சமூகமயமாக்கல் வகைகள்
- ஆரம்ப சமூகமயமாக்கல்
- எதிர்பார்க்கப்படும் சமூகமயமாக்கல்
- பால்நிலை சமூகமயமாக்கல்
- வகிபங்கு மாற்றம்
- மீள் சமூகமயமாக்கல்
>ஆரம்ப சமூகமயமாக்கல்
நாளாந்த வாழ்க்கையில் பங்கேற்க தேவையான தகவல்களையும் அறிவினையும் பெற்றுக்
கொள்ளும் செய்முறை ஆரம்ப சமூகமயமாக்கல் எனப்படுகின்றது.
தனியார் ஒருவரின் வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்தில் இடம்பெறும் சமூகமயமாக்கல்
அடுத்துவரும் கட்டங்களில் இடம் பெரும் சமூக மயமாக்களுக்கும் இடையில் வேறுபாடுகள்
உள்ளன.
ஆரம்ப சமூகமயமாக்கலிலேயே அடிப்படை விடயங்கள் டொய்லட் ட்ரெய்னிங் (
Toilet Trainnig) மொழித் தேர்ச்சி என்பன இடம்பெறுகின்றன.
இப்பருவத்தில் பிள்ளைகள் உண்மை சொல்வதற்கும் சமூக அடிப்படை பெறுமானங்களை கற்பதற்கும் அவற்றிற்கு தேவையான ஊக்கிகளும் கற்பிக்கப்படுகின்றன.
பால்நிலை சமூகமயமாக்கல்
பால்நிலை சமூகமயமாக்கலில் பால் வகை ( sex ) மற்றும் பால்நிலை ( Gender )என்பவற்றுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்ளுதல் முக்கியமானது.
பால் பால்வகை எண்ணிக்கையில் உயிரியல் அடிப்படையில் பெண் மற்றும் ஆணுக்கு உரிய இயல்புகளை எடுத்து காட்டுதலும் பால்நிலையால் ஆண்
மற்றும் பெண் தன்மைகுறிய எதிர்பார்ப்புகள் இடம்பெறுதலும் கவனத்தில் கொள்ள
வேண்டியவை.
பிறப்பிலிருந்து பிள்ளைகளை பால்வகைக்கு ஏற்ற வகையில் பெற்றோர் கவனித்து
வருகின்றனர் பெண்பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளும் வித்தியாசமான எதிர்பார்ப்புகளுடன்
வளர்க்கப்படுகின்றனர்.அவர்களுக்கு வழங்கப்படும் பணி வெவ்வேறாக அமைகின்றன.
தொழில்சார் வகிபாகங்களுக்கும் பால்வகைக்கு ஏற்ற வகையில்
கற்பிக்கப்படுகின்றனவீட்டில் விளையாடும்போது, விளையாட்டுப் பொருட்களை தெரிவு செய்தல் மற்றும்
பயன்படுத்துவதிலும் வேறுபாடுகள் உள்ளன.
வெகுசன ஊடகங்களும் ஏனைய நிறுவனங்களும் பால்நிலைக்குரிய வகிபாகங்களை வலியுறுத்துவதனை அவதானிக்கலாம்பாடசாலைகளில் ஒப்படைக்கபடுகின்ற வேலைகளிலும் இதனைக் கண்டுகொள்ளலாம் பால்நிலைச் சமத்துவத்தினை பேணக்கூடிய வகையில் இடம்பெற வேண்டும் என்பது இன்று வலியுறுத்தப்பட்டு வரும் முக்கியமானதொரு கருத்தாகும்.
எதிர்பார்க்கப்படும் சமூகமயமாக்கல்
எதிர்பார்க்கப்படும் சமூகமயமாக்கல் மூன்று கூட்டங்களுடன் தொடர்பு படுகிறது.
முதலில் அவைப் பற்றி சிந்தித்தல், அடுத்து பரிசோதித்தல், மூன்றாவது புதிய வகிபங்குடன் இணைந்து நடத்தைக்கு முயற்சித்தல்
உதாரணமாக விளையாட்டு வீடு எனும் விடயம் தொடர்பாக பிள்ளைகள் தாமாகவே பெரியவர்களுடன் ஒன்றிவிடுகின்றனர்.
v நவீன சமூகங்களும் உறுப்பினரை புதிய வகிபங்குகளை ஏற்பதற்கு ஆயத்தம் செய்ய வேண்டியுள்ளது.
v
பாடசாலைகள் பல்வேறு சமூகத் திறன்களை திட்டமிட்டு, அவற்றை பழக்கப்படுத்தி கொள்வதற்கு ஏற்ற வகையில்
அறிவு பரிமாற்றங்களைச் செய்ய முற்படுகின்றன.
v இவ்வாறு மாற்றம் உருவாகும் போது புதிய
சூழலுக்குப் பொருந்தும் வகையில் வகிபங்குகளை மாற்றிக் மேற்கொள்ளுதல் அவசியமாகின்றது.
மீள் சமூகமயமாக்கல்
சில வகையான வகிபங்கு மாற்றங்கள் மீள் சமூக
மயமாக்கலை வேண்டி நிற்கின்றன.முன்னர் பெற்றுக்கொண்ட நடத்தை கோலங்களுக்கு மாறாக புதிய நடத்தை கோலங்களை கற்றுக் கொள்வதை இது குறிக்கும்.
உதாரனமாக பாடசாலைகளில் கற்றுக் கொள்கின்ற நடத்தைகளால் வீட்டில் கற்றுக்கொண்ட
நம்பிக்கைகள், பெறுமானங்கள், பழக்கவழக்கங்களை மறுக்க வேண்டிய சூழல்
தோன்றுகின்றது.
எனவே சுய வரையறைகளுடன் புதிய வகிபங்குகளுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு, ஏற்ப மாறும் தன்மை உண்டாகின்றது.
தனித்து வாழும் சமூகங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் புதிய சூழலுக்கு தம்மை
உட்படுத்தும் வேளையில் மீள் சமூகமயமாக்கல் அவசியமாகின்றது.
வகிபங்கு மாற்றம்
குழந்தை பருவத்திலிருந்து வளர்ந்தோராக வரும் காலத்தில் அவர்கள் தொடர்ந்து புதிய வகிப்பங்குகளைக ஏற்க வேண்டி ஏற்படுவதை வகிபங்கு மாற்றம் என சமூகவியலாளர்கள் அழைக்கின்றனர்.
இம் மாறுநிலை பருவத்தில் ஒருவர் தமக்குமள்ளும் தமது வகிபங்குக்கும் இடையில் பொதுவாக நிச்சயமற்ற தன்மையும் அழுத்தங்களையும் அனுபவிக்கின்றார்.
காலப்போக்கில் இவை இரண்டுக்குமிடையில் ஒருவகை இசைவினை
பெற்றுக்கொள்கின்றார்
இன்னெரு வகையில் இதனை பெறுமானங்கள்,நம்பிக்கைகள்,நடத்தைகள், சுய விளக்கம் என்பவற்றில் நிகழும் இசைவாக்கமாகவும் கருதலாம். சுய பிம்பம் (
image ) என்பவற்றில் நிகழும் இசைவாக்கமாகவும் கருதலாம்.
நன்றி
2 Comments
nice
ReplyDelete8
DeleteTHANK YOU COMMIN US