1 அறிமுகம்
2. xழுக்கக் கோவை
3.
ஆசிரியர் ஒழுக்கக் கோவை
4.
ஆசிரியருக்கு ஏன் ஒழுக்கக்கோவை அவசியம்
5.
ஆசிரியர்ஒழுக்கக்கோவையில்
அடங்கும் முக்கியமான விடயங்கள்
6.
ஆசிரிய தொழிலுடன் இணைந்த பொறுப்புக்கள்
7.
சுற்று நிருப
இலக்கம் 2009/26
8. சுற்று நிருப இலக்கம் 1997.07.01
9. ஆசிரியர் ஒழுக்க விழுமியத்தில் கடைபிடிக்க வேண்டிய பொதுவான விடயங்கள்
10 ஆசிரியர் தமது ஒழுக்க விழுமியங்களை எட்டு வகையான முறையில் கடைபிடித்தல்.
11 ஆசிரியர் தனிப்பட்ட ரீதியில்
1 ஆசிரியர் பெற்றோருக்குப் பதிலாக
1 ஆசிரியர் அறிவு வழங்குபவர், திறமை மற்றும் சிறந்த மனப்பாங்கு விருத்தியாளராக
1 ஆசிரியர் ஆக்கத்திறன் மிக்கவராகவும் மற்றும் வழிகாட்டுநர்
மற்றும் ஆலோசகராகவும்
ஆசிரியர் மதிப்பீட்டாளராக
1 ஆசிரியர் தொழில் சார் உத்தியோகத்தராக
1 ஆசிரியர் முகாமைத்துவ
பொறுப்பாளராக
1 சமூகம் மற்றும் தேசத்தின் முன்னோடியாகச் செயற்படல்.
அறிமுகம்
ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம் உயிரனும் ஓம்பப்படும்'
விழுமியம் என்பது தனிநபர்; சமூகம்; வாழ்க்கை என்பவற்றை வளப்படுத்தி அதனை அர்த்தமுள்ளதாக மாற்றும் குணநல பண்பாகும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் தனிமனித விழுமியங்களான அன்பு, தைரியம், ஒழுக்கம், அகிம்சை, அறம் செய்தல், சமாதானம், நேர்மை என இன்னும் பல மனித விழுமியங்கள் இருத்தல் அவசியமாகும்.
இன்றைய நவீன உலகில் அனைத்து விடயங்களும் தொழிட்பத்தின் அதீத வளர்ச்சியினால் உள்ளம் கைக்குள் சுருங்கி விட்டது. அவ்வாறனதொரு நிலையில் தற்போது அதிகமாக பேசப்படும் விடயம் தனிமனித விழுமியமாகும். ஒரு குழந்தை பிள்ளைப்பருவத்தில் விழுமியக் கல்வியைக் கற்று தனது ஐந்து அல்லது ஆறுவயதாகும்போது ஒரு மாணவராக தனது பாடசாலைக் கல்வியை தொடர்கின்றது.
அங்கு தனது விழுமியக்கல்வியை சிறப்பாக தொடர்வதற்கு 'இளமையில் கல்வி சிலையில் எழுத்து' என்ற முதுமொழிக்கிணங்க அவன் குழந்தைப் பருவத்தில் கற்ற விழுமியமானது அக் குழந்தை பாடசாலையிலும் விழுமியக் கல்வியை தொடர்வதற்கு பெரிதும் உதவி புரிகின்றது.
மாணவராக பாடசாலை சென்றதும் அவனுக்கு பெற்றோர், தெய்வம் எல்லாம் கல்வியை போதிக்கும் ஆசிரியராவார். ஆசிரியர் மாணவரது உறவானது தந்தை மகன் உறவைப் போன்று இரத்தமும் சதையுமாக பிண்ணிப்பினைகின்றது. பாடசாலையில் அறிந்தவர் - அறியாதவர் என்ற நிலையில் ஆசிரியர் மாணவர் உறவு காணப்படும்.
அதாவது இருள் நிறைந்த நிலையில் காணப்படும மாணவர் மனதில் அறிவு எனும் ஒளியைப் புகட்டி இவ்வுலகிற்கு அறிவு, திறன், மனப்பாங்கு என்பன விருத்தி பெற்று சிறந்த விழுமியப் பண்புள்ள நற்பிரஜையை உருவாக்குபவராக ஆசிரியர் காணப்படுவார். ஒரு மாணவரது மனதில் விழுமியக் கல்வியை புகட்டுவதில் ஆசிரியர் மட்டுமல்லாது பாடசாலை முதல்வர் பகுதி தலைவர்கள் சக மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் என அனைவரது நடவடிக்கைகளையும் பார்த்தே ஒரு மாணவர் சிறந்த முறையில் வழுமியக் கல்வியை பெறுகின்றார்.
