தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டு வரும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழ் நிலைமையையும் உலகமயமாதல் எனக் கூறலாம்.
உலகமய சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வுகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வுதான். ஆனால் இன்றைய கலாசார பண்பாடுகளில் சாதக பாதக விளைவுகளை கோடிட்டுக் காட்டுவதாக அமைகின்றது.
உலகமயமாதல் ஆங்கிலத்தில் பரவிய 'Globalization ' என்ற சொல்லும் சிலவேளைகளில் உலகமயமாக்கம் என்ற சொல்லும் பயன்படுவதுண்டு. உலகமயமாதல் தானாக விரியும் ஒரு செயல்பாடு ஆகும். உலகமயமாதல் என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தத் தொடங்கியது 1981ஆம் ஆண்டிலேயே ஆகும். தியோடோர் டேவிட் ( Theodore Levitt) என்பவர் எழுதிய சந்தைகளின் உலகமயமாதல் (globalisation in market ) எனும் நூலில் உலகமயமாதல் என்பது பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது.
உலகமயமாதல் என்பது பல கோணங்களிலிருந்து நோக்கப்படுகின்றது. அதாவது வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிகரித்த வாழ்க்கைத் தரத்தையும், வளத்தையும் கொண்டு வருகின்றது என்பதும் முதலாம் உலக நாடுகளினதும், மூன்றாம் உலக நாடுகளினதும், நிதி வளத்தைப் பெருக்க உதவுகிறது என்பதும் ஒரு வகையான நோக்காகும்.
பொருளியல், சமூக மற்றும் சூழலியல் அடிப்படையில் உலகமயமாதலை எதிர்மறையான, விரும்பத்தகாத ஒரு விடயமாகக் கருதுகின்றது. இதன்படி உலகமயமாதல் வளர்ந்து வருகின்ற சமூகங்களின் மனித உரிமைகளை நசுக்குகின்றது என்றும், வளத்தைக் கொண்டு வருவதாகக் கூறிக்கொண்டு கொள்ளை இலாபம் ஈட்டுவதை அனுமதிக்கின்றது. பேரரசு வாத (cultural imperialism) நடவடிக்கைகளின் ஊடாகப் பண்பாட்டுக் கலப்புக்கு வழி வகுப்பதும், செயற்கைத் தேவைகளை ஏற்றுமதி செய்வதும், பல சிறிய சமுதாயங்களின் சூழல்கள் மற்றும் பண்பாடுகளை சிதைத்து விடுவதும் இதன் எதிர்மறை விளைவுகளை எடுத்துக் காட்டப்படுகின்றன.
உலகமயமாதல் பலமான மொழி பண்பாடு அடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை இன மொழி பண்பாடு அ அழிவிற்கு அல்லது சிதைவுக்கு அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள முடியும். அதாவது உலகமயமாதல் இருக்கும் ஒன்றின் அறிவில் ஏற்படாமல் இருக்கும் ஒன்றோடு அல்லது மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்துதலாக காணப்படுகின்றது.
உலகமயமாதலின் விளைவாக பண்பாடுகளில் பாரிய சாதக பாதகங்கள் குருவாகப் பெற்றுள்ளதை காணலாம். மேலும் சில சான்றுகளை நோக்கும் போது, மாண்டரின் மொழியே உலகின் மிக பெரிய மொழி 845 மில்லியன் மக்கள் இதைப் பேசுகின்றனர். இதற்கு அடுத்த நிலையில் 329 மில்லியன் மக்களுடன் எசுப்பானிய மொழி உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆங்கிலம் உள்ளது. ஆனாலும் உலகமயமாதலின் மொழியாக இருப்பது ஆங்கிலமே. இதனால் உலக அளவில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது.
உதாரணமாக பார்ப்போமானால்...
உலகின் 35% கடிதங்கள், தந்திகள் போன்றவற்றின் மொழி ஆங்கிலமாக உள்ளது.
உலகின் 40% வானொலி நிகழ்ச்சிகள் ஆங்கிலத்திலேயே நடைபெறுகின்றன.
ஏறத்தாள 3.5 பில்லியன் மக்கள் ஆங்கிலத்தில் ஓரளவு பரிச்சயம் கொண்டவர்கள்.
இணையத்தில் ஆங்கிலமே முதன்மை மொழியாக திகழ்கின்றது.
உலகமயமாதல் மூலம் பொழுதுபோக்கு வாய்ப்புகளும் விரிவடைந்துள்ளன. குறிப்பாக இணையம் செய்மதி தொலைக்காட்சி போன்றவற்றின் ஊடாக நடைபெறுகிறது.
உலகமயமாதலில் முதலில் பரவிய பண்பாட்டுக் கூறு சமயமாகும். இஸ்லாம், பௌத்தம், சமணம், கிறிஸ்தவம், கன்பூசியம், தாவோயிசம் ஆகியவை உலகம் முழுவதும் வேகமாகப் பரவின மொழி, உணவு, அணிகலன் ,நாகரீகம் ஆகியன உலகமயமாதலால் ஏற்பட்டவை ஆகும்.
உலக மயமாதலின் காரணமாக உலகின் தொன்மை வாய்ந்த கட்டிடங்கள் உலக அளவில் பரவி வருகின்றன எனலாம். ஒலிம்பிக், ஃபிஃபா உலக கால்பந்து போட்டிகள் என்றெல்லாம் உலகம் வேகமாக ஒருமைப்பட்டு வருகின்றது.
பண்பாடு மொழி பழக்கவழக்க ரீதியில் ஒரு இனத்தின் தனித்த அடையாளங்கள் அறிவுக் உள்ளாகின்றன ஒரு நாட்டின் பொருளாதார அரசியல் சூழலியல் பிரச்சனைகள் எல்லை கடந்து பரவிட வாய்ப்புண்டு.
உலகமயமாதலின் டிஜிட்டல் காலமே புதிய உலகமயதரமாகும். தொழில்நுட்பத்தின் துணை கொண்டும் பொருளாதார இணைப்புக்கள் மூலமும் ஏற்பட்ட மாற்றங்களே புதிய உலகமயமாக்கம் அடி கோள்கள் ஆகும் இதன் ஊடாக உலக மயமாதலின் காரணமாக கலாசாரம் பண்பாடு என்பன பாதிக்கப்படுகின்றது எனக் கூறலாம்.


0 Comments
THANK YOU COMMIN US