· சமூக வகுப்பு என்பது ஒரு சமூகத்தில் உள்ள தனி ஆட்கள் அல்லது குழுக்களுக்கிடையில் படிமுறை அமைப்பில் காணப்படும் வேறுபாடு ஆகும்.
· சமூக வகுப்பு முறையானது சமூக அடுக்கமைவின் வகைகளான அடிமுறை, சொத்து முறை மற்றும் சாதிமுறை என்பவற்றிலிருந்து பெரிதும் வேறுபடும்.
· சமூக வகுப்பு
ஆனது சட்ட ஏற்பாடுகள் அல்லது சமயம் சார்ந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை
அல்ல. இது பிறப்புரிமையின் அடிப்படையில் வந்ததுமல்ல. ஏனைய அடுக்கமைப்பு
களிலும் பார்க்க நெகிழ்ச்சியானது
என்பது. இவை திட்டவட்டமான எல்லைகளை கொண்டதல்ல.
இலங்கையின் கல்வி வாய்ப்புகள் விரிவாக்கம் பெறுதல், புதிய கைத்தொழில்களின் உருவாக்கம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அவற்றைத் தொடர்ந்து வருமானம் மற்றும் வாழ்க்கை தராதரங்கள் இன் உண்டாகும் மாற்றங்கள் இருக்கமான சமூக அமைப்பில் மாற்றங்களை உருவாகி வருகின்றமை அவதானிக்கலாம்.
சமூக வகுப்பும் கல்வியும்
·
சமூகம் ஒன்றின் அபிவிருத்திக்கு கல்வி
முக்கியமானது போல கல்வி
அபிவிருத்திக்கு சமூகம் பொறுப்பாக உள்ளது.
·
தனியாட்களின் ஆளுமை விருத்திக்கு அடிப்படையாக அமைவது
போன்று சமூக நலன்களை பேணுவதற்கும் கல்வி இன்றியமையாதது.
·
சமூகத்தின் இயல்புகளும் சமூகத்தின் தராதரம்
பொறுப்பான விடயங்களும் கல்வியின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன.
·
சமூக
கட்டுப்பாடுகளுக்கு பொறுப்பாக உள்ள சமூக வகுப்பு கல்வி முறையிலும் நிர்வாக
முறையிலும் முக்கிய பங்கினை ஏற்கின்றது.
·
பல்வேறு
சமூக வகுப்புகளும் தமக்கே உரிய ஆர்வத்துடன் செயற்பட முற்படும் பொழுது அத்தகை
ஆர்வம் ஆனது வழங்கப்படவேண்டிய கல்வி முறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது.
·
இவ்வாறான நிலைமை முதலாளித்துவ சமூகங்களில்
மட்டும் இன்றி சோசலிச சமூகங்களிலும் உள்ளது.
·
உயர் வகுப்பினர் சேர்ந்தவர்களுக்கு தரத்தில் உயர்வான கல்வியும் மற்றவர்களுக்கு இழிந்த கல்வி
என்ற பாகுபாடு ஆற்றல் வேறுபாட்டின் அடிப்படையில் ஆனது என்ற வாதம் பழைய சமூக
அமைப்பில் நிலவி வந்தது.
·
சமூக வகுப்புக்களுக்கு இடையில் நிலவும்
இடைவெளிகளை குறைப்பதற்கு கல்வி ஒரு முக்கியமான வழிமுறையாக அமையும்.
·
திறந்த சமூகங்களில் இதற்கான வாய்ப்புகள்
கூடுதலாக உள்ளன போட்டி சமூகங்களில் சமூக வகுப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப
கல்வி வழங்கப்படுவதை காணலாம்.
·
அமெரிக்கா சோவியத் ஒன்றியம போன்ற நாடுகளில்
இடம்பெறும் கல்விமுறையை அவதானிக்கும்போது கல்விக்கும் சமூக வகுப்புக்கும் இடையிலான
தொடர்புகளை காணலாம்.
·
மத்திய மற்றும் உயர் மத்திய வகுப்பை சேர்ந்த
பிள்ளைகளுக்கு உயர்கலை திட்டங்களின் அடிப்படையில் பயிலும் வகையில் ஆலோசகர்களால்
வழி காட்டப்படும்.
·
சோவியத் ஒன்றியத்தின் பிள்ளைகளை முழுநேர
கல்வியில் ஈடுபடுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்படும் வழிமுறை பெற்றோரின் தொழில்
நிலைகளை பொறுத்து அமைந்துள்ளன.
·
பெற்றோருடைய சமூக பொருளாதார நிலை உயர்ந்து
செல்லும் பொழுது பிள்ளைகளின் வினையாற்றலும் உயர்ந்து செல்வதாக கருதுகின்றனர்.
சமூக வகுப்பும் கல்வியும் பற்றி தத்துவவியலாளர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்.
