிப்புக் கையெடு ஒன்றைப் பேணல், இவற்றை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்குரிய ஊக்குவிப்புக்களை முன்வைத்தல் முன்னெடுத்தல்.
மேற்பார்வை திட்டங்களை முறையாக முன்னெடுத்தல்.
முறையான பயிற்சித்திட்டங்களை முன்னெடுத்தல்;.
நேரமுகாமையை சீர்செய்வதற்குரிய மாற்றுவழி முறைகளைக் கண்டறிதல் முன்மாதிரிகையான செயல்திட்டங்களை அல்லது நமது நாட்டுக்கு ஏற்ற திட்டங்களை வடிவமைத்தல்.
இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் சமூகமயமாக்கல்
இணைபாடச்செயற்பாடு என்ற வரையறைக்குள் பாடசாலைக்கலைத்திட்டத்தில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைத் தவிர்ந்த அனைத்துச் செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றது. அதாவது இல்ல விளையாட்டுப்போட்டி, கோட்ட, வலய, மாகாண, தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி, தமிழ்த்தினப்போட்டிகள், ஆங்கில, விஞ்ஞான, கணித வினாடிவினாப் போட்டிகள், வாணிவிழா, மீலாத்விழா ,ஒளிவிழா, ஆசிரியர்தினம், பாடசாலைத்தினம், அறிஞர்களின் நினைவுதினம், கல்விச் சுற்றுலா, சாரணர் நிகழ்வுகள், மாணவர் தலைவர் சின்னம் சூட்டும் நிகழ்வுகள், பாடசாலைக் கண்காட்சி கலைவிழா, வெளிக்களச்செயற்பாடுகள் இசை நாடக நடன சித்திர போட்டிகள் என அனைத்துச் செயற்பாடுகளும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் அடங்கும்.
இவ்வாறான இணைப்பாடச் செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் பிள்ளை தானாகவே சமூகமயமாக்கலுக்கு இட்டுச் செல்லப்படுகின்றது.
இல்ல விளையாட்டுப்போட்டி
“விளையாட்டுப் பிள்ளையிடம் நற்பண்புகளை வளர்ப்பதுடன், விட்டுக்கொடுப்பு, வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக் கொள்ளல், தலைமைக்கு கட்டுப்படும் பண்பு விதிகளைக் கடைபிடித்தல், சட்டதிட்டங்களை மீறாமை, உடலைக் கட்டாகப் பேணுதல், வெற்றிக்காகப் போராடும் முயற்சியை வளர்த்தல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன.
இதனால் எதிர்காலத்தில் வாழ்க்கையில் வரும் தோல்விகளை தாங்கிக் கொள்வதற்கும், தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் மேலும் குற்றச் செயல்களான கொலை, மதுப்பாவனை போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதற்கும் விளையாட்டுச் செயற்பாடுகள் உதவுகின்றன.
கோட்ட, வலய, மாகாண, தேசிய ரீதியில் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடும் போது “கிணற்றுத் தவளையாக இல்லாமல்” சமூக விழிப்பு ஏற்பட்டு சமூகமயமாக்கல் தோற்றம் பெறுகின்றது அத்துடன் பிறரின் திறமைகளுடன் ஒப்பிடும்; போது “தான் எந்த நிலையில் உள்ளேன் என்பதையும்” இன்னும் எவற்றை வளர்க்க வேண்டும் என்றும் அறிவதுடன் மத, இன, சாதி, பேதங்களை மதிக்கும் தன்மையும், நட்புறவுடன் செயற்படும் ஆற்றலும் வளர்த்தெடுக்கப்படுகின்றது.
பாடசாலைத் தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டி
மாணவர்களின் அறிவு மேம்படுவதுடன், போட்டி போட்டு செயற்படும் விதத்தை அறிந்து கொள்ளல், சமூகத்தில் பிற மாணவர்களுடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு, நட்புறவுகளை வளர்த்துக் கொள்ளல், தோல்வியை ஏற்றுக் கொண்டு வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் பண்பு என சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன.
எதிர்காலத்தில் வாழ்க்கையில் வரும் தோல்விகளை தாங்கிக் கொள்வதற்கும், தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் மேலும் குற்றச் செயல்களான கொலை, மதுப்பாவனை போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதற்கும் விளையாட்டுச் செயற்பாடுகளே உதவுகின்றன.
