ஆசிரியர் வகிபாகத்தின் அறிமுகம்
q கற்பித்தல் செயன்முறையை நெறிப்படுத்துபவர் என்ற வகையில் ஆசிரியரின் பொறுப்புகள் அதிகாரங்கள் கடமைகள் ஒழுக்கம் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியதே ஆசிரியர் வகிபாகமாகும்.
q ஆசிரியர் வகிபாகம் வகுப்பறைக்கோ, பாடசாலைக்கோ வரையறுக்கப்பட்டதல்ல. வகுப்பறைக்கு வெளியேயும் பாடசாலைக்கு வெளியேயும் விரிவடைந்து செல்லும். மாணவரிடமும் பாடசாலைக்கு வெளியே பெற்றார் மற்றும் சமுதாயத்தினரிடமும், ஏனைய ஆசிரியர்களுடனும், ஆசிரியர் அல்லாத வேறு அதிபர்களுடனும், குழுக்களுடனும் என்றவாறாக பல்வேறு சமூகக் குழுக்கள் மற்றும் சந்தர்ப்பங்களுடன் தொடர்புடைய பணிகள் இதில் அடங்கும்.
•
ஆசிரியர் வகிபாகத்துடன் தொடர்புடைய இயல்புகளும்
பண்பு கூறுகளும்.
Ø ஆசிரியரது வகிபாகத்தில் பொறுப்புக்கள், அதிகாரங்கள், கடமைகள், ஒழுக்கங்கள் என்பன அடங்கியுள்ளன அத்தோடு ஆசிரியர் வகிபாகம் இயக்கத்தன்மை உடையதாகும்.
Ø அந்தந்த சமூகத்துக்கும் காலத்துக்கும் அமைய ஆசிரியர் வகிபாகம் வேறுபடும் .
Ø ஆசிரியர் வகிபாகம் வெவ்வேறு பாத்திரங்கள் மற்றும் பண்புக்கூறுகளை உள்ளடக்கியது.
Ø ஆசிரியரது வகிபாகத்தை தீர்மானிக்கையில் மாணவரது எதிர்பார்ப்புகள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள், உயர்மட்ட உத்தியோகத்தரின் எதிர்பார்ப்புகள் ஆகியன செல்வாக்கு செலுத்தும்.
Ø ஆசிரியர் வகிபாகம் வகுப்பறைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. வகுப்பறைக்கு உட்பட்ட பாடசாலையினுள்ளும் பாடசாலைக்கு வெளியேயும் பரந்து செல்லும்.
Ø ஆசிரியரது வகிபாகம் நேரடியாகவும், மறைமுகமாகவும் குறுகியகால ரீதியிலும், நீண்டகால ரீதியிலும், தனிநபரது விருத்தியிலும், சமூக விருத்தியிலும் பங்களிப்புச் செய்யும்.
Ø வகுப்பறையில் இருக்கும் ஆசிரியரது பணிகளில் தனிநபர்கள், நிறுவனங்கள், குழுக்கள் ஆகியன செல்வாக்குச் செலுத்துவதை காணலாம்.
Ø பாடசாலைக்கு புறம்பான ஆசிரிய வகிபாகத்தினுள் ஆசிரியர் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய பல பாத்திரங்கள் இருப்பதாக “எரிக்ஹொயில்” என்ற கல்வியியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
v இதற்கமைய சகல வகிபாகங்களையும் கவனத்திற் கொள்ளும் போது பிரதானமான இரு வகிபாகங்களின் கீழ் ஆசிரிய வகிபாகத்தை பகுப்பாய்வு செய்யலாம்.
1.
தொழில் சார்ந்த வகிபாகம் –
கற்றல் கற்பித்தல் செயன்முறையுடன் தொடர்புடைய வகிபாகம்.
2. சமூகம் சார்ந்த வகிபாகம் –
சமூகத்தில் பல்வேறு பதவிகள் வகித்தy; தொடர்புகளை பேணல் மூலம்
உருவாகும் வகிபாகம்.
•
ஆசிரியரது சமூக வகிபாகம்.
சமூகத்தில் பல்வேறு பதவிகள் வகித்தல், தொடர்புகளை பேணல் மூலம் உருவாகும் வகிபாகமாகும்.
•
ஆசிரியர் ஒரு சமூக விலங்கு ஆவார். இதன்போது ஆசிரியர் பல்வேறு சமூகப் பொறுப்புகளை வகிப்பார்.
