Breaking News

பாடசாலையும் சமூகக்குழுக்களும்

                          

பாடசாலை என்றால் என்ன? என்பதை நோக்கும் போது

ஒரு மாணவன் தன்னுடைய அறிவுவிருத்தி, ஆளுமைவிருத்தி என்பவற்றை விருத்தி செய்வதோடு எதிர்கால உலகின் கல்வி,சமூக பொருளாதார,அரசியல் போன்ற விடயங்களுக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் மாணவர்களை எதிர்கால உலகிற்கு தயார்படுத்தும் ஒரு சமூக நிறுவனம் பாடசாலை ஆகும்.

“துர்கைம்- கல்வி நிறுவனமொன்றின் முக்கிய நோக்காக இருக்க வேண்டியது எதிர்கால பொருப்புக்களை ஏற்கக்கூடிய விதத்தில் சிறுவர்களை சமூகமயமாக்குதலாகும்.”

சமூக குழு என்றால் என்ன? என்பதை நோக்கும் போது சமூக குழு என்பது ஒரு தொகுதி தனியாட்கள் தமக்குள் பொதுவான அடையாளத்தை இனங்கண்டு உணர்ந்து ஓர் அமைப்புக்குள் உட்பட்ட வழியில் நிரந்தரமான இடைத்தாக்கத்தில் ஈடுபட்டு தமது இலக்குகளையும் நியமங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு குழுவினை சமூகக்குழு எனலாம்.

“குறித்த காலவேலையில் சில உடன்பாடுகளின் அடிப்படையில் இடைவினைதாக்கங்களில் ஈடுபடும் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொண்ட தொகுதி சமூகக்குழு எனலாம்.” 

எனவேதான் தனியாளின் ஆளுமையை வளர்த்தெடுத்து அதன்மூலம் சமூக முன்னேற்றத்துக்கு இட்டுச்சென்று சமூகமானது அழியாமல் பாதுகாக்கும் கருவியாக கல்வி உள்ளது. பிள்ளைகளை வளப்படுத்தி அவர்களை நட் பிரஜைகளாக சமூகத்தில் புகுத்த வேண்டிய பொறுப்பு பாடசாலைக்கு உண்டு.

 

பாடசாலை சமூகத்தின் கட்டமைப்பை பொருத்தே அப்பாடசாலையின்  செயற்பாடுகள் வினைத்திறன் என்பன அமையும். சமூக கட்டமைப்பு சிறப்பான முன்னேற்ற நிலையில் உள்ள போதே அப்பாடசாலை தொழிற்படும் தரமும் உயர்ந்து விடுகின்றது. பாடசாலை சமுதாய அங்கத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாரம்பரியமாக கையாளப்படுகின்ற நியமங்கள் இபெறுமானங்கள்இ நம்பிக்கைகள் இவிழாக்கள் மற்றும் பாரம்பரியங்களை உள்ளடக்கியதே பாடசாலை கலாசாரம் ஆகும்.

 

சமூகத்தில் உள்ள தனி ஆட்களின் கடமை  இபொறுப்புணர்வுகளைஇவளர்த்தெடுப்பதில் ஏனைய சமூக நிறுவனங்களுடன் இணைந்து பாடசாலையும் செயற்படவேண்டும். பாடசாலை சமூக குழு தொடர்பானது மாணவர்களின் கல்வி அடைவின் மீது குறிப்பிட்ட தாக்கத்தை        ஏற்படுத்துவதாகும். உயர் செயலாற்றுகை கொண்ட கற்றல் கற்பித்தல் முறைகளை மேலும் வலுவூட்டும்.

 

சமூகத்தில் நிலவுகின்ற பல்வேறு நிறுவனங்களில் ஒன்றாக பாடசாலையும் விளங்குகின்றது. இந்த வரிசையில் பாடசாலைக்கும் சமூகத்திற்குமான தொடர்பானது நெருக்கமானதாக காணப்படவேண்டும்.

 

இவ்வாறு காணப்படுகின்ற போதே பாடசாலை வளர்ச்சியின் ஊடாக கல்வி விருத்தி ஏற்பட வலி ஏற்படுகின்றது.

 

ஒரு பாடசாலை சிறப்பாக இயங்க வேண்டுமானால் அப்பாடசாலை அமைந்துள்ள சமூகத்தினுடைய பங்கானது மிகவும் இன்றியமையாதது.

 

அது நிதிஇபாதுகாப்பு இமனிதவளம் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடலாம். பாடசாலையுடன் சமூகமானது தொடர்பினை ஏற்படுத்துகின்ற போது பாடசாலை நிர்வாகத்தில் சமூகத்தினர் பங்கு கொள்ளவழியேற்படுகின்றது.

மேலும் பாடசாலை மேம்பாட்டு திட்டத்தில் பாடசாலை அபிவிருத்தி குழுக்களின்  பங்களிப்பு முக்கியமானது. 

07/20/03 சுற்றறிக்கையின்படி  2014/01/01 

வெளிவந்தபாடசாலையைஅடிப்படையாககொண்ட பண்பு ரீதியானஇஅளவுரீதியான இகட்டமைப்பு ரீதியான இஅபிவிருத்திகளை திட்டமிடல்கள் மற்றும் பெறுகை செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிறுபம் மற்றும் வழிகாட்டல்கைநூளில் பாடசாலை  அபிவிருத்திக் குழுவின் பணிகள் பற்றி பின்வருமாறு விளக்கப்படுகின்றது.

1.பாடசாலை திட்டமிடல்

2. சமூகத் தொடர்புகள்

3. பாடசாலையின் மூலதன சொத்து முகாமைத்துவம்

4. பாடவிதானம் இஇணைப்பாடவிதானம் இபாட வெளிக்கள செயற்பாடுகள்

5. பாடசாலையை  அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டம். 

எனவே ஒரு பாடசாலையின் மேம்பாட்டில்  பாடசாலை அபிவிருத்தி குழுக்களின்  பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. 

      சமூகக் குழுமங்கள்

குழுமங்களின் தன்மை வேறுபட்டதாகும் குடும்பங்கள் ஒழுங்கமைவு குறைவான நிலை தொடக்கம் நன்கு ஒழுங்கமைந்த நிலை வரை காணப்படும். குழுமங்கள் சிறியவை தொடக்கம் பெரியவை வரையிலும் காணப்படும் குடும்பங்களுக்கு இடையே காணப்படும் இவ் வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு சமூகங்களை வகைப்படுத்த முயற்சி செய்துள்ளனர் இவ்வாறான வகைப்பாட்டு காக பிரதானமாக அளவுகோல்களை பயன்படுத்தலாம் குழுமங்களில் அடங்கியுள்ள உள்ளோரின் எண்ணிக்கை மற்றும் தொடர்புகளை அடிப்படையாக கொண்டு குழுமங்களின் வகைப்படுத்தலாம் குழுமம் நிலவும் காலப்பகுதிக்கு அமைய குழுமங்கள்  வகைப்படுத்தல் குழுமத்தின்  அமைப்புக்கேற்ப குழுமங்களை வகைப்படுத்தல்.

 

சமூக குழுமங்களின் இயல்பு

பண்டைய காலம்தொட்டு மனித இயல்பு கூட்டாக சேர்ந்து வாழும் தன்மையானதாக காணப்பட்டது. கல்விச் சமூகவியலின் இயல்புகளில் ஒன்று பிள்ளைகளின் கூட்டு வாழ்க்கை தொடர்பாக ஆராய்வதாகும். கல்வி செயல்முறையில் இடம்பெறுகின்ற குழுக்கள் அடிப்படையிலான செயற்பாடுகள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மிக முக்கியமானவையாகும். கற்றல் கற்பித்தலை இயக்குகின்ற ஆசிரியர்கள் குறித்து செயற்பாடுகள் தொடர்பாகவும் குழுக்களின் தன்மை மற்றும் விருத்தி தொடர்பாகவும் சிறப்பாக விளங்கி செயல்படுபவர்களாகவும்  விளங்க வேண்டும்.

சமூகக் குழுக்களின் வகைகளாக 

1.ஆரம்பக் குழுக்களும் இரண்டாம்நிலைகுழுக்களும்

2.முறைசார் குழுக்கள் முறையில் குழுக்கள்

3. சகபாடி குழுக்கள் போன்ற பல்வேறு  இன்னோரன்ன குழுக்கள் காணப்படுகின்றன. 

  ஆரம்பநிலை குழுக்களும் இரண்டாம் நிலை குழுக்களும்

ஆரம்ப குழுக்களும் இரண்டாம்நிலை குழுக்களும் அன்னியோன்யமான தனிப்பட்ட நெருங்கிய உறவை பேணும் குழுவினை ஆரம்ப குழு  என்பர்.( ஊhயசடநள ர்ழசவழn உழழடல ). உளவியல் அடிப்படையில் பல்வேறு நோக்கங்களுடன் கூடிய பொதுவாழ்க்கைக்கு உட்பட்டதாக காணப்படும் . ஆரம்ப குழுவினை இலகு முறையில் எடுத்துக் கூறுவதானால் குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் நாம் என்ற உணர்வு இருக்கும்.

       சமூகத்தில் முக்கிய பங்கினை ஆரம்ப குழுக்கள் வகிக்கின்றன. இக்குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்.

1.சமூகத்திற்கு கட்டுப்பாடு வயதுடையவர்கள் என்ற வகையில் பல பொறுப்புக்களை எடுக்கின்றனர்.

2.உறுப்பினர்களின் நடத்தையை கட்டுப்படுத்தல்.

3.நடத்தைகளை சீர்திருத்தம் மற்றும் சமூக மாற்றம்.

ஆரம்ப குழுக்களை தீர்மானிக்கின்ற காரணிகளாக பௌதிக நிலைமை பௌதீக ரீதியான அண்மிய உறவு நிலை நிலைக்கான முக்கியத்துவம் உள நிலைமை தனிப்பட்ட உறவுகள் உறவின் உள்ளடக்கிய தன்மை உறவினை இயல்பாக ஏற்றுக் கொள்ளுதல் உள்ளக கட்டுப்பாடு பாதுகாப்பு உயர்வு பரஸ்பரஒத்துழைப்பு முதலியவற்றைக் குறிப்பிடலாம்.


இரண்டாம் நிலை குறுழுவை। பொருத்தவரையில் அககுழு உறுப்பினர்களிடையே உறவுகள் மட்டுப்படுத்தப்பட்டவை.

அக குழுக்களும் புற குழுக்களும்

 

அக குழு மற்றும் புற குழு என்ற கருத்து நாங்கள் எங்களுடையது அவர்கள் அவர்களுடையது என்ற விளக்கத்தை தருகின்றது.

ஒரு நாடு பிராந்தியங்கள் சமயங்கள் மற்றும் இனத்துவ குழுக்கள்  எல்லாம் இந்த வகைக்குள் அடங்குகின்றன. 

ஒரு இனம் இன்னொரு இனத்திலும் பார்க்க மேலானது என்ற சிந்தனை குழு உறுப்பினர் இன் நடத்தைகளில் செல்வாக்கு செலுத்துகின்றது.

சகபாடி குழுக்கள்

 

சகபாடி குழுவும் ஆரம்ப குழுவாகஅல்லது முறையில் குழுவாக செயற்படுகின்றது வயதில்  பண்புகளில் ஒத்த தன்மை கொண்டவர்கள் இடம்பெறும் குழுவாகும்.

சகபாடி குழுவானது ஆலோசனை குழுவாகவும் செயற்படுகின்றது.

இக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் ஒவ்வருவரும் ஒருவருடன் தொடர்புடையவராக இருத்தல்.

நாம் என்ற உணர்வு இருக்கும்

நடத்தைகளில் ஒத்த தன்மை காணப்படும்.

குழுவில் உள்ள உறுப்பினர்களின் நடத்தையை கட்டுப்படுத்தல்.

பரஸ்பரம் கட்டுப்பாடுகள் பரஸ்பர எதிர்பார்ப்புஎன்றகுணவியல்புகள்கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.

  முறைசார் குழுவும் முறையில் குழுவும்


கல்வி நிலையங்களில் அவற்றின் விஷேட இலக்குகள் சிலவற்றை அடையும் நோக்கில் திட்டமிட்ட செயற்பாடுகளுடன் கூடியவாறு உருவாகும் குழுக்களை முறைசார் குழுக்கள் எனலாம்.

 

ஓர் இலக்கினை அடைவதற்கு இயைபுபடுத்தப்பட்ட திறன்களையும் அவற்றினை கொண்டுள்ள ஆட்களும் தேவைப்படும்போது முறைசார்  குழுக்கள் உருவாகின்றன.

 

சமூகத்தில் மூன்று வகையான முறைசார் குழுக்களை காணலாம்.

1.தன்னார்வ நிறுவனங்கள்

        2.முழுமையான நிறுவனங்கள்

       3.பணிக்குழு ஆட்சி என்பனவாகும்

பாடசாலையில் தமது நோக்கங்களை நிறைவு செய்யும் பொருட்டு முறைசார் குழுக்கள் செயல்படுகின்றன அவையாவன.

1. சுற்றாடல் மன்றம் - சுற்றாடலை பாதுகாத்து பேணல்.

2.மாணவர் மன்றம் - மாணவரது திறமைகளை வெளிக்கொண்டு. 

3.பழைய மாணவர் சங்கம் - பாடசாலை விருத்திக்கு பணியாற்றல்.

4.சாரணியம்- சமூக சேவைகள் செய்து விருத்தி செய்தல்.

5.கடெற் அமைப்பு -  சமூகத் தொடர்புகளை பேணி பணியாற்றல்.

முறைசார் குழுமங்களின் பயன்கள்

நிறுவன பணிகள் இலகுபடுத்தப்படும்

இடைவினை தாக்கங்களின் மூலம் உறவு பலப்படும்.

பாரிய குழுக்களில் தோன்றும் பிரச்சனைகளை தீர்க்க உதவும்.

உடன்பாடான செல்வாக்குகள் மேலோங்கும்.

கற்றல் கற்பித்தல் செயல் ஒழுங்கு வினைத்திறன் மிக்கதாக அமையும்.

குழுக்கள் இடையே பரஸ்பரம் உதவும் மனப்பான்மை விருத்தியடையும்.

முறைமையில் குழுக்கள் அல்லது முறைசாரா குழுக்கள்

 

உத்தியோகபூர்வமற்ற நிறுவனங்கள் அலுவலக சட்டத் திட்டங்களுக்கு உட்படாத வகையில் கூட்டு சேரும் தனிநபர் மக்கள் எவ்வளவு சிறப்பாக அமைக்கப்பட்ட போதிலும் எந்த அளவு செயல்திறனுடன் செயற்பட்ட போதிலும் அவை ஒழுங்கமைப்பான உள்ளேயே தனியாளுக்கிடையே தொடர்புகள் கட்டியெழுப்பபடுகின்றமையாகும்.

 

பாடசாலையில் முறைமையில் குழுக்கள் தோன்றுவதற்கான காரணிகள்

முறைமையான அமைப்பின் இறுக்கமான தன்மைகள் காரணமாக தனியாரின் சமூகத் தேவைகள் நிறைவேறாமல். 

பரஸ்பர உதவி தேவைப்படல்

தனி நபர்கள் நெருக்கமாக வாழ்தலும் நிதமும் சந்தித்தாலும்

விசேட செயற்பாடுகளில் ஈடுபடல்

இன மத கலாச்சார இயல்புகள் காரணமாக சிறப்பான ஆற்றல் வெளிப்படல். (இயல்பான ஊக்கங்கள் தேவைகள் காரணமாக)

முறைமையற்ற ஒழுங்கமைப்பு தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும் இவ்வாறு தோன்றுகின்ற முறைசாரா குழுக்களின் பண்புகள்
 

அங்கத்தவர்கள் தாமாகவே ஒன்றுசேர்வார்கள்.

குறித்த சட்ட திட்டங்கள் ஒழுங்கு அமைப்புக்கு ஏற்ப அமைவதில்லை.

அங்கத்துவ உறுதிப்பாடு கிடையாது.

பெரும்பாலும் கலந்துரையாடலில்முடிவெடுக்கப்படும்.

உறுப்பினர்களிடையே உழைப்பு உயர்வு.

சுதந்திரம் காணப்படும்

இவற்றின் ஒத்துழைப்பு தன்மை மிக உயர்வானது

பரஸ்பர இணக்கம் மதித்தல் சுதந்திரம் என்பன காணப்படும்.

பாடசாலையில் உள்ள முறைசாரா ஒழுங்கமைப்புக்கள்
 

ஆசிரியர் குழுக்கள்

மாணவர் குழுக்கள்

ஆசிரியர் மாணவர் குழுக்கள்

அதிபர் -ஆசிரியர் சேவையாளர்கள் குழு

சேவை ஆட்களின் குழு என்பனவாகும்

 

முறைமையில் குழுவின் அங்கத்தவர் என்ற வகையில் மாணவர்  பெரும் சமூகத் திறன்கள்.

ஒத்துழைத்து கூட்டாக செயல்படல்

சுயாதீனமான தொடர்பாடல் திறன்கள்

பொது அங்கிகாரம் இபொது இலக்குகளை உருவாக்குதல்.

அனுகூலங்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ளல்.

முறைமையில் குழுக்களால் முறைசார் பாடசாலை அமைப்புக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள்.
 

முறையான அமைப்பின் இடைத் தொழிற்பாட்டு தடைகள் ஏற்படுத்தல்.

பொது குறிக்கோள்களை அடைவதற்கு தடையாக அமைதல்.

ஒற்றுமை குறைதல் முரண்பாடுகள் மோதல்கள் ஏற்படல்.

முறைசார்ந்த அமைப்புக்கு சவால் விடுதல்.

வளங்கள் விரயமாக்கபடல்.

சமூகத்தில் காணப்படும் பல்வேறு நிறுவனங்களும் பாடசாலையும் ஒன்றாகும் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு நெருக்கமானதாக காணப்பட வேண்டும் இவ்வாறு காணப்படுகின்ற போது பாடசாலை வளர்ச்சியில் கல்வி விருத்தி ஏற்பட வழி ஏற்படுகின்றது.

பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் உடைய பிரதான குறிக்கோளாக காணப்படுவதே சமூகத்துடனான நெருங்கிய தொடர்பாகவும்.

இன்றைய சூழலில் இத்தொடர்பானது பெரும்பாலும் இல்லை என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை காணமுடிகின்றது இதற்கு காரணம் பாடசாலையானது சமூகத்தினால்கவனிக்கப்படாமையாகும்

பாடசாலையில் பெற்றோர்களையும் நலன் விரும்பிகளையும் இணைக்கும் வகையில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக இன்று பாடசாலைகள் தோறும் அபிவிருத்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு அடிக்கடி குழுக்கள் ஒன்றுகூடி தீர்மானங்களை எடுக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

பாடசாலையானது சமுதாயத்திலிருந்து விலகாமலும் சமுதாயமானது பாடசாலையின் சகல செயற்பாட்டிற்கும் உறுதுணையாகவும் இருந்தும் பாடசாலை சமூக உறவை விளங்கிக்கொண்டு மேம்படுத்துவதன் மூலம் கற்பித்தல் செயற்பாடுகளை விருத்தி செய்யலாம். பாடசாலை முகாமைத்துவ குழுவும் பாடசாலை அபிவிருத்தி குழுவும் இணைந்து பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் பாடசாலையும் சமூகமும் இணைந்து பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.

 

மேலும் குறித்த கலாச்சார சூழலுக்கு அமைவாக சமூகம் மற்றும் கட்டுப்பாடட்டுக்கு முறையில் சமூக-பொருளாதார செய்முறை கூறியதாக சமூக வர்க்கம் அந்தஸ்து  நிலைகளின்படி  இணைமொழி ஏனைய குழுமங்களுக்குறிய  வகையில் செயற்படுவதன் மூலம் சமூக மயமாக்கலை ஏற்படுத்துகின்றன பாடசாலை.

 

பாடசாலையில் காணப்படும் சமவயது பொருட்களினால் ஏற்படுத்தப்படும் சமூகமயமாக்கல் முக்கியமானது இதை வயது இவகுப்பு இவருமானம்இ அந்தஸ்து பாராமல் ஏற்படும் நட்பினால் மாணவர்களிடையே ஏற்படுத்தப்படும் பிள்ளைகள் ஒன்று சேரும் போது நற்பண்புகள் அல்லது தீய பண்புகள் இரண்டிற்குமே வித்திடலாம்.

  

பாடசாலை மற்றும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் காலத்திற்கு காலம் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமையினை காணமுடிகின்றது.

1960 ஆண்டில் கொண்டுவரப்பட்ட வேலை அனுபவம் எனும் திