Breaking News

ஆரம்ப பாடசாலை ஆசிரியரின் பண்புகள்


  

v  கல்வியானது மனிதவள மேம்பாட்டிற்கும் மனித வாழ்கை முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது

v  ஒரு நாட்டின் வளமான எதிர்காலம் அந்நாட்டில் அளிக்கப்படும் கல்வியிலேயே தங்கியுள்ளது எனவே இக்கல்வியை மாணவர்களுக்கு வழங்குகின்ற ஆசிரியர்களுக்கான சில பண்புகளும் காணப்படுகின்றன

ஆரம்ப பாடசாலை ஆசிரியருக்கான வகிபாகம்

v  சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை வடிவமைத்து முன்னேடுப்பவராகவும் அதனை முகாமை செய்பவராகவும் இருத்தல்.

                 ஆசிரியரானார் கல்வியின் நோக்கங்கள் மற்றும் குறிகோள்களை தெளிவாக விளங்கியிருப்பதுடன் கலைத்திட்ட உள்ளடக்கத்தை தீர்மானிக்க பிள்ளையின் ஆர்வம், தேவை, விருப்பம் எவை மற்றும் கற்றல் கற்பித்தல் தான் கையாள வேண்டிய முறைகள் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க கூடியவராக இருத்தல்.

v  ஆலோசகராகச் செயற்படல்.

                      மாணவர்களுக்கு உடல், அறிவு, மனப்பாங்கு, ஒழுக்க ரீதியான திறன்களை வழங்கவும், சமய பண்புகளைப் பின்பற்றச் செய்வதற்கும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கி அவர்களுக்கு உதவுகின்ற ஒரு ஆலோசகராகவும் ஆசிரியர் காணப்பட வேண்டும்

v   குணவியல்புகளை கட்டியெழுப்பக் கூடியவராக இருத்தல்.

                ஆசிரியர் சுய ஒழுக்கமும் முன்மாதிரியான நடத்தையும் உடையவராக இருப்பதோடு கருணை உள்ளம் கொண்டவராகவும் இனிமையாக பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.

                   இப்பண்புகளை தானும் பின்பற்றுவதோடு மாணவரையும் பின்பற்றச் செய்கின்ற குணவியல்புகளை கட்டியெழுப்பும் பொறுப்பையும் ஆசிரியர் வகிக்கின்றார்.

v  சமூகத்தை கட்டியெழுப்புவதில் பங்களிப்புச் செய்பவராக இருத்தல்.

                   சமூகத்தின் உயர்வான ஒழுக்க நெறிகள் மற்றும் சமூக அபிவிருத்தி என்பவற்றில் தன்னை ஈடுபடுத்தும் ஒரு சமூக பொறியியலாளர் வகிபாகத்தை வகிக்கக் கூடியரகவும் ஆசிரியர் இருப்பார்

v  தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்களிப்புச் செய்பவராக இருத்தல்

              நாட்டின் வரலாறுகள் தொடர்பான விளக்கத்தை வழங்குகின்ற, பொதுநலத்தை துண்டும் பண்புகள் மற்றும் நாட்டின் வழங்களை பாதுகாக்கும் பண்புகளை மாணவர்களிடம் ஏற்படுத்துகின்ற பண்புள்ளம் கொண்ட தேசத்தை கட்டியெழுப்புவதில் ஆற்றல் உள்ளவர்களும் ஆசிரியர் இருக்க வேண்டும்

v  முகாமைதுவ வகிபாகத்தை உடையவராக இருத்தல்


                    ஆசிரியர் பாடசாலை ஒழுங்கமைப்பு திறம்பட கட்டியெழுப்புவதற்கு வளங்களை வினைத்திறனாக பயன்படுத்த வேண்டும். அத்துடன் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், செயற்படுதல், கட்டுப்படுத்தல், மதிபிடல் ஆகிய விடயங்களை செயற்படுத்துபவராகவும் இருக்க வேண்டும்

                                  

v  சூழல் பாதுகாவலராக செயற்படல்

              சூழல் பாதுகாப்பு, அயற்சூழலை சுத்தமாக வைத்திருத்தல், சூழல் மாசடைதலை தவிர்த்தல், இயற்கையை நேசித்தால் பாதுகாத்தல் போன்ற பண்புகளை தானும் பின்பற்றி மாணவர்களையும் பின்பற்றச் செய்கின்ற சூழல் பாதுகாவலராகவும் ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும்  

v  கணிப்பிடுனராக இருத்தல்.

             கணிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் தனியாள் மாணவர் மேம்பாட்டுக்கு  வழிகாட்டுபவராக ஆசிரியர் திகழ்கின்றார். அத்துடன் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மீளாய்வு செய்து மேம்படுத்தும்மேம்படுத்தும் மனப்பாங்கு உடையவராக ஆசிரியர் காணப்படுகின்றார்

v  ஆய்வாளராக செயற்படல்

             பிரச்சனைகளிருந்து மாணவர்களை விடுவிப்பதற்கும் அவர்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்துவதற்கும் உதவி செய்யும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்கிறது. ஒரு ஆய்வாளராக வும் ஆசிரியர் செயற்பட வேண்டும்.

v  சுயமதிப்பிடுனரக இருத்தல்

             ஆசிரியர் தன்னை பற்றிய விளக்கத்தை பெறுகின்ற  வகையில் அவ்வப்போது தனது நடத்தை சார், ஆளுமை சார், அறிவு நிலை, மாணவர்களுடனான இடை தொடர்பு, மாணவர்களின் பின்பற்றச் போன்ற பல விடயங்கள் தொடர்பாக தன்னை சுயமதிப்பிட்டிற்கு உற்படுத்த கூடியரகவும் காணப்பட வேண்டும்

ரம்ப பாடசாலை ஆசிரியரின் பண்புகள்

v  குணங்கள்

       ஆசிரியர் என்பவர் உயரிய பன்புகளை உடையவராக இருத்தல் வேண்டும் ஏனெனில் அவருடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், நடத்தை போன்ற குணங்கள் மாணவர்களை அதிகம் பாதிக்கிறது

v  உளவியல் அறிவு

        மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளை பற்றி அறிய மாணவர் உளவியல் பற்றி ஆசிரியர் கற்றறிந்தவராக இருத்தல் வேண்டும்

v  கிரகித்து கொள்ளும் முறை

         ஆசிரியரின் கற்பிக்கும் முறையானது சரியான முறையில் இருக்கும் போது அவருடைய கற்பித்தல் மிகவும்  பயனளிக்க கூடியதாகவும் விருமபத்தக்க விளைவுகளை உடையதாகவும் இருக்கும்

v  மாணவர்களின் தனிதன்மைக்கு மதிப்பளித்தல்

           ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தன்மையுண்டு எனவே மாணவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும்

v   பாரபட்சமற்ற முறையிலிருத்தல்.

             ஒரு ஆசிரியர், ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் சலுகை அளிப்பவராக இருத்தல் கூடாது எல்லா மாணவர்களையும் ஒரே மாதிரியாகப் பாவித்தல் வேண்டும்.

v  பொறுமை

             மாணவர்களை சரியான வழிக்குக் கொண்டு வர சிறிது கால அவகாசமும் பொறுமையும் தேவைப்படுகிறது எனவே, ஆசிரியர் பொறுமையுடனிருத்தல் வேண்டும்.

v  ஆராய்ச்சி மனப்பான்மை

தன்னுடைய நேரத்தை புதுவகையான கற்பித்தல் முறைகளை ஆராய்ந்து தேர்வு செய்யக் கூடியவராக ஆசிரியர் இருத்தல் வேண்டும்.

v  உண்மையான ஆதிக்கம் செலுத்துபவராக இருக்க வேண்டும்

மாணவர்களுக்கு குறைவான உத்தரவுகளைப் பிறப்பித்தல் வேண்டும்.

