Breaking News

சமூகவியல் தோற்றமும் வளர்ச்சியும்


 

அறிமுகம்

சமூகவியல் துறை பிரெஞ்சுப் புரட்சிக்குச் சற்றுப் பிந்திய காலத்தில்இ அறிவொளிச் சிந்தனைகளில் இருந்துஇ சமூகத்தின் நேர்க்காட்சியிய அறிவியலாக உருவானதில் இருந்து தொடங்குகிறது.

இதன் தோற்றத்துக்கு அறிவியல் மெய்யியலையும்இ அறிவு மெய்யியலையும்இ சார்ந்த பல்வேறு இயக்கங்கள் காரணமாக இருந்தன. விரிந்த நோக்கில்இ சமூகப் பகுப்பாய்வுஇ சமூகவியல் துறை உருவாவதற்கு முன்னமே பொதுவான மெய்யியலின் ஒரு பகுதியாகத் தோற்றம் பெற்றது.

தற்காலப் புலமைசார் சமூகவியல், நவீனத்துவம்இ முதலாளித்துவம்,நகராக்கம், பகுத்தறிவுமயமாதல்,மதச்சார்பின்மையாதல், குடியேற்றவாதம், பேரரசுவாதம் ஆகியவற்றுக்கான ஒரு எதிர்வினையாகத் தோன்றியது.  

19 ஆம் நூற்றாண்டுச் சமூகவியல்இ நவீன தேசிய அரசின் தோற்றம்இ அதன் உறுப்பு நிறுவனங்கள்இ அதன் சமூகமயமாக்க அலகுகள்இ அவற்றின் கண்காணிப்பு முறை ஆகியவை தொடர்பில் குறிப்பாக வலுவான ஆர்வம் கொண்டிருந்தது.

 அறிவொளிச் சிந்தனைகளைவிட, நவீனத்துவக் கருத்துருவே பெரும்பாலும், சமூகவியல் விடயங்களைச் செந்நெறி அரசியல் மெய்யியலில் இருந்து வேறுபடுத்தியது.

பல்வேறு கணியமுறைச் சமூக ஆய்வு நுட்பங்கள் அரசுகள்இ வணிக நிறுவனங்கள், அமைப்புக்கள் போன்றவற்றால் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டதுடன், பிற சமூக அறிவியல் துறைகளிலும் பயன்பட்டன.

சமூக இயக்கம் தொடர்பான கோட்பாட்டு விளக்கங்களில் இருந்து விலகி, இது சமூக ஆய்வுக்குச் சமூகவியல் துறையில் இருந்து ஓரளவு சுதந்திரம் வழங்கியது. 

இதேபோல், "சமூக அறிவியல்" என்பது,மனிதர், இடைவினைகள்,சமூகம்,பண்பாடு போன்றவற்றை ஆய்வு செய்யும் பல்வேறுபட்ட துறைகளை உள்ளடக்கும் பொதுச் சொல்லாக ஆகியது.

சமூகவியல் வரைவிலக்கணங்கள்

சமூகவியல் என்பது மனித சமூகத்தின் இயல்பினையும் வரலாற்றையும் பற்றிய கற்கை நெறியாகும். (OXPORT DICTIONARY)

சமூக செயன்முறை பற்றி அறியும் அறிவியல்.

  ( MAX WABER 1864- 1920 )

சமூகவியல் என்பது மனித ஊடாட்டம் மற்றும் இடைத்தொடர்புகள் பற்றிய கல்வியே சமூக கற்கை நெறியாகும்.

சமூக குழுக்கள் பற்றிய கல்வியே சமூகவியலாகும். ( JOHNSON1977 )

சமூகவியல் என்பது சமூகம் பற்றிய கற்கை என்கையில் மக்கட் குழுக்கள் மற்றும் சமூகங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதுடன் சமூக ஊடாட்டம் பற்றியும் ஆராய்கின்றது.( ENCYLOPEDIA 2002) 


கொம்டே கருத்து

சமூகவியலின் நிறுவனர் பிரெஞ்சு தத்துவஞானி அகஸ்டே காம்டே (1798-1857) என்று கருதப்படுகிறார்.

 தனது மிக முக்கியமான படைப்பான “நேர்மறை தத்துவத்தின் பாடநெறி” (6 தொகுதிகளில் - 1830-1842)இ 1839 இல் வெளியிடப்பட்ட 3 வது தொகுதியில்இ அவர் முதலில் “சமூகவியல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.மற்றும் விஞ்ஞான அடிப்படையில் சமூகத்தைப் படிக்கும் பணியை முன்வைத்தார்.



கொம்டே சமூகவியல் பற்றி சிந்தித்ததற்கான காரணம்

அறிவு சார்ந்த குழப்ப நிலையே பிரதான காரணமாக காணப்பட்டது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம்  அக்கால சமயத் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு விமர்சனங்கள் எழுந்தது.

    எடுத்துக்காட்டாக

பூமி தட்டையானது என்ற கருத்தை பல ஆராய்ச்சிகள் மூலம் விஞ்ஞானிகள் முன்வைக்க அதனை மறுத்து சமயத் தலைவர்கள் பூமி கடவுளின் படைப்பு என்ற கருத்தை முன்வைத்து விமர்சிகக்க தொடங்கின.

அத்தோடு அக்காலத்து மக்கள் சமூகத்தை நெறிப்படுத்த பிரதான சிறந்த அறிவு சார்ந்த சமய வழிகாட்டல்கள் இல்லாமையால் அக்காலத்து மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு காணப்படவில்லை.

இதனால் சமயம் ஊடாக இயங்கிய அரசை அறிவாளிகளையும் விஞ்ஞான ரிதியாய சிந்திக்க கூடிய தகுதி வாய்ந்த மனிதர்களையும் கொண்டு அரசை நிர்வகிக்ககூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறே கொம்டேவும் சிந்திதிதார்.

சமூகவியல் தோற்றத்திற்கும் வளர்ச்சிகான காரணங்கள்

கைத்தொழில் புரட்சி

பிரான்சிய புரட்சி

மனித உரிமைகள் பிரகடனம்

முதலாளித்துவ,சமவுடமை பொருளாதார வளர்ச்சி

அறிவியல் சிந்தனை வளர்ச்சி

புத்தொளிக் கொள்கையின் வளர்ச்சி

ஐரோப்பிய மாக்ஸிசத்தின் எழுச்சி

சமூகவியல் வளர்ச்சிக்காக பாடுபட்ட அறிஞர்கள்

ஹேபர்ட் ஸ்பென்சர் 1820 - 1903

பிரெடரிக் லபிலே 1806 – 1882

கார்ள் மாக்ஸ்   1018 – 1883

சார்ள்ஸ் டாவின்  1809 – 1892 

சிக்மன்ட் பிராய்ட் 1856 – 1939





சமூகவியலின் முக்கியத்துவம்

1) இக்கற்கைத ; துறையானது சமூகப் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் விசாரனை செய்தல் என்பவற்றுக்கான சமூக பொறியியலாளர்களை (ளுழரட நுபெiநெநசள) உருவாக்கின்ற துறையாகும். இவர்கள் பல்வேறு கருத்திட்டங்களை (Pசழதநஉவ) தயாரிப்பதற்கு முன்வராமல் சமூக தேவைகள் பற்றி கவனம் எடுப்பவர்களாக விளங்க வேண்டும். 

2)வணிகமயமான அமைப்பான்மைகளில் சமூக அம்சங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. சமூக தேவைகளை அடிப்படையாகக் கொண்டே உற்பத்தி செயன்முறைகளும், வணிக செயற்பாடுகளும் நடைபெறுவதால் அங்கு சமூகவியல் முக்கியத்துவம் பெறுகின்றது.

*எந்தவொரு உற்பத்தியும் (PRODUCT) சமூக தேவையின் அடிப்படையில்தான்    உருவாக்கப்படுகின்றது. 

✱ தேவைகளின் உருவாக்கம், தேவைகளின்  விருப்புகள், எப்பொருள் சார்ந்த சமூகம் விரும்புகின்றது எனப் பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றன.

3 )   சமூகவியல் என்ற கற்கையானது சமூகத்தேவைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் விசாரனை செய்வதற்கும் உதவுகின்றது. இதன்படி அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகளில் வரையறுக்கப்பட்ட வளங்களின் விசேடத்தன்மை பற்றியும் அவற்றின் முறையான பங்கீடு பற்றியும் திட்டமிட்டுக் கொள்வதற்கு திட்டமிடல் சார்ந்த துறையினருக்கு உதவுகின்ற கற்கைத் துறையாக இது அமைகின்றது.

PLANNING – மக்களின் தேவையறிந்து திட்டமிடல் வேண்டும்.

