Breaking News

சமூக கலாச்சாரமும் ஆசிரியர் செயற்பாடும்

  



ஒர் ஆசிரியர்இ பல நிலைகளிலும்,மாணவர்களை, சமுதாயத்தை உருவாக்குவதில் உறுதிப்பாடு உடையவராகத் திகழ வேண்டும். 

ஆகவே ஆசிரியர் சமூகப் பொறியாளராக (Social Engineer), காவல் காக்கும் தோட்டக்காரராக, களநிபுணராக, குருவாக, இரண்டாம் பெற்றோராக, முன்னோடியாக, பாதுகாவலராகச் செயல்படுகிறார் என்பதை நாம் உணர்ந்து நம்மை அத்தகு தகுதிகளுக்குப் பாத்திரர்களாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒர் ஆசிரியர் தன்னுடைய தொழில்சார் செயல்பாடுகளை விருப்பு வெறுப்பின்றி தானேஇ நிர்ணயித்துக் கொண்ட தர உறுதித் தன்மையோடு ஒப்பிட்டு நிறைகுறைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற தொடர்பணி மேற்கொள்வதே பணிக்கடனாகும்.

சமூகம் என்றால் என்ன?

சமூகம் (Society) என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும்இ ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம்.

அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். 

இக்குழுவில் உள்ளவர்களிடையே தொடர்ச்சியான சமூக உறவுகள் காணப்படும். இவ்வகையான குழுக்களில் இருப்பவர்கள் மேலாதிக்க கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டிருப்பர். தனித்துவமான பண்பாடுஇ நிறுவனம் சார்ந்த தொடர்புகள் இத்தகைய குழுவினரின் அடிப்படையாக அமைந்திருக்கும்.

விரிந்த அளவில் நோக்கும்போது சமூகம் என்பதை பல்வேறுபட்ட மக்கள் அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய பொருளியல்இ சமூக மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு எனலாம். பொதுவாக சமூகம் என்பது "தமிழர்" என்பது போல ஒரு குறிப்பிட்ட மக்களையோ, "இலங்கை" என்பதுபோல ஒரு நாட்டையோ அல்லது "மேல்நாட்டுச் சமூகம்" என்பதுபோல ஒரு பரந்த பண்பாட்டுக் குழுவையோ குறிப்பதாகக் கொள்ளலாம். 

பல்வகைப்பட்ட இனங்கள் கொண்ட ஒரு சமூகத்தில் தொடர்புகளை வைத்திருக்கும் இள வயதினர்.இக்குழுக்கள் ஏதொவொரு வகையில் கூட்டுறவாக இயங்குவதால் அக்குழு சார்ந்த சமூகத்திற்கும்இ சமூக உறுப்பினர்களுக்கும் நன்மைகள் உண்டாகின்றன. 

கூட்டுறவு மனப்பான்மை இல்லாவிடில் இத்தகைய நன்மைகள் தனிநபர்களுக்கு கிடைப்பது இயலாததாகிவிடுகின்றது. தனிப்பட்ட மற்றும் சமூகத்திற்கு கிடைக்கின்ற பொதுவான நன்மைகள் வேறுபடுகின்றன. பல சந்தர்ப்பங்களில் இவை ஒன்றுடன் ஒன்றாய் சேர்ந்து இரண்டுக்கும் பொதுவாக்கின்றன. 

தனியர்கள் தங்கள் சொந்த நெறிகள் மற்றும் மதிப்புகளை கடைபிடித்துக் கொண்டு மேலாதிக்கம் கொண்ட பெரிய சமுதாயத்திற்குள்ளும் அங்கத்தினர்களாக வாழமுடியும். சில சமயங்களில் இத்தகைய ஒரே சிந்தனை கொண்ட மக்கள் குழு துணைக்குழு என்று குறிப்பிடப்படுகிறது,இச்சொல்லாடல் குற்றவியல் கோட்பாட்டிற்குள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

கலாச்சாரம் என்றால் என்ன?