ஒழுக்கக் கோவை
எந்த ஒரு தொழுக்குமாக சிறப்பான பணிகள் , நடத்தைகள் பொறுப்புக்கள், ஆகிய மூன்றுஅம்சங்களும் உள்ளடங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட நியமங்கள் அத்
தொழிலுக்குரிய ஒழுக்கக்கோவை எனப்படும் .
ஆசிரியர் ஒழுக்கக் கோவை
தம்மால் தமக்காக விதிக்கப்பட வேண்டிய
நேர்மை, பொறுப்பு,மற்றும் முன்மாதிரி, சமூகப் பொறுப்புகள் போன்ற நபர்கள் ரீதியிலான சமூகம்
எதிர்பார்க்கும் ஆசிரியர்களின் சிந்தனைகள், பொறுப்புக்கள்,பழக்கவழக்கங்கள் என்பன ஆசிரியர் ஒழுக்கக்கோவை எனலாம்.
ஆசிரியர் என கருதப்படுபவர் கல்வி தொடர்பான பொறுப்புக்கள்
கொண்ட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையில் உள்ள கல்வி சார் உத்தியோகஸ்தர்கள்
என்போராவார்.
ஆசிரியருக்கு ஏன் ஒழுக்கக்கோவை அவசியம்
·
ஆசிரியர் தொழில் கௌரவத்தை
பாதுகாப்பதற்கு.
·
பாடசாலையின் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும்
பேணுவதற்கு.
·
தொழிலின் பொறுப்பேற்றலையும் வகை கூறலையும் பாதுகாப்பதற்கு.
·
ஆசிரியர் இளஞ்சந்ததியினரை உருவாக்குபவர் என்ற வகையில் முன்மாதிரியாக
இருப்பதற்கு தொழில் தொடர்பான அதிக அர்பணிப்பை மேற்கொள்வதற்கு.
ஆசிரியர்ஒழுக்கக்கோவையில்
அடங்கும் முக்கியமான விடயங்கள்
§ ஆசிரியர் உடையில் பகட்டில்லாத
தன்மையும் அவற்றின் பொருத்தத் தன்மையும் வெளிக்காட்டுதல்.
§ ஆசிரியர் சொல்லாலும் செயலாலும் நேர்மையானவராயிருத்தல்.
§ சாதி ,இனம், சமூக அந்தஸ்து, போன்ற எதனையும் கருதாது எல்லா
மாணவரையும் நியாயமாகவும், சமமாகவும் கவனித்தல்.
§ ஆசிரியர் தமது நடத்தையூடாக எல்லோரது
கவனத்தையும், கௌரவத்தையும் பெறல்.
§ தொழிலுக்கு பங்கம்
விளைவிக்கத்தக்க துர்ப் பழக்கவழக்கங்களிலிருந்து ஆசிரியர் விலகியிருத்தல்.
ஆசிரிய தொழிலுடன் இணைந்த பொறுப்புக்கள்
· மாணவரது கௌரவத்தை
பாதுகாப்பதற்கு ஆவண செய்தல்.
· நேர முகாமைத்துவத்தைசரரியாக
கடைபிடித்தல்.
· மாணவரது தனிப்பட்ட தகவல்களை, பிரச்சினைகளை அவர்களுக்கு
பங்கம் விளைவிக்காத வகையில் பயன்படுத்தல்.
· மாணவரது முன்னிலையில் நிர்வாகத்தை
விமர்சிக்காதிருத்தல், நிர்வாகத்திற்கு எதிராக மாணவரை
தூண்டாதிருத்தல்.
· மாணவரை சுய கற்றலின் பால்
வழிப்படுத்தல்.
சுற்று நிருப இலக்கம் 2009/26
எஸ். யு.விஜேரத்ன.( பதில் கல்வி செயலாளர் – கல்வி அமைச்சு)
பாடசாலையினுள் கையடக்க
தொலைப்பேசிப் பாவனை
·
பாடசாலை மாணவர்களை படம்
பிடித்தல், ஒழுங்கீனமான பாலியல் சார்ந்த காட்சிகளை
சேகரித்து வைத்திருத்தல். செய்திகள்
காட்சிகளை அனுப்புதல். பொழுதுபோக்காக
அவற்றை பார்ப்பதற்கு ஈடுபாடு கொண்டிருத்தல்.