•
வகுப்பறையிலும் பாடசாலையிலும் வெவ்வேறு ஆட்கள் மற்றும் குழுக்களுடன் தொடர்புகளை பேணுவார்.
•
ஆசிரியரது சமூக வகிபாகமானது பெரும்பாலும் ஏனையோருக்கு முன்மாதிரியாக அமைபவராக, வழிகாட்டுபவராக, அவர்களை நெறிப்படுத்துபவராக அமைந்தது.
•
ஆசிரியர் வகிபாகமானது சமூக மாற்றங்களுடன் கூடவே மாற்றமடைய வேண்டம்.
முற்கால ஆசிரியரின் சமூக வகிபாகம். தற்கால ஆசிரியரின் சமூக வகிபாகம்.
ஆசிரியர் மைய கல்வி. * மாணவர் மையக் கல்வி
• கற்பித்தல் முறைகள் *கற்பித்தல் முறைகள்
- விரிவுரை - கலந்துரையாடல்
- மனனம் செய்தல்.
- அவதானிப்பு
- கதைக் கூறல்.
- பிரச்சனைகளை தீர்த்தல்.
- வினா விடை.
- கண்டறிதல் முறை
•
ஆசிரியர் இருக்கும் இடம் நோக்கி *ஆசிரியரும் மாணவரும் ஓரிடத்தை நோக்கி
மாணவர் செல்லல்.
செல்லல்.
•
பரீட்சை மையம்.
*கணிப்பீட்டு மையம்.
•
கொடுத்தல் வகிபாகம். *பரிமாற்று வகிபாகம்.
•
குறிக்கோள்.
*தேர்ச்சி.
•
திட்டமிடல் குறைவு. *திட்டமிடல் அதிகம்.
•
அறிவு மையக் கல்வி.
*அபிவிருத்தி மையக் கல்வி.
•
ஆசிரியர் தமது வகிபாகத்தை ஆற்றும் போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது முரண்பாடுகள்
Ø வீட்டில் ஏனையோர்களுடன் தொடர்புகள் குறைவடைதல்.
Ø ஒன்றுக்கு மேற்பட்ட வகிபாகங்களை வகிக்க வேண்டியுள்ளமை.
Ø பல்வேறு நிலைமைகள் பண்பாட்டு ரீதியிலான வேறுபாடுகள், அரசியல் சமூக செல்வாக்கு காரணமாக தோன்றும் முரண்பாடுகள்.
Ø சுயமாக தீர்மானம் மேற்கொள்ள முடியாமை.
q இவ்வாறான முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு உதவும் வழிகள்.
Ø வழிகாட்டுதலும் ஆலோசனை வழங்குதலும்
Ø உதவி ஒத்துழைப்பு வழங்குதல்.
Ø சுய ஊர்களை ஏற்படுத்திக்கொள்ள வகை செய்தல்.
Ø மேலும் தொழில்சார் பயிற்சி கற்கைகளினூடாக சமூக திறன்களையும், சமூகத்
தேர்ச்சிகளையும் வழங்கலாம்.
Ø விசேட பயிற்சி அமர்வுகள், சேவைக்கால செயலமர்வுகள், பயிற்சி
பாசறைகள் மூலமாகவும் முரண்பாடுகளைத் தீர்த்து கொள்வதற்குப் பயிற்சிகளை வழங்கலாம்.
•
ஆசிரிய வகிபாகத்தில் செல்வாக்குச் செலுத்தும் சிக்கலான சமூக தொடர்பு.
•
ஆசிரியரின் தொழில் சார்ந்த வகிபாகம்.
•
ஆசிரிய தொழிலானது வைத்திய தொழில், தாதித் தொழில் போன்ற மனிதர்களோடு ஒன்றிணைந்து வேலை செய்கின்ற தொழிலாக கருதப்படுகின்றது. இவ்வாறான தொழில்கள் தொழில்சார் தொழில்கள் அல்லது பதவிகள் எனப்படுகின்றன. அவ்வாறான தொழில்களை மேற்கொள்வோர் தங்களுடைய தொழில்சார் விருத்தியை அல்லது வாண்மைத்துவத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
•
அவ்வாறான வாண்மைத்துவம் விருத்தியின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவர் மேற்கொள்கின்ற பணிகள் ஆசிரியர் வகிபாகம் எனப்படுகின்றது தொழில்சார் திறன் அடிப்படையில் ஆசிரியர் ஆற்றும் வகிபாகங்கள் 3 காணப்படுகின்றன.
1.
கடத்தல் வகிபாகம் –
Transmission role
2.
பரிமாற்று வகிபாகம் – Transaction role
3.
நிலைமாற்று வகிபாகம் – Transformation role
•
கடத்தல் வகிபாகம் –
transmission role
•
இங்கு ஆசிரியர் தான் ஒரு அறிவு நிரம்பியவர் என்ற நிலையிலிருந்து மாணவர்களுக்கு அறிவை வழங்கும் ஒருவர் என்ற கருத்து நிலையில் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் செயற்பாட்டாளராகவே ஆசிரியர் இவ்வகிபாகத்தில் காணப்படுகின்றார். இங்கு கற்றலை விட கற்பித்தலுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
•
அதாவது நீர் நிரம்பிய குடத்தில் சிறு பாத்திரத்தில் நீர் ஊற்றுவது போன்று ஆசிரியர் அறிவை விநியோகிப்பவராக அதிகாரத்துடன் காணப்படுவார். இங்கு ஆசிரியர் மையக்கற்பித்தல் நடைபெறுகின்றது. (கற்பித்தல் மட்டும்)
•
மாணவர்கள் செயற்பாடு இன்றி வெறுமனே செயற்பாடற்ற செவிமடுப்ப வர்களாக ஆக்கபூர்வமற்றவர்களாக காணப்படுவர். இவர்களின் சிந்தனைக்கோ, விமர்சனத்திற்கோ இடமில்லை.
•
ஆசிரியர் கணிப்பீடுவதற்கு சந்தர்ப்பம் இல்லை, ஆசிரியரிடமிருந்து ஒரு திசையூடாகவே மாத்திரம் தொடர்பாடல் நடைபெறும், மாணவர்களின் உந்தல்கள் குறைவாகும்.
•
குண நல உள்ளீடுகள் ஆக கரும்பலகை வெண்கட்டி மாத்திரமே பயன்படுத்தப்படும்.
•
மாணவர்களிடம் அறிவு மாத்திரமே வளர்க்கப்படும்.
•
மாணவர்களிடத்தில் புத்தாக்கம் ஏற்பட சந்தர்ப்பம் குறைவு.
•
சமூக திறன்கள் ஏற்படுவது குறைவு.
•
திறன் மனப்பாங்குகள் ஏற்பட வாய்ப்பு குறைவு.
•
முன்வைக்கும் திறன் குறைவாக காணப்படும்.
•
தொடர்பாடல், இடைவினைத் திறன்கள் மிகக் குறைவான நிலையிலேயே காணப்படும்.
•
பரிமாற்று வகிபாகம் –
transaction role
•
ஆசிரியரின் செயற்பாடுகள், மாணவர் மையமாகவும் வகுப்பறை ஓரளவு ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும் காணப்படும்.
•
இங்கு ஆசிரியர் வசதி வழங்குபவராகக் காணப்படுவார் அல்லது கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல உதவும் தலையீடாகச் செயற்படுவார்.
•
தொடர்பாடல் இரு திசைகளில் ஆரம்பித்து ஆசிரியர்- மாணவர், மாணவர்-ஆசிரியர் எனப் பல திசைகளில் நிகழும்.
•
கலந்துரையாடல், சம்பாசணை மூலம் கற்பித்தல் நிகழும்.
•
பாட உள்ளடக்கத்தை கட்டியெழுப்பும் போது எளியவற்றிலிருந்து சிக்கலான வற்றிற்கும் அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றிற்கும் கொண்டு செல்வார்.
•
நிலைமாற்று வகிபாகம் –
Transformation role
•
இங்கு ஆசிரியர் கோட்பாடு ரீதியான விடயங்களை அனுபவங்களின் மூலம் தேர்ச்சியாகவோ அல்லது அறிக்கையாகவோ மாற்றமுறச் செய்யும் ஒரு மாற்று முகவராக செயற்படுவார். இங்கு செயலுரு நிலையில் ஆசிரியரின் செயற்பாடுகள் அமைய மாட்டாது. மாறாக மாணவர்களை செயலுருவம் நிலையில் அனுபவங்களை பெறுவதற்கான செயற்பாடுகளே அதிகம் இடம்பெறும். கற்பித்தலை விட கற்றல் செயற்பாடுகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு மாணவர்களை சுயமாக அனுபவங்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஆசிரியரினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
•
இங்கு செயற்பாடுகளின் அனுபவங்களின் அடிப்படையில் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
•
செயற்பாட்டறிவை கோட்பாட்டறிவாகவும், கோட்பாட்டறிவை செயலறிவாகவும் நிலைமாற்றம் செய்பவராக ஆசிரியர் தொழிற்படுவார்.
•
அனுபவங்களின் அடிப்படையில் கற்பித்தலை மீள ஒழுங்குபடுத்துவதற்காக ஆசிரியர் செயற்படுவார்.
•
மாணவர் மையக் கற்றல் செயற்பாடு நடைபெறும்.
•
கற்பித்தலிலும் பார்க்க கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
•
குழுவாக மாணவர்களின் செயற்பாடு நிகழும்.
•
அறிவும், திறனும், மனப்பாங்கும் மாணவர்களிடத்தில் வளர்க்கப்படும்.
•
முன்வைத்தல் ஆற்றல் மாணவர்களிடத்தில் வளர்க்கப்படும்.
q இவ்வாறான வகிபாகங்களை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மாற்றங்களுக்கு உட்பட்டு வேண்டும் எனவும் அதற்கு தேவையானதை பெற்று கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக வாண்மை விருத்தியின் பொருட்டு தொழில்சார் விருத்திக்காக இலங்கையில் காணப்படும் வசதி வாய்ப்புகளை பொருத்து பின்வரும் வகையில் வகைப்படுத்தலாம்.
மேலதிக தகவல்கள்.
v ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்யும் பொருட்டு கல்வி வழங்கும் நிறுவனங்கள்.
1.
பல்கலைக்கழகம்.
2.
திறந்த பல்கலைக்கழகம்.
3.
தேசிய கல்வி நிறுவகம்
4.
தேசிய கல்வியியற் கல்லூரி.
5.
ஆசிரியர் பயிற்சி கலாசாலை.
6.
ஆசிரியர் கல்வி நிறுவகம்.
7.
ஆசிரியர் கல்வி மத்திய நிலையம்.
v இவ்வாறு இலங்கையில் ஆசிரியர் கல்வியோடு சார்ந்த பல நிறுவனங்கள் காணப்பட்டாலும் அந்நிறுவனங்களுக்கிடையில் பல முரண்பாடான விடயங்களும் காணப்படுகின்றன. இவ்வாறு முரண்பாடுகள் அல்லது பிரச்சினையாக காணப்படும் விடயங்களை பார்க்கும் போது
•
வயதுக்கட்டுபாடு
•
தெரிவு முறை
•
பயிற்சி நெறிக்காலம்
•
பாடவிதானம் அல்லது கலைத்திட்டம்
•
கற்பித்தல் முறை
•
பெறுபேருகள்
•
தங்குமிட வசதி
q இவ்வாறான விடயங்களில் குறைபாடுகள் அல்லது பிரச்சினைகள் காணப்படும் போது அவ்வாறான நிறுவனங்களில் இருந்து பயிற்றப்படும் ஆசிரியர்கள் வகுப்பறை கற்பித்தலின் போது பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க போடு பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் உள்ளாகின்றனர்.
q எனவே தான் ஆசிரியர் கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகள் அல்லது குறைபாடுகளை குறைத்து இல்லாமல் செய்து ஆசிரியர்த்துவ வாண்மையை விருத்தி செய்யும் பொருட்டு 1997ம் ஆண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு ஊடாக “ஆசிரிய கல்வி அபிவிருத்தி அதிகாரசபை” (Nate – national authority in teacher
education) எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் பணிகளாக,
•
ஆசிரியர் கல்வி தொடர்பான கொள்கைகளையும், திட்டங்களையும் உருவாக்குதல்.
•
அக்கொள்கைகளுக்கு பொருத்தமான கலைத்திட்டதினை உருவாக்கல்.
•
அவற்றினை நடைமுறைப் படுத்தல்.
•
மதிப்பீடு செய்தல்.
•
அவற்றினை ஆய்விற்கு உட்படுத்துதல்.
•
மறுசீரமைத்தல்.
என்பவற்றை மையப்படுத்தி ஆசிரியர் மையப்படுத்தி ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்வதில் முயற்சித்து கொண்டிருக்கிறது.
நன்றி
INFORMATION BY
ANBU💪💪💪💪💪💪
0 Comments
THANK YOU COMMIN US