கலாசாரம், பண்பாடு என்பன பெரும்பாலும ஒரே பொருளிலேயே பயனப்டுத்தப்படுகின்றது. “சமூகத்தில் ஒரு உறுப்பினர் என்ற முறையில் ஒரு மனிதன் பெற்றிருக்கும் அறிவு, நம்பிக்கை, கலை, நெறிமுறைகள், சட்டங்கள், வழக்கங்கள், திறமைகள் மற்றும் பழக்கங்கள் முதலியவை உள்ளிட்ட தொகுதியே பண்பாடாகும்“

சேர்ஏட்வரட்பி ரெயிலர் (Sir Edward B Tylor – 1871).

பண்பாடு, சமுகம் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை சமூகம் என்பது தனிப்படட் பண்பாட்டுடைய மக்களை உளள்டக்கியது (பரந்தது - இனம்) பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் வாழும் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையாகும்.

மானிடவியல் வல்லுனர்கள் கடந்த காலம், நிகழ் காலத்தில் திறமைகளை உள்ளடக்கியது. பண்பாடு வாழ்க்கை காலத்தில் நாலாயிரத்திற்கு மேற்பட்ட சமூகங்கள் உளள்ன என்றும் இவை தனிப்படட் பண்பாட்டைக் கொண்டுள்ளன என்றும் மதிப்பிட்டுள்ளனர்.

கலாசாரம் தொடர்பாக பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைகக்ப்பட்டுள்ளன. மானிடவியலாளர்களும் சமூகவியலாளர்களும் பல்வேறுபட்ட வகையில் அதனை விளக்கியுள்ளனர். அவ்வாறு முன்வைகக்ப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள் பின்வருமாறு

1. “குறிப்பிடப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்களின் வாழ்க்கை நெறி: தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டும், கையளிக்கப்பட்டும், பின்பற்றப்பட்டும் வந்த கொள்கைகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றின் தொகுப்பை உளள்டக்கியதாகும்” லின்டன் - LINTON 1945) .

2. “குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் உறுப்பினர்களால் ஏற்றுக் கொளள்ப்பட்ட வாழ்வின் வடிவமைப்பு கலாசாரமாகும்” ஊ.குளுககால்ன் - ((KLUCKHOLN, C. 1951).

3. “குழுக்களினதும் தனிநபர்களினதும் நடத்தைகளுக்கு வழிகாட்டுகின்ற நியமங்கள், விழுமியங்கள், படைப்புக்கள், நமபிக்கைகள், பாரம்பரியங்கள் என்பனவற்றின் ஒன்றிணைநத்தும் பரஸ்பரம் போஷிப்பதுமான கோலங்கள்” கூ மற்றும் விற் - (KUH and WHITT 1988). 

4. அறிவு, வணக்க வழிபாடுகள், ஒழுக்கவியல், பழக்கவழக்கம், நீதி, கலைகள், சமுக உறுப்பினர் என்ற வகையில் மனிதன் அடைந்த அனுபவங்கள், திறமைகள், ஆற்றல்கள், ஆகியவற்றினதும் முழுமையே கலாசாரமாகும்  - (டெய்லர், நு.டீ).

கலாசாரத்தின் அம்சங்கள் 

மன்றங்கள் நடாத்துதல்

இணைப்பாட விதான செயற்பாடுகளில்மொழி 

கல்வி 

ஆடை, அணிகள் 

பழக்கவழக்கங்கள் 

சமயம்

அறிவு 

உணவு, பானம்

கலைகள்

இலக்கியம் 

சட்ட விதிகளும் சம்பிரதாயங்களும்

நம்பிக்கைகள் மற்றும் சமய வழிபாடுகளும் சடங்குகளும் திருமணப் பாரம்பரியங்கள் 

குடும்ப வாழ்க்கை மக்களின் பணிகள் 

கலாசாரத்தை இளம் பரம்பரையினருக்கு கையளித்தல் தொடர்பான சிறப்பான பணி ஆசிரியருக்கு வழங்கப்படுகின்றது. இங்கு ஆசிரியர் வழிகாட்டுபவராகவும், முன்மாதிரியானவராகவும் செயற்படுவது மிக முக்கியமானதாகும். 

கலாசார பாரம்பரியங்களை பேணி நடந்து கொள்ளல் 

மாணவரக்ளுக்கு சிறந்த முன்மாதிரியாக நடந்து கொள்ளல் 

நேர்த்தியான உடையமைப்பு

ஒழுக்கமாக நடத்தல் 

இன, மொழி, பண்பாட்டு அம்சங்களை ஏனையவர்களுடன் நேர் முறையில் பகிரந்து கொள்ளல்

கலாசார நிகழ்வுகளை நடாத்துதல்  பெரியோரக்ளின் கருத்துகக்ளையும் பகிரந்து கொள்ளல்.

மாணவர்களுக்கு கலாசாரத்தைக் கையளிப்பதில் பாடசாலை முக்கியம் பெறுவதில் செல்வாக்கு செலுத்தியுள்ள காரணங்கள் 

பாடசாலை முறைசார் அடிப்படையில் இளம் தலைமுறையினருக்கு அனுபவங்களை வழங்கும் நிலையம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுவதில் செல்வாககு;ச் செலுத்துகின்றது.

பாடசாலைக் கலைத்திட்டத்தின் மூலம் சமூக ஒழுக்கம், மொழி, பழக்க வழக்கங்களை கலாசார அம்சங்களை உள்வாங்கச் செய்தல் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுவதில் செல்வாககு;ச் செலுத்துகின்றது.

பாடசாலைக் கலைத்திட்டத்தினூடாக மாணவருக்கு வழங்கக் கூடிய கலாசாரப் பெறுமானங்கள் முதியவர்களை மதித்தல் 

வுளங்களைப் பாதுகாத்தல் 

சிறந்த பழக்கங்கள், வழக்கங்களை பின்பற்றுதல்

ஒழுக்கப் பண்புளள் பிரஜையாக நபராக செயற்படல் 

ஓர் ஆசிரியர் பாடசாலைச் செயற்பாடுகளினூடாக மாணவர்களிடத்தே பல்கலாசார புரிதல்களை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் 

பொதுவான கலாசார நிகழ்வுகளை நிகழ்த்துதல் (உதாரணம்) பரிசளிப்பு விழா, நாடக போட்டிகளை நிகழ்த்துதல்,விளையாட்டு போட்டி,சாரணியர் இயக்கம் 

குழுக்கற்றலை ஏற்படுத்தல் 

அனைத்து இன,மத,மொழி வேறுபாடு இல்லாமல் குழுவாக இணைந்து கற்கும் போது பல்கலாசாரம் வலுப்பெறும். 

அனைத்து சமய விழாகக்ளையும் நடாத்துதல். ஒவ்வொரு கலாசாரத்தையும் பிரதிபலிககு;ம் வகையில் கண்காட்சிகளை நடாத்துதல் 

பல்கலாசார அம்சங்களை மதிக்கத் தவறுவதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்

பல இனங்களுக்கிடையே முரண்பாடு தோன்றும். அதாவது ஒரு கலாசாரத்தை உடைய பிரிவினருக்கு சலுகைகளை கொடுத்து விட்டு ஏனையவரக்ளை புறக்கணிக்கும் பட்சத்தில் முரண்பாடுகள் தோன்றும். 

போராட்டங்கள்,குழப்ப நிலை தோற்றுவிக்கப்படலாம்

பன்மொழி தேர்ச்சி இன்மை (முரண்பாடு நீண்டுகொண்டே செல்லும்)

சமத்துவத்தை பேணமாட்டார்கள் 

மேற்குறிப்பிட்ட பிரச்சினையை இழிவளவாக்க ஆசிரியர் என்ற           வகையில் நீர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

கலைதிட்டத்தினூடாக அனைத்து இன மக்களுக்கும் பொதுவான ஒரு கலைதிட்டத்தை உருவாக்குதல்

கலை நிகழ்வுகள், சமய நிகழ்வுகள் மேற்கொள்ள வழிப்படுத்தல்

பன்மொழி தேர்ச்சியுடையவராக காணப்படுவதோடு அதற்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தல் 