·
அழித்தவுடன்
ஒழுக்கப் பிரச்சினையிலிருந்து விலகுவதற்கு வழி.
·
கையடக்கத்தொலைபேசி பாடசாலைக்கு
கொண்டு வருதல், பாவித்தல் முற்றாகத் தடை, பணியாளர்கள் (ஆசிரியர்) கடமை நேரத்தில்
கையடக்கத்தொலைபேசியை செயலிழக்கச் செய்து வைத்தல்.
·
பாடசாலைக்கு ஒழுங்கீனமான பாலியல்
செயற்பாடுகள் உள்ளடக்கிய அனைத்து அச்சுப்
பதிப்புகள் இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டு வருதல், வாசித்தல்,பாவித்தல் முற்றாகத் தடை.. புகைப்படக்கருவி, வீடியோகருவி அனுமதியின்றி
கொண்டுவருவதற்குத் தடை..
சுற்று நிருப இலக்கம் 1997.07.01 எம். டீ. டீ பீரிஸ்
பாடசாலைக்குள் புகைத்தல், மதுபானம் அருந்தல் தடை.
· பாடசாலைக்குள் புகைத்தல், மதுபானம் அருந்தல் முற்றாகத் தடை
.
· சிகரட் ,மதுபானம் மாணவர்களை கொண்டு எடுப்பித்தல்
தடை..
· பாடசாலை வளவுக்குள் போசனை சாலையினுள் சிகரட், மதுபானம் விற்பதற்கு முற்றாகத்
தடை.
· பாடசாலை வளவுக்குள் வைபவ
வேளைகளில் புகைத்தல், மதுபானம் அருந்துதல் தடை.
· பாடசாலைக்குள் புகைத்தல்,மதுபானம் அருந்துதல் தடைசெய்தல் தொடர்பான பதாகைகள், விளம்பரப்பலகைகள் தொங்கவிடப்பட்டிருத்தல்.
· மாணவர், ஆசிரியர், பெற்றோர், ஏனையோர் மதுபானம், போதைப்பொருள் கொண்டுவருவதற்கு ஆயத்தமாயின்
உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தல்.
·
ஆசிரியர் ஒழுக்க விழுமியத்தில் கடைபிடிக்க வேண்டிய பொதுவான விடயங்கள்
Ø நேர முகாமைத்துவத்தை பேணலும் கடமையில் ஈடுபடலும்.
Ø எண்ணம்,சொல், செயல் என்பவற்றில் நேர்மை உடையவராய் இருத்தல்.
Ø கல்வி கற்பதற்கான பிள்ளைகளின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளல்.
Ø பாரபட்சம் இல்லாமல் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு உதவுதல், வழிகாட்டுதல்,ஊக்குவித்தல்.
Ø மாணவர்களின் தனியாள் வேறுபாடு, சுய கௌரவத்திற்கு மதிப்பளித்தல்.
Ø பொருத்தமான அக,புற தோற்றத்தை கொண்டிருத்தல்.(உடை,முகம்)
Ø உடல், உள பாதிப்பை ஏற்படுத்தாதிருத்தல்.
Ø பாட முழு நேரத்தையும் மாணவரின் கற்றலுக்கு செலவு செய்தல்.
Ø அர்ப்பணிப்புடனும்,தியாக உணர்வுடனும் பணியாற்றல்.
Ø பாட வேளையில் பரீட்சை மண்டபத்தில் வேறு ஆசிரியர்களுடன் கதைப்பதை தவிர்த்தல், தொலைபேசி பாவனையை தவிர்த்தல்.
Ø கதிரையில் இருந்து கற்பிப்பதை தவிர்த்தல்.
Ø கதிரை சட்டத்திலோ,மேசையிலோ அமர்ந்து பேசுதல் கூடாது.
Ø பரீட்சை மேற்பார்வைக் கடமை ,பேப்பர் திருத்துதல் ஒரே நேரத்தில் செய்யாதிருத்தல்.
Ø காலை கூட்டத்தில் சமூகமளித்தல்.