·
சமூக
வகுப்பினை உள்ளவாறு பேணுவதற்கான கருவியாகவும் கல்வி தொழிற்படுகின்றது எனினும்
அவ்வாறான நிலையில் இருந்து விடுபடுவதற்கு ஏற்றவகையில் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது
கார்ள் மாக்ஸின் கருத்தாகும்..
·
பிரேசில்
நாட்டு கல்வி சிந்தனையாளர் போலோ பிரி இன்போ ஒடுக்கப்பட்டோரின் கல்வி பற்றி
ஆராய்ந்த பொழுது கல்வியின் வங்கி வைப்பு என்ற எண்ணக்கருவின் வாயிலாக பிரேசில்
நாட்டு தொழிலாளர் வகுப்பினர் கல்வியின் மூலம் எவ்வாறு ஒடுக்கப்பட்டார்கள் என்றும்
அத்தகைய நிலையினின்றும் விடுபட கல்வியை பயன்படுத்த வேண்டிய வழிமுறைகளையும் பற்றி
விவரித்துள்ளார்..
சமூக
வகுப்பும் கல்வி வாய்ப்புகள்
·
கல்வி
வாய்ப்புக்களை தீர்மானிப்பதில் சமூக வகுப்பு அனைத்து முக்கிய காரணியாக
தொழிற்படுகின்றன பற்றி பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
·
பாடசாலை
தெரிவோம் வாய்ப்புகளும் பாடசாலைகளில் நீண்ட காலம் தங்கியிருத்தல் பல்கலைக்கழக
அனுமதி போன்ற விடயங்களில் சேவை வகுப்பும், இடைநிலை வகுப்பு கூடுதலான நன்மைகளையும் தொழிலாளர் வகுப்பினர் குறைந்த
நன்மைகளையும் அனுபவித்தனர் என ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
·
மேலைத்தேய
சமூகங்களில் நிலவும் முக்கிய சமூக வகுப்புகளான மேல் வகுப்பினர் ,மத்திய வகுப்பினர்,
தொழிலாளர் வகுப்பினர் என்பவற்றை இனம் காணலாம்.
·
அபிவிருத்தி
அடைந்து வரும் நாடுகளில் விவசாய வகுப்பினரே மிகப்பெரிய சமூக வகுப்பாக உள்ளனர்.
சமூக வகுப்பும் மாணவரும்
முன்பள்ளி தொடர்பாக
ஆய்வாளர்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் முக்கியமானவை.
·
பிள்ளைப்
பருவத்தில் உருவாக்கப்படும் நடத்தைக் கோலங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை குறிப்பாக
ஆரம்ப சமூகமயமாக்கலின் போது பிள்ளையின் ஆளுமை பெருமளவு வடிவமைக்கப்படுகிறது. இவ்வாறான நடைமுறைகளில் ரசமூக வகுப்பின்
செல்வாக்கு அதன்வழி ஏற்படும் வேறுபாடுகள் முக்கியமானவை.
·
சமூக
வகுப்புக்களுக்கு இடையிலான உப கலாசார வேறுபாடுகள் பற்றி ஆராய்ந்த பஸில் பெனஸ்ரின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
·
பேச்சு
கோலமானது இரண்டு வகைப்படும்.
·
1. விரிவான
குறியீடு
·
2. கட்டுப்படுத்தப்பட்ட
குறியீடு
தொழிலாளர் வகுப்பினர்
பொதுவாக கட்டுப்படுத்திய குறியீடும் மத்திய வகுப்பினர் இருவகையான குறியீடுகளையும்
பயன்படுத்தி தொடர்பாடலில் ஈடுபடுவர்
·
முறைசார்
கல்வி மொழிப் பிரயோகம் கூடியது பாடசாலைகள் உலகலாவிய விடயங்களை பரிமாற வேண்டும்
மாணவர் இடத்தில் இவற்றை விருத்தி செய்ய பொருத்தமான மொழிப் பிரயோகம் அவசியம்.
·
தொழிலாளர்
வகுப்பினை சேர்ந்து பிள்ளை கட்டுப்படுத்திய ஒழுக்கத்திற்கு பழக்கப்பட்டவர்கள் ஆகையால்
கல்வி கல்விமுறைகளினால் எதிர்பார்க்கப்படுகின் சில திறன்களை பெறுவதற்கான
சந்தர்ப்பங்கள் குறைவு.
·
தொழிலாளர்
வகுப்பினரின் கலாசாரத்தின் அம்சங்களை பாதிப் அதனால் பிள்ளைகளின் கல்வி அடைவு
பாதிப்பை ஏற்படுத்துகிறது.
·
வறுமை
குட்பட்ட பிள்ளைகள் உயர்கல்வி
படைப்புகளுக்கு
தேவையான முக்கியமான திறன்கள் மனப்பாங்குகள் மற்றும் பெறுமானங்களை பெற்றுக்
கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு குறைவு
·
பெற்றோருடைய
கல்விநிலை வருமானம் என்பன மாணவரின் பாடசாலை கல்வியுடன் நெருங்கிய தொடர்புடையன.