மாணவர் தலைவர் பதவிகள் மற்றும் பயிற்சிப் பாசறைகள்
தலைமைத்துவப்பண்பு வளர்க்கப்படுவதுடன் வாழ்வில் ஒரு செயலை பொறுப்பெடுத்து சரியாகத் திட்டமிட்டு நடாத்துதல், அதன் போது வரும் முரண்பாடுகளைத் தீர்த்தல், எந்த விடயத்தையும் துணிந்து செய்ய முற்படல், பிறரை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருத்தல், சமூக சேவைகளில் ஈடுபடல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன.
வாணிவிழா, மீலாத்விழா, ஒளிவிழா
மதங்களை மதித்து நடப்பதற்கு இது உறுதுணை புரிகின்றது. மற்றும் சமூகத்தில் இன, மத, ஒற்றுமைக்கும் இது வழி சமைக்கின்றது.
இனக்கலவரங்கள் குறைவடைவதற்கும் இதுவே காரணமாகும்.
சுற்றுலா, களப்பயணம்
பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தும் பொது பல்வேறு சமூக கலாச்சாரங்களை உணரவும், சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைவது எப்படி என அறிந்து கொள்ளவும் முடிகிறது.
குழுச் செயற்பாடுகள போன்றவை மூலம் உளவிருத்தி, தன்னம்பிக்கை தலைமைதாங்கும் பண்பு என்பன வளர்க்கப்பட்டு பின்காலத்தில் சமூகத்தில் செல்லும் பிள்ளைக்கு அவை சமூகத்தில் முன்மாதிரியாக வாழ, சமூகமயமாக்கலுக்கு வித்திடுகின்றது. மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பயந்து பிறருடன் பேசாமல் ஒதுங்கி இருக்கும் பிள்ளை துணிந்து பிறருடன் சகஜமாக பேச முற்படுகின்றது.
இணைப்பாடச் செயற்பாடுகள் மாணவனை சமூக மயமாக்கலுக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பாடசாலை வரவையும் அதிகரித்து கற்றலின் சலிப்புத்தன்மையை குறைக்கின்றது.
இதனால் பிள்ளைக்கு நல்லது எது ?? தீயது எது ?? என பகுத்துத் தெரிந்து கொள்ளும் “அறிவு” வளர்க்கப்படும்.
இவ்வாறே நேரடியாகவும் மறைமுகமாவும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் சமூக மயமாக்கலை ஏற்படுத்துகின்றது.
பாடசாலையில் ஆசிரியர்களும் அதிபரும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இணைப்பாடச் செயற்படுகளுக்கும் அளிப்பதன் மூலம் பிள்ளைகளிடத்தில் சமூக மயமாக்கலை ஏற்படுத்தி சமூகத்தில் நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்கும் தேசிய இலக்கை அடைய முடியும்.
இணைக் கலைத்திட்டம்
தலைமைத்துவ விருத்தி
குழவாக ஒத்திசைந்து செயற்படல்
சமூக விழிப்புணர்வு சமூக சிந்தனை
ஏற்றுக்கொள்ளத்தக்க கலாச்சார விருத்தி
ஜனநாயக முன்மாதிரி
நடைமுறை வாழ்க்கைக்கான அனுபவ விருத்தி
சமய செயற்பாடுகள்
ஒழுக்க நடத்தை விருத்தி
கலாச்சார விழுமியச்சந்தனை விருத்தி
ஏற்றுக்கொள்ளத்தக்க நடத்தை கோலங்கள்
சமூகமயமாக்கலின் பாடசாலை ஒன்றின் பங்களிப்பு
சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சார விருத்தி
அறிவு இ திறன் இ மனப்பாங்கு இ விழுமிய விருத்தி
சிறந்த வாழ்க்கைகுரித்தான பழக்கவழக்கங்களின் விருத்தி
உடல் இ உள சுகாதார விருத்தியும் தேக ஆரோக்கிய விருத்தியும்
குழவாக இயங்குவதற்கான சமூகத்திறன் விருத்தி
தலைமைத்துவ பண்புகளின் விருத்தி
ஆசிரிய முன்மாதிரியை பின்பற்றல்
கலாச்சார பாரம்பரிய பழக்க விருத்தி
தொழில் ஒன்றுக்கான முன்திறன் விருத்தி
பாடசாலை பரந்த சமூகத்தின் உப தொகுதியாக மாறல்
ஆசிரியரின் நடத்தைக் கூறுகள்
நல்ல ஆசிரியர், தன்னுடைய சக்தியின் வாயிலாக நல்ல ஒழுக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும். தேசத்தை வடிவமைப்பவர், வரலாற்றை உருவாக்குபவர், மனிதனை மனிதனாக்குபவர், தேச எல்லைகளைக் கடந்து உலக உணர்வை வளர்ப்பவர், நாகரிகத்தைப் பேணிக்காத்து வரும் தலைமுறைக்கு அளிப்பவர் போன்ற பல்வேறு பணிகளைச் செய்பவர் ஆசிரியர்.