சமூகத்தில் ஆசிரியரின் செயற்பாடுகள்

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” எனும் கூற்றிற்கு இணங்க இவ் உலகில் எத்தனையோ தொழில்கள் காணப்பட்ட போதிலும் பணியாக மதிக்கும் தொழிலாக ஆசிரியத்துவம் அமைகின்றது. வாழும் காலம் மட்டுமல்ல ஒரு மனிதன் மரணித்த பின்பும் பிற மனிதர்களால் போற்றப்பட்டு மனங்களில் ஒரு சிலரால் தான் வாழவும் ஆளவும் முடியும் அவர்களில் ஆசிரியர்கள் முதல் நிலை வகிக்கின்றனர். பாரம்பரிய சமூதாயத்தில் ஆசிரியர் சேவை இறை தொண்டாக கருதப்பட்டது. 

அதன் பின்னணியில் சமூதாயத்தின் ஆல விருட்சமாக இருந்து பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் ஊடாக மாணவர்களின் எதிர்கால வாழ்வு சிறப்பிக்க வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் ஆசிரியர்களாவர். ஆசிரியத் தொழிலின் உன்னத நிலையினை பேணும் வகையில் ஆசிரியர்களின் கௌரவம்இ மேன்மைஇ உயர்வுஇ மாண்பு என்பவற்றினை எடுத்தியம்புவதற்காக 1966ல் பரீஸ் யுனேஸ்கோ மாநாட்டின் படி அக்டோபர் 6 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது.

இவ்வாறான உயர் நிலையினைக் கொண்ட ஆசிரியர் பணியினை கடமையாக கருதாமல் பாக்கியமாக கருத வேண்டும்.

மாதாஇ பிதாஇ குருஇ தெய்வம் எனும் ஒழுங்கின் படி மனிதனை முழுமைப்படுத்தும் ஆற்றல்கள் குருவிடம் உள்ளமை ஏற்புடையதாகும். 

அந்த வகையில் ஆசிரியரை பொறுத்தே மாணவரது நிலை தீர்மானிக்கப்படுகின்றது. மாணவர்களது அறிவு மட்ட வளர்ச்சிஇ செயற்பாடுகள்இ திறன்கள்இ வெற்றிகள் அனைத்தும் மாணவனை வழிப்படுத்தி நெறிப்படுத்தும் ஆசிரியரையே சாரும். அந்த வகையில் மாணவர் விருத்தியில் ஆசிரியரின் பங்கு முதன்மையானதாக காணப்படுகின்றது.

கல்வி என்பது இயற்கையாக எழும் வளர்ச்சியாகும். மாணவர்களின் இவ் வளர்ச்சிக்கு ஆசிரியர் உந்து சக்தியை வளங்குகின்றார்.

கல்வியினை மனித வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் ஆயத்தக் கருவியாகவும் மாணவர்களிடம் இருக்கின்ற எல்லாத் திறன்களையும் ஆற்றல்களையும் இசைந்து வளர்ச்சி பெறச் செய்வதற்கு பக்கபலமாக இருப்பவர்கள் ஆசிரியர்களே ஆவர். 

பாடசாலை மாணவர்களின் நடத்தகைள் அவர்கள் வாழும் சழூகத்திற்கு பயன் தரக்கூடிய வகையில் நிறைவு செய்பவர்களில் ஆசிரியர்கள் முதல் நிலை பெறுகின்றனர்.

அத்துடன் மாணவர்கள் சமூகத்தில் நல்ல உயர் நிலைஇ பொருத்தப்பாடு அடைந்து வாழத் தேவையான அறிவு இ திறன்கள் இ உளப்பாங்கு பழக்க வழக்கங்கள்இ விழுமியங்கள் போன்றவற்றை ஆசிரியர் கலைத்திட்ட இயக்குனராக இருந்து மாணவர்களுக்கு புகட்டுகின்றனர்.