·
பாடசாலை
தெரிவு பாடசாலைக் கல்வியில் நீடித்திருக்கும் காலம் என்பவற்றை சமூக வகுப்பை
தீர்மானிக்கின்றது.
·
அனேகமான
ஆசிரியர்கள் மத்திய வகுப்பு சேர்ந்தவர்கள் இருப்பினும் சமூக வகுப்பின்
அடிப்படையில் இயங்கி வரும் பாடசாலைகள் கிராமப் புறங்களில் காணலாம்.
·
உயர்
வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கற்பதற்கான பாடசாலை இனம், மொழி பால்நிலை அடிப்படையில் தனித்தனியாக காணப்படுகின்றது
·
எனினும்
கிராமப்புற மாணவர்களுக்கு உயர்தர பாடசாலை பல கலவன் பாடசாலைகளாக தொழிற்படுகின்றது.
·
உயர்
சமூக வகுப்பு தொடர்புடைய பாடசாலைகளில் மாணவருக்கு வழங்கப்படும் கல்வி மற்றும்
இணைப்பாடவிதான செயற்பாடுகள் உயர் மட்டத்தில் காணப்படும்.
·
இலங்கையில்
நகர் மற்றும் கிராமப்புற பாடசாலைகளில் வழங்கப்படும் கல்வியும் தராதர வேறுபாடு சமூக
வகுப்பு செல்வாக்கு செலுத்துகின்றது.
·
உயர்வகுப்பு
மாணவர்களுடன் ஒப்பிடும்போது கிராமப்புற அல்லது பின்தங்கிய பிரதேசங்களில்
மாணவருக்கு வழங்கப்படும் கல்வியின் தராதரம் ஒப்பீட்டளவில் குறைவு.
இலங்கையின்
சமூக வகுப்பு வகைகள்
·
·
இலங்கையின்
சமூக வகுப்பின் வகைகள் பற்றி நோக்குவோமாயின் உலகளாவியரீதியில் எடுத்துக்காட்டப்பட்ட
தொழில்சார் கௌரவ அளவு திட்டமானது இலங்கைக்கு பொருத்தமற்றது என இலங்கை ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
·
அதாவது,
·
கைத்தொழில்
சமூகங்களுக்கும் விவசாய சமூகங்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு.
விவசாய சமூகங்களில் நிலவும் சாதி அமைப்பு முறை.
·
சில
வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் மதிப்பு எமது நாட்டுச் சூழலுக்கு மட்டும்
உரியதாக காணப்படல்.
·
இலங்கையில்
காணப்படும் சமூக வகுப்புகள்
·
மேல்
நடுத்தர வர்க்கம்
·
கீழ்
நடுத்தர வர்க்கம்
·
தாழ் சமூக
வர்க்கம்
அமெரிக்க சமூக வகுப்பு முறைமை
·
அமெரிக்கா
திறந்த அமைப்பை கொண்டதொரு சமூகம் என குறிப்பிட்டாலும் செல்வம் மற்றும் கல்வி என்ற
அடிப்படையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என காணப்படுவர்
வருமானம் கலாசார திறன் வாழ்க்கை பங்கு ஒழுக்க விழுமியம் அல்லது பெறுமானம்
ஆகியன ஒருவரில் இருந்து ஒருவர் வேறுபடுகின்றது.
ஐக்கிய அமெரிக்கா சமூகமானது 6 வகுப்பு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1. உயர் வகுப்பினர்
2. உயர் மத்திய வகுப்பினர்
3. மத்திய வகுப்பினர்
4. தொழிலாளர் வகுப்பினர்
5. வறிய தொழிலாளர்
6. கீழ் வகுப்பினர்
பிரித்தானியாவின் சமூக வகுப்பு
பிரித்தானிய அரசாங்கத்தின் புள்ளிவிபரத் திணைக்களத்தின்
பொறுப்பான பதிவாளர் நாயகம் தொழில் அடிப்படையில் 5 சமூக வகுப்பு இனங் காணப்பட்டது.
வகுப்பு
1
முதலாளிகள்
,முகாமையாளர், விஞ்ஞானி, உயர் தொழிலாளர்களான மருத்துவர் ,ஆசிரியர், சட்டத்தரணி.
வகுப்பு
2
கீழ்நிலை
உயர்தொழில் சார்ந்தோர், விமானி, ஆசிரியர்.
வகுப்பு
3
தேர்ச்சி பெற்ற, தொழிலாளர், எழுதுவினைஞர் ,செயலாளர்
வகுப்பு
4
உப
தேர்ச்சி தொழிலாளர்கள், தபால்காரர் ,தொலைபேசி
இயக்குனர், பண்ணை தொழிலாளர்.
வகுப்பை
5
தேர்ச்சி பெற்ற தொழிலாளர்
0 Comments
THANK YOU COMMIN US