சூழ்நிலையை ஆளுந்திறன்
கற்பனைத்திறன்
ஆளுமைத்திறன்
சுயகட்டுப்பாடு
ஊக்கமுடைமை
சுய ஆய்வு
கூட்டுணர்வு மனப்பான்மை
தன்னொழுக்கம்
உடல்நலம்
சமுதாய உணர்வு
நேர்மை
குழந்தைகளிடம் அன்பு
தலைமைப் பண்பு
பணி மீது ஈடுபாடு
சிறந்த அறிவு
அறிவுத் தாகம்
ஆசிரியர்கள் தங்கள் தொழில்மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டிருப்பதுடன் அர்ப்பணிப்புடனும் ஒத்துழைப்புடனும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஊக்குவிப்புடனும் செயற்படுவர்.
ஆகிய பொருத்தப்பாடுகள் அமையப் பெற்றவராகவும் திறந்த மனம் படைத்தவராகவும், ஆக்கபூர்வமான தகவல் தொடர்பாளராகவும், நன்மை நாடுபவராகவும் அமைதல் வேண்டும். குழந்தைகளை எழுச்சியூட்டி ஆர்வங்களை வளர்த்து உறுதியான எண்ணங்களை தோற்றுவிக்கின்றனர்.
குழந்தைகளுக்குக் கற்றல் வழியாக மகிழ்ச்சியைப் பரப்பி, தன் மனப் புதையல்களை, அறிவுச் செல்வங்களைப் பங்கிட்டுக் கொள்கிறார்.
அறிவைப் புத்தகங்களிலிருந்து பெறலாம்; ஆனால் பிறரை நேசிக்கும் பண்பை நேரிடையான தொடர்பு வழியாக மட்டுமே பெற முடியும். ஆசிரியரைத் தவிர வேறுயாரும் இதற்கு மாற்று கிடையாது.
தனக்குத் தானே அரசனாகவும், மனித சமுதாயத்திற்குப் பணியாளராகவும் சேவகனாகவும் இருப்பவர் ஆசிரியர் ஒருவரே” என்று ஹென்றி வேன் டியூக் கூறியுள்ளார்.
ஆசிரியரின் ஊடாக பாடசாலையில் சமூகமயமாக்கல்
ஆசிரியர் பாடசாலையில் செயற்பாடுகளை மேற்கொள்வதில் சமூகமயமாக்கல் செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
அதாவது ஆசிரியர் மாணவரிடையே நடந்தக்கொள்ளும் விதம் மாணவருக்கு முன்னுதாரணமாக இருந்து மாணவரின் நடத்தைகளை ஒழுங்குபடுத்துவதுடன் அவர்கள் சக மாணவர்களுடன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டம் என்பதை எடுத்துக்கூறுவது ஆசிரியரின் கடமையாகும்.
ஆசரியர்கள் மாணவருடன் தொடர்புகளை ஏற்படுத்த மாணவரின் அறிவினைஅடிப்படையாக கொண்ட சில பொருள் பொதிந்த விளக்கங்களைஉருவாக்கி தாம் கற்பிக்கும் பாடங்களிலும் மாணவரின் உளவியல் மற்றும் சமூக பின்னணிகளிலும் விளக்கமுடையவராகவும் இருத்தல் வேண்டும்.
கற்பித்தலின் மூலம் மாணவர்களது சூழலை விளங்கிக்கொண்டு அதற்கேற்ப செயற்பட ஏதுவாகின்றது. கற்பித்தல் மூலம் மனவெழுச்சிக்கான பயிற்சிகளும் கற்பதற்கான தூண்டுதல்களும் உண்டாவதால் எதிர்கால வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்யப்படுகின்றனர்.