4) சமுதாயத்தாலே அதிகளவு கேள்வியுள்ள அரச துறை, கைத்தொழில் துறை, நகர திட்டமிடல் துறை, தொடர்பாடல் துறை, விளம்பரத்துறை போன்ற பல சமூக வாழ்வில் பல்வேறு துறைசார்ந்த விடயங்களுக்கும் சமூகவியல் சார்ந்த அறிவு பயன்படுத்தப்படுகின்றது.

✱அரசதுறை - தேர்தலில் பொதுசனத்தின் அபிப்பிரயாயம் என்ன? என ஆராய்ந்து POLITICAL  SOCIOLOGY பல ஆய்வு செய்யும் முறை காணப்படுகின்றது.

சமூகவியல் சிந்தனை விருத்தி கால கட்டங்கள்

இயற்கை சமூகவியல்   

 மத்தியகால சமூகவியல்   

  நவீன சமூகவியல் 


சமூகவியலின் முறைகள்

அனுபவ ஆராய்ச்சிக்கு தத்துவார்த்த கருத்துக்கள் அடிப்படை. ஆராய்ச்சியில்இ சமூகவியல் தரமான மற்றும் அளவு முறைகளைப் பயன்படுத்துகிறது. தரமானவை நுண்ணிய சமூகவியல் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் தகவல்களைப் பெறுவதற்கு புரிதல் மற்றும் விளக்கத்தைப் பயன்படுத்துகின்றன.

 அளவு மற்றும் கணித முறைகள்.ஒரு அடிப்படை விஞ்ஞானமாக, சமூகவியல் சமூக நிகழ்வுகளை விளக்குகிறது, அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து சுருக்கமாகக் கூறுகிறது. 

ஒரு பயன்பாட்டு அறிவியலாகஇ சமூக நிகழ்வுகளை கணிக்கவும் நிர்வகிக்கவும் சமூகவியல் நம்மை அனுமதிக்கிறது.சமூகவியல் ஒரு இளம் விஞ்ஞானமாகக் கருதப்படுகிறது, இது இன்னும் ஆகிவருகிறது. 

சமூகவியலில் பல கிளைகள் உள்ளன, அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உளவியல், அரசியல் அறிவியல், கலாச்சார ஆய்வுகள்,மானுடவியல் மற்றும் பிற மனிதாபிமான துறைகள் போன்ற அறிவியல்களும் சமூகவியலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.



உலக அளவில் சமூகவியல் துறையில் சாதித்த வல்லுநர்கள் சிலர்

இம்மானுவேல் ஜோசப் ஸீயெஸ் - பிரான்ஸ்

அகஸ்டே காம்டே- பிரான்ஸ்

அடால்ப் க்யூட்லெட்  - பெல்ஜியம்

ஹெர்பெர்ட் ஸ்பென்சர்  -இங்கிலாந்து

எமில் டெக்கீம் - ஜெர்மனி

மாக்ஸ் வெபர் - ஜெர்மனி

ஜார்ஜ் சிம்மெல்  - இங்கிலாந்து

ராபர்ட் கே.மெட்டான் -  இங்கிலாந்து

வில்லியம் கிரஹாம் சம்னர் - அமெரிக்கா

சமூகவியல் துறை மாணவர்களை உற்சாகப்படுத்தவும்/ ஆய்வுகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரவும் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள்/குழுக்கள்

இண்டர்நேஷ்னல் சோஷியாலஜிக்கல் அசோசியேஷன்   -  அமெரிக்கா

அமெரிக்கன் சோஷியாலஜிக்கல் அசோசியேஷன்  -  அமெரிக்கா

தி பிரிட்டிஷ் சோஷியாலஜிக்கல் அசோசியேஷன் -   இங்கிலாந்து

கனடியன் சோஷியாலஜிக்கல் அசோசியேஷன்    -  கனடா

சோஷியாலஜிக்கல் அசோசியேஷன் ஆஃப் அயர்லாந்து -  அயர்லாந்து

ஆஸ்திரேலியன் சோஷியாலஜிக்கல் அசோசியேஷன்     -  ஆஸ்திரேலியா

ஹவாய் சோஷியாலஜிக்கல் அசோசியேஷன்                    -  ஹவாய் 

சௌத் ஆப்ரிக்கன் சோஷியாலஜிக்கல் அசோசியேஷன்  - ஜாம்பியா

இரானியன் சோஷியாலஜிக்கல் அசோசியேஷன்          -  ஈரான் 

ஸ்விஸ் சோஷியாலஜிக்கல் அசோசியேஷன் -  சுவிட்சர்லாந்து




THANK YOU 

NOTES BY ANBU

Post a Comment

0 Comments

close