பாடப்பொருளை தான் கற்று கற்பித்தல்சாதனங்கள் இ சிறந்தகற்பித்தல் முறைகளின் ஊடாக தனது கற்பித்தலை விருத்தி செய்து மாணவர்களை கற்க வழி காட்டுகின்றனர். 

மாணவ விருத்தியில் பங்கு கொள்ளும் ஆசிரியர்கள் வாண்மை தேர்ச்சியுடையவர்களாக இருத்தல் அவசியம். பாடத்திட்டத்தில் முழுமையான அறிவுஇ வகுப்பறைஒழுங்கு பாடசாலை இடைவினைகள், பெற்றோருடனான பின்னூட்டல்கள் முதலியனபற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். “தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும்” என்பது போல இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார். இவ் உறவானது மாணவர்களின் எதிர்காலத்தினை கட்டியெழுப்பும் வகையில் அமைகின்றது.

வகுப்பறையில் மாணவர்களை முகாமைத்துவம் செய்பவராகவும் ஆலோசனை வழிகாட்டியாகவும் அழகியல் உணர்வுள்ள கலைஞராகவும் இணைப்பாளராகவும் ஆசிரியர் பல வகையிலும் மாணவர்களது விருத்திக்கு கைகொடுக்கின்றனர். ந்த வகையில் சிறந்த பண்புகளை தம்முள் கொண்ட ஆசிரியர்கள் சிறந்த வினைத்திறனான மாணவ சமூதாயத்தை உருவாக்குவர். ஆகையால் ஆசிரியர்கள் மாற்றுத்திறனை ஏற்றுக்கொள்பவர்களாகவும்இ மாற்றத்தினை உருவாக்குபவர்களாகவும்இ தனது தொழிலை வளர்ச்சிநிலைக்கு கொண்டுசெல்பவராகவும்இ மாணவர்களிடையே நடுநிலை பங்கினை வகிப்பவராகவும்இ முன்மாதிரியானவராகவும் உளவியல் நுட்பம் அறிந்தவராகவும்இஆலாசனை மற்றும் வழிகாட்டல் தன்மையுடன் புதியவற்றை படைக்கும் ஆற்றல் கொண்டவராகவும்இ மரபினையும் நவீனத்துவத்தினையும் பேணும் தன்மை உடையவராகவும் இருத்தல் வேண்டும். 

இவ்வாறான பண்புகளினையுடைய ஆசிரியர்கள் மாணவர் சமூகத்தினை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் படைத்தவர்களாவர். இதனையே காந்தியடிகள் “மாணவனின் இதயத்தை தொடுவதன் மூலம் அவனிடம் இருந்து சிறந்த ஆற்றலினை இனங்காண முடியும்” என கூறியுள்ளார். 

இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்களாக தோற்றுவிக்கும் ஆசிரியப் பணியானது இவ் வையகம் நிலைத்திருக்கும் வரை உறுதியுடன் நிலைத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கல்விச் செயற்பாடுகளை இங்கிதமாக முன்னெடுக்கும் ஆசிரியர்கள் சீரான பாதையில் செல்வதுடன் மாணவர் சமூகத்தினையும் சீரான பாதையில் இட்டுச் செல்ல பெரிதும் துணை புரிகின்றனர்.

மாறிவரும் சர்வதேச சூழலை கருத்திற்கொண்டு புதிய தலைமுறையினரை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். ஆசிரிய மாணவ உறவானது வெறுமனே தண்டனை உறவாக இல்லாது சுமூகமான உறவாக இருப்பது அத்தியாவசியம் ஆகும். “ஆசிரியப் பணியே அறப்பணி அதற்கே உன்னை அற்பணி”எனும் கூற்றின் படி ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் முக்கிய பங்கு வகிக்கின்றார் என்பதனை எம் சமூகம் உணர்ந்து அதன்படி நடத்தல் வேண்டும்.




THANK YOU

NOTES BY ANBU

Post a Comment

0 Comments

close