v  புகழ்வதும் குற்றம் சாட்டுதலும் சரியான முறையிலிருத்தல் வேண்டும்

பாராட்டுதலும் குற்றம் சாட்டுதலும் முக்கியமான போர் கருவி போல் ஆசிரியர் அதனை கவசமாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

v  பாடங்களில் புலமைப் பெற்றவராக இருக்க வேண்டும்

தன்னுடைய பங்கில் பாடம் பற்றிய குறை இருப்பின் மாணவர்கள் முன்னிலையில் அவரின் மதிப்பைக் குறைக்கும்.

v  தினசரி குறிப்புகளைத் தயார் செய்தல்

ஆசிரியர் எவ்வளவு திறமைமிக்கவராக, அனுபவசாலியாக இருப்பினும் கற்பித்தலுக்கு முன் குறிப்புகளைத் தயார் செய்தல் அவசியம்.

v  தன்னைத் தானே மதிப்பீடு செய்தல்

 ரைபர்னின் கூற்றுப்படி ஆசிரியரைப் பொறுத்த வரை சுயமதிப்பீடு செய்தல் என்பது ஒரு முக்கிய சோதனை கருவியாகச் செயல்படுகிறது.

v  நகைச்சுவையுணர்ச்சி

ஆசிரியரானவர் இயற்கையாகவே நகைச்சுவையுணர்ச்சியுடனும், நல்ல பண்புகளுடனும் இருப்பது முக்கியம்.

v  மன உணர்வுகளில் ஸ்திரத்தன்மை உடையவராயிருத்தல்

மனச்சோர்வு மற்றும் அதிருப்தியுடைய ஆசிரியர் தன்னுடைய மாணவர்களை மகிழ்ச்சியாகவோ, ஒத்துபோகக் கூடியவராகவோ இருக்க உதவ முடியாது.

v  கேள்வி கேட்கும் திறமை மற்றும் ஆசிரியர் முன்னுதரணமாய் இருத்தல்

ஆசிரியர் உத்தரவிடுபவராகவோ வேலை வாங்குபவராகவோ இல்லாமல் உதவி புரிபவராகவும் வழிகாட்டியாகவும் ஆலோசனை கூறுபவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆரம்ப பாடசாலை ஆசிரியர் பின்வரும் பொருத்தபாடுகள் அமையப் பெற்றவராக காணப்பட வேண்டும்

v  சூழ்நிலையை ஆளுந்திறன்

v  கற்பனைத் திறன்

v  ஆளுமைத் திறன்

v  சுய கட்டுபாடு

v  ஊக்கமுடைமை

v  சுய ஆய்வு

v  கூட்டுணர்வு மனப்பான்மை

v  தன்னொழுக்கம்

v  உடல் நலம்

v  நேர்மை

v  அறிவுத் தாக்கம்

v  பணி மீது ஈடுபாடு

ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் பின்வருவனவற்றிற்கு தயாராயிருத்தல் வேண்டும்

v  பிள்ளைகளைக் கண்காணித்தல் மற்றும் அவர்களோடு இருத்தலை விரும்புதல்.

v  கருத்துக்களை ஏற்கத் தயாராகவும், எப்போதும் கற்க விருப்பமுள்ளவராகவும் இருத்தல்.

v  பாடப்புத்தகங்களில் இருக்கும் பொருளாக அறிவைக் கருதாமல், கற்றல் கற்பித்தல் முறையாலும் சுய அனுபவத்தாலும், விவாதித்தலும் கருத்தேற்றமடைந்து கட்டமைப்பு செய்து கொள்வது அறிவு எனப் புரிந்து கொள்ளுதல்.

v  கலைத்திட்ட வடிவமைப்பில், செயல்திட்டங்களை இணைந்து அனுபவ அறிவாக்குதல் மற்றும் பாடப்புத்தகங்களை நன்கு ஆராய்தல்.

 THANK YOU 

NOTES BY ANBU

Post a Comment

0 Comments

close