ஆசிரியர் தமது ஒழுக்க விழுமியங்களை எட்டு வகையான முறையில் கடைபிடிக்க வேண்டும்
1) ஆசிரியர் தனிப்பட்ட ரீதியில்.
2)
ஆசிரியர் பெற்றோருக்குப் பதிலாக.
3) ஆசிரியர் அறிவு வழங்குபவர், திறமை மற்றும் சிறந்த மனப்பாங்கு விருத்தியாளராக.
4) ஆசிரியர் ஆக்கத்திறன் மிக்கவராகவும் மற்றும் வழிகாட்டுநர் மற்றும் ஆலோசகராகவும்.
5) ஆசிரியர் மதிப்பீட்டாளராக.
6) ஆசிரியர் தொழில் சார் உத்தியோகத்தராக
7) ஆசிரியர் முகாமைத்துவத்தின் பொறுப்பாளராக
8) சமூகம் மற்றும் தேசத்தின் முன்னோடியாகச் செயற்படல்.
1. ஆசிரியர் தனிப்பட்ட ரீதியில்
2.
சகல சந்தர்ப்பங்களிலும் ஒழுக்கம் மற்றும் விழுமியத்தை பாதுகாக்கக் கூடியவாறு சுத்தமாக எளிமையான முறையில் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.
போதை,புகைத்தல், வெற்றிலை சாப்பிடல் போன்ற பழக்கங்கள் மற்றும் பல்வகையான முறைகேடான செயற்பாடுகளில் தவிர்ந்திருத்தல்,ஏனையவர்களையும் தவிர்ந்திருக்க உதவுதல்.
தனிப்பட்ட மற்றும் சமூகச் செயற்பாடுகள் தொடர்பான அபகீர்த்திக்கு உட்பட்டோருடனான பழக்கங்களில் இருந்து விலகியிருத்தல்.
தமது செல்வம், குடும்பத் தரம்,உயர் பதவிகள் கொண்டோருடனான நட்பு இருப்பதாக காண்பித்து ஏனைய ஆசிரியர்கள், மாணவர்களை அச்சத்துக்கு உட்படுத்த அல்லது அவர்களுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியவாறான செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல் மற்றும் அவ்வாறு செயற்படும் நபர்களுக்கு முன்னிலையில் கட்டுப்பாடற்ற பழக்கவழக்கங்களை கொண்டிருத்தல்.
தமது சொந்த வாழ்க்கை மற்றும் சமயம் ,அரசியல் போன்றவைகள் தொடர்பாகத் தனிப்பட்ட கருத்தினை அங்கீகரிக்க மாணவர்களை வலியுறுத்துவதில் இருந்து விலகி இருத்தல்.
ஆசிரியர் பெற்றோருக்குப் பதிலாக
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஆசிரியர் ,மாணவர்களின் இடம்சார் பெற்றோர் என்ற சட்ட ரீதியான சிந்தனையை கருத்தில் கொள்ளல்.
v சகல சந்தர்ப்பங்களிலும் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையினைப் பாதுகாத்தல் மற்றும் பெற்றோர் பாதுகாவலர்கள் தொடர்பில் பிள்ளையின் நம்பகத்தன்மையினை உறுதி செய்ய கூடியவாறு செயற்படல்.
v குலம், நம்பிக்கை, ஆண் -பெண் பால்,சமூக நிலைமைகள் ,சமயம், மொழி, பிறப்பிடம், ஆகிய காரணிகளை கருத்தில் கொள்ளாது சகல மாணவர்களுக்கும் நியாயமாகவும் பக்கச் சார்பற்ற அன்பினையும்,கருணை, பாதுகாப்பினையும் வழங்கல்.
v தமது மாணவர்களை தமது பிள்ளைகளை போன்று அழைத்தல்.
v மாணவர்களுக்கு இருக்கக்கூடிய விசேட தேவைகள் ,பிரச்சினைகள் குறித்து விழிப்புடன் இருத்தல் மற்றும் அவ்வாறான மாணவர்களுக்குத் தேவையான வசதிகளையும், நிபுணத்துவ ஆலோசனைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
ஆசிரியர் அறிவு வழங்குபவர், திறமை மற்றும் சிறந்த மனப்பாங்கு விருத்தியாளராக
அறிவினை வழங்குதல் திறமை மற்றும் சிறந்த சிந்தனையை விருத்தி செய்யலை ஆசிரியரின் அடிப்படை பொறுப்பாக கருதி ஆசிரியர் வருமாறு செயற்படல் வேண்டும்.
v ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைப் பிரகடனம்( 1989)இற்கமைய சிறுவர்களிடம் இருக்க வேண்டிய உரிமைகளை (விசேடமாக கல்வி உட்பட )உறுதிப்படுத்த கூடியவாறான செயற்பாடுகள்.
v சகல சந்தர்ப்பங்களிலும் சிறந்த தயாரிப்புக்களுடனும் கூடியதாகப் பொறுப்புக்களை நிறைவேற்றல்.
v வழங்கப்படும் அறிவு சரியானது என்றும் பொருத்தமானது என்றும் மாணவர்களுக்கு உரியது என்றும் உறுதிப்படுத்தல்.
v விசேடமான கற்பித்தல் தொடர்பில் புனிதமான (Holistic)
பிரவேசங்களை பின்பற்றல்பின்பற்றல்.
v கற்பித்தல் காலத்துக்குள் கேள்விகளை கேட்டல் மற்றும் கலந்துரையாட ஆர்வமூட்டி மாணவர்களின் விழுமியத்தியச் சிந்தனைகளை ஊக்குவிக்கச் சந்தர்ப்பம் வழங்குதல்.
v மாணவர்களை சுய கற்க்கைக்கு ஆர்வமூட்டத் தேவையான வசதிகளை வழங்குதல்.
v மாணவர்களின் சிந்தனை விருத்தியாளரர்களாக மற்றும் அதற்காக ஆர்வமூட்டுபவராக செயற்படல்.
v எச் சந்தர்ப்பங்களிலும் தமது மாணவர்களிடம் நிதியினை அறவிட்டு கற்பிப்பதை தவிர்த்தல்.
ஆசிரியர்
ஆக்கத்திறன் மிக்கவராகவும் மற்றும் வழிகாட்டுநர் மற்றும் ஆலோசகராகவும்
ஆக்கத்திறன் மிக்கவராகவும் மற்றும் வழிகாட்டுநர், ஆலோசகராகவும் தமது பொறுப்பின்
கீழ்வரும் மாணவர்களுக்கான அதியுயரிய சேவையினை ஆசிரியர் மேற்கொள்ளல் வேண்டும்.
v இப் பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் அறிவினால், திறமையினால் மற்றும் சிறந்த சிந்தனைகளைக் கொண்டோராகச் செயற்படல்.
v மாணவர்களிடம் இருக்க வேண்டிய பின்னடைவுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனத்துடன் இருக்க வேண்டியதுடன் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தல்.
v பிள்ளைகள் தொடர்பான பலவீனங்கள் அல்லது பிரச்சினைகள் தொடர்பான இரகசிய தகவல்களை அப் பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் சட்ட ரீதியிலான பாதுகாவலர்களைத் தவிர வேறு எவருக்கும் வெளிப்படுத்தாதிருத்தல்.
v பெற்றோறுடன் நல்லுறவை பேணி தேவையான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தமது பிள்ளை தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நம்மை இலகுவாக அண்மிப்பதற்குச் சந்தர்ப்பத்தினை வழங்குதல்.
v எச் சந்தர்ப்பத்திலும் ஆசிரியர் மாணவர் தொடர்புகளை முறையற்ற ரீதியில் பயன்படுத்தாது இருத்தல் மற்றும் மாணவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படும் சந்தர்ப்பங்களில் இருந்து தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
v சகல சந்தர்ப்பங்களிலும் மாணவரின் அறிவு, திறமை மற்றும் சமூக விழுமிய விருத்திக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
ஆசிரியர் மதிப்பீட்டாளராக
மதிப்பீடு மற்றும் கணிப்பீடு கற்றல் -கற்பித்தல் செயற்பாடுகளின் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக கருதி ஆசிரியர்களினால்
v தொடர்ந்தும் அதற்காக தேவையான அறிவினை இற்றைப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த அறிவு, சிந்தனை ஆற்றல் விருத்தியினை ஏற்படுத்தல்.
v மாணவர்களிடம் இருக்க வேண்டிய கற்றல் பின்னடைவுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புடன் இருந்து அவற்றுக்கு தீர்வுகளை காண்பதற்கு தேவையான நிபுணத்துவ ஆலோசனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
v மாணவர்கள் தொடர்பில் எவ்வித பேதங்களுமின்றி தனிப்பட்ட அழுத்தங்கள் இன்றி நெகிழ்வுத் தன்மையுடன் மற்றும் நம்பகத்தன்மையுடன் கட்டியெழுப்ப கூடியவாறான மதிப்பீடு செயற்பாடுகளை செய்தல்.