வகுப்பறையிலே ஆசிரியர்கள் செயற்பாடுகள் பற்றிய கோட்பாடுகளை விளக்குதல், போதிய ஊக்குதலை வழங்குதல், கல்வி செயற்பாடுகளை வாழ்க்கை அனுபவங்களுடன் இணைத்தல், மாணவரிடையே காணப்படும்.
தனியாள் வேறுபாடுகளை அறிதல், ஜனநாயக வழிமுறைகளை கற்பித்தல், மாணவரின் ஆக்கத்திறனை மேம்படுத்தல் என்பவற்றின் வாயிலாகவும் சமூகமயமாக்கலுக்கு உதவலாம்.
பாடசாலையொன்றின் ஒழுங்கமைந்த கட்டமைப்பு..
பாடசாலையின் பருமனுக்கேற்ப அதன் கட்டமைப்பு வேறுபடும்
பாடசாலையின் உதவிப் பணியாளர் முறைசார்ந்த நிர்வாக கட்டமைப்பில் அடங்குவார்.
அதிபர் இ பிரதி அதிபர் இ பொறுப்பாசிரியர் இ பாடப்பொறுப்பாசிரியர் இ தரப்பொறுப்பாசிரியர்;;;இ ஏனைய ஆசிரியர்கள் இ மாணவத்தலைவர்கள் இ வகுப்புத்தலைவர்கள் இ ஏனைய மாணவர்கள்இ கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருக்கான பொறுப்புகள் வரையறுக்கபட்டிருக்கும்.
பாடசாலை செயற்பாடுகள் அனைத்திலும் ஒழுங்கமைப்பு காணப்படும்.
சமய அழுவல்கள் தொடர்பான அமைப்புகள் இ பழைய மாணவர்களின் அமைப்பு பாடசாலை அபிவிருத்தி சங்கம் போன்றவற்றின் செயற்பாடுகளும் ஒழுங்கமைபக்கப்பட்ட நியமங்களும் கீழ் முன்னெடுக்கப்படும்.
பாடசாலையில் சமூகமயமாக்கலில் உள்ள குறைபாடுகள்
பாடசாலைகள் சமூகமயமாக்கலை திறன்பட சமூகத்தில் மேற்கொண்டு ஏனைய சமூகமயமாக்கல் காரணிகளால் ஏற்படும் பாதகமான விளைவுகளை குறைக்கிறது எனினும் கல்வி செயற்பாடுகளிலும் சரி இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் சரி குறிப்பிட்ட சில குறைப்பாடுகளை கொண்டதாகவே காணப்படுகின்றன.
.பாடசாலையில் பிள்ளைகள் பெறுகின்ற சமூகமயமாக்கல் ஒரேமாதிரியாக இருப்பதில்லை என்பதுடன் கல்வி நடவடிக்கைகளின் போது சில பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளையும் வெற்றிகளையும் அடையும் பொருட்டு அவர்களை ஊக்குவிக்கின்றனர். அதே வேளை வேறு சிலரை சலிப்படையவும் செய்கின்றன. அதனால் அவர்கள் வலவற்றர்களாகவும் விரக்தியுடையவர்களாகவும் வந்துவிடுகின்றனர்.
கல்வி வழங்கும் செயன்முறையில் கூட மாற்றங்கள் காணப்படுவதால் சமூகமயமாக்கலின் போது ஒரே வகையான சமூகமயமாக்கல் இடப்பெறுவதில்லை.
பல பாடசாலை வகைகள் காணப்பட்ட போதிலும் அவை அனைத்தும் ஒரே தேசிய கலைத்திட்டம் ஒரே மாதிரியான பாட நூல்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி என்பவற்றை கொண்டிருப்பினும் நாடு முழுவதும் பிள்ளைகளுக்கு ஒரே மாதிரியான சமூகமயமாக்கல் முறைகள் நடைபெறுவதில்லை.
பாடசாலை சமூகம் வீட்;டு சமூகத்தை விடவிட சிக்கலானதோடு கூடிய சமூகப்பிரச்சினைகளை மாணவர் இன்று எதிர் கொள்வர்.
பாடசாலைக்குள் காணக்கூடிய நெறிப்பிறழ்தல், பின்னடைதல், கேலிசெய்தல், பேராசைக்கொள்ளல், தனிமைப்படுத்தல் போன்ற பிரச்சினைகள் சிறந்த சமூகமயமாக்கலை ஏற்படுத்துவதற்கு தடையாக அமையும்.
இது போன்ற பல பிரச்சினைகளை பாடசாலையிலும், வெளி சமூகத்திலும் ஆசிரியர்களுக்கு விளங்கிக்கொள்ளவும்; ஏதுக்களை கண்டறிந்து பரிகாரம் செய்யவும் முடியுமானால் அது சிறந்த சமூகமயமாக்கலுக்கு உகந்ததாக அமையும்.
சமூகமயமாக்கலினால் தோன்றும் சமூக பிரச்சனைகள்..
தற்கொலை முயற்ச்சி.
ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடல்.
உதாரணம் - பாலியல் அல்லது போதைப்பொருள் பாவனை
இன வர்க்க முரண்பாடுகள்.
ஆண் பெண் சமூக முறைமைகள் தொடர்பான பிரச்சனை.
கலாச்சார சீர்கேடுகள்.
விளம்பரங்களினூடாக துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாதல்.
முறையற்ற ஆடை அலங்காரங்களில் ஈடுபடல்.
பாதிப்பை ஏற்படுத்தும் நுகர்வு போக்குகளுக்கு பழகுதல்.
ஒரு பிள்ளை ஒழுக்க விழுமியமுள்ள பண்பாட்டு கலாச்சாரத்துடன் வீட்டுச் சூழலில் வளர்க்கப்படுமாயின் பாடசாலையில் ஏற்படும் பண்பாட்டு மாற்றத்தினாலும் சம வயதுக் குழக்களின் அழுத்தங்களினாலும் வழித்தவறிச் செல்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு.
ஆனால் சில சந்தர்பங்களில் சம வயதுக் குழக்களின் அழுத்தங்களுக்கு உள்ளாகி சமூக பிரச்சனைகளை உருவாக்குகின்றனர்.
உதாரணம் - போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை
ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் மேலும் சில காரணிகள்.
தொழில் வாய்பின்மை
இலக்குகளை அடைவதில் தோல்வி
மேல் தேச நாகரீக மோகம்
கலாசாரமாக உருவெடுத்தல்
திட்டமிட்ட விளம்பரங்கள்
வெகுசன ஊடகங்களின் தாக்கம்
பாடசாலை மாணவரிடையே காணப்படும் சமூகமயமாக்கல் குறைபாடுகளை இழிவளவாக்க ஆசிரியர் கையாளக்கூடியவை…
மாணவர் குழுக்களில் பொறுப்புகளை வழங்கல்.
போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்குபற்ற செய்தல்.
செயற்பாடுகளில் ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தல்.
அவர்கள் வெற்றி அடைய நிகழ்ச்சிகள் மற்றும் செயன்முறைகளை உருவாக்கி கொடுத்தல்.
சமூக பிரச்சனைகளை தீர்ப்பதில் பாடசாலை மற்றும் ஆசிரியரின் பொறுப்பு.
வகுப்பறையிலே ஆசிரியர் - மாணவர் இடைவினைகளும், மாணவர் - மாணவர் இடைவினைகளும் ஏற்படும் போதே சமூகமயமாதல் நிகழ்கிறது.
அறிவுசார்ந்த பேச்சு, உணர்ச்சி சார்ந்த பேச்சு, உடல் மொழியும், என இடைவினை ஏற்படும் போது அது பல வகை சமூகமயமாதலுக்கு இட்டுச் செல்கிறது.
ஆசிரிய மாணவ இடைவினைகளுக்கும் சமூக மயமாக்கலுக்குமிடையே நேர்த் தொடர்புகள் காணப்படுகின்றன. இங்கே கூடுதலான இடைவினைக்குட்படும் மாணவன் கூடுதல் சமூக மயமாக்கற் பண்புடையோராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனியாக, தனிப்பட்ட நிலைமைகளின் போது சமூகப் பிரச்சினைகள் மீது, அவங்களின் போது கோபங் கொள்ளும் மனிதர்கள், பொதுமை என்றும், கூட்டாக என்றும் வரும் போது அடங்கிப் போவதும், பேசாமடந்தைகளாக மாறிவிடுவதும் ஒரு வகை சமூகமயமாதலின் குறைபாடாகவே கொள்ள வேண்டியுள்ளது.
ஆசிரியர்களின் சமூக மயமாதல் மீதான அறிகை ஊடுகடத்தல் மீதுள்ள நலிவுற்ற நிலையே இதற்கான காரணமாகும்.
மாணவர்கள் சமூகப் பிரச்சினைகளை விட்டு அந்நியமாதலுக்கு எதிராக பாடசாலைகள் நடந்து கொள்ள வேண்டும்.
அதுவே சமூகமயமாதலுக்கான ஊக்கியாக அமையும். ஆரிசியர்கள் மாணவருக்கான ஆற்றுப் படுத்துனராக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமாகும்.
ஆசிரியர் சமூக இயல்பின் குறியீட்டு வடிவினராக மட்டுமன்றி சமூகத்தின் எதிர் விசைகளுக்கு எதிர் விசை கொடுப்பவராகவும் இருக்கும் பொழுது ' எதிர்ப்பின் எதிர்ப்பு ' ஆக்க வளர்ச்சிக்கான முன்னோக்கிய பாய்ச்சலாக உருவெடுக்கின்றது. இந்தப் பண்புகள் மாணாக்கருக்கு சிறப்பாக பாடசாலைகளூடாக ஊடு கடத்தப்பட வேண்டும்.
ஆசிரயர் மாணவர்களை நாளைய சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்க முகங்கொடுக்கும் வண்ணம் தயார்படுத்த வேண்டும்.
பாடசாலையில் பிள்ளைகள் பெறுகின்ற சமூகமயமாக்கல் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதுடன் கல்வி நடவடிக்கைகளின் போது சில பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளையும் வெற்றிகளையும் அடையும் பொருட்டு அவர்களை ஊக்குவிக்கின்றனர் (தரம் 5 புலமைப்பரிசில்) அதேவேளை வேறு சிலரை சலிப்படையவும் செய்கின்ற. அதனால் அவர்கள் வலவற்றவர்களாகவும் விரக்தியுள்ளவர்களாகவும் வந்துவிடுகின்றனர்.இவ்வாறாக சமூகவியல் நோக்கில் கல்வியை அணுகும்போது கல்வி நடவடிக்கைகளில் பெரும்பாலான இடங்களில் சமூகமயமாக்கல் தன்மை காணப்பட்ட போதிலும் உள்ளார்ந்த ரீதியில் உற்று நோக்கும்போது பாடசாலையில் நடைபெறும் கல்வி நடவடிக்கையானது அனைவருக்கும் ஒரே விதமான சமூகமயமாக்கல் தன்மைகளை வழங்க வேண்டும் ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை. ஒவ்வொரு கல்வி நிலையங்களும் வௌ;வேறு விதமாக கல்வியை வழங்கும்போது வௌ;வேறு விதமான சமூகமயமாக்கள் தன்மைகளே கல்வியின் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதனால் சமூகத்தில் அனைவரும் சமம் என்ற கூற்று என்றுமே வரப்போவதில்லை மாறாக தற்போது காணப்படும் இதே சமூகமயமாக்கல் என்ற தொடர்ச்சியே எதிர்காலத்திலும் காணப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒரு சமூகத்தில் சமூகமயமாக்கலும் மனித வாழ்வும் பல்வேறு பிணைப்பினைக் கொண்டுள்ளது. சமூகமயமாக்கல் மூலமாக மனிதன் சமூகத்தில் வாழ கற்றுக்கொள்கின்றான். அதே நேரம் சமூகத்திலுள்ள சமூக நிறுவனங்களானது மனிதனுக்கு வாழ கற்றுக்கொடுக்கின்றன. அந்தவகையில்
பாடசாலை முக்கிய நிறுவனமாக அமைகின்றது. அத்தோடு பாடசாலைகள் சமூகத்தில் சுதந்திரமாக செயற்பட முடியுமேயானால் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க உறுதுணையாக அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை.சிறந்த ஆசிரியர் - மாணவர் இடைத்தொடர்பின் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம்.
நன்றி……

0 Comments
THANK YOU COMMIN US