ஆசிரியர் தொழில் சார் உத்தியோகத்தராக
அறிவு மற்றும் திறமைகளை பெற்றுக் கொண்டுள்ளமையால்
ஆசிரியர் தொழில் சார் உத்தியோகத்தராக கருதப்படுவர்.
v ஆசிரியர் தொழிலுக்கு
பொருத்தமான உயர் சம்பிரதாயங்கள் மற்றும் அதி உன்னத தரத்தினை சகல சந்தர்ப்பங்களிலும் பாதுகாத்தல்.
v தமது தொழில் சார் அறிவு மற்றும் திறமைகளின் செல்லுபடியாகும் தரத்தினை பேணுவதைப் போன்று கட்டாயமாகச் சமகாலப்படுத்தவும் வேண்டும்.
v தமது தொழில் தொடர்பிலான அபிமானம் மற்றும் உணர்வுடன் செயற்படல்.
v சகல மாணவர்களுக்கும் பண்பு சார் கல்வியினை வழங்குவதன் மூலம் பொது மக்களின் நம்பிக்கையினை வெல்லுதல்.
v எதிர்வரும் ஆண்டுக்கான செயற்பாடுகளுக்குத் தேவையான எழுத்து மூல அறிக்கைகள் மற்றும் வாய்மூலத் தகவல்களை உரியவாறு தமது பதிலீட்டாளருக்கு வழங்குதல்.
v தொழில் சார் கௌரவத்திற்குப் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடிய சம்பவங்களை உடனடியாக உரிய தொழில் சார் பொறுப்பாளர்களுக்கு அறிக்கைப்படுத்தல்.
ஆசிரியர் முகாமைத்துவ பொறுப்பாளராக
தமது தொழிலுக்குப் பாதிப்புகள் ஏற்படாத சட்டங்கள்.,உயரிய முகாமைத்துவத்தில் தமக்குள்ள பொறுப்புக்கள் தொடர்பாகத அறிவுறுத்தல்களை வழங்குதல்.
v பாடசாலை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கொள்கைகளை வகுத்தல் மற்றும் அமுல்படுத்த உதவுதல்.
v முகாமைத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றல் மற்றும் பிரச்சினைகளுக்குரிய சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் அமைதியான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
v தமது தொழில் சார் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் பெறுபேறுகள் தொடர்பாகப் பரஸ்பர கௌரவத்தினை ஏற்படுத்தல்.
v சகல கடமைகளையும் உரிய பொறுப்புடன் உரிய செயற்பாடுகள் ஊடாக நியாயமாக மேற்கொள்ளல்.
சமூகம் மற்றும் தேசத்தின் முன்னோடியாகச் செயற்படல்.
- ஆசிரியர்
தொடர்ந்தும்
சமூகத்தின்
மற்றும்
தேசத்தின்
முன்னோடியாகக் கருதப்படுவதால்,
- சமுகத்தின் பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் அப் பிரச்சினைகள் ஊடாக உருவான சவால்களை எதிர்கொள்ளக்கூடியவாறான செயற்பாடுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்தி தேசத்தை நேசிக்கக்கூடிய இளம் சந்ததியினரை சமூகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்தல்.
- v பல்வேறுபட்ட சமூகப்பிரிவுகள்,சமய மற்றும் மொழிப்பிரிவுகளுக்கு இடையிலான சமாதானத்தினைக் கட்டியெழுப்பக்கூடியவாறு மாணவர்களிடம் சிறந்த பண்புகள் மற்றும் விழுமியங்களை விருத்தி செய்து தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திக் கூடியவாறான செயற்பாடுகளைசெயற்பாடுகளை மேற்கொள்ளல்.
- v தமது பாடசாலைக்கு, சமூகத்திற்கு,நாட்டுக்கு மற்றும் தேசத்திற்கு மனப்பூர்வமாகச் செயலாற்றுவதுடன் மாணவர்களையும் அவ்வழிக்கு இட்டுச் செல்லல்.
fffTHANK YOY NOTES BY ANBARASAN 💪💪💪💪💪💪
B




0 Comments
THANK YOU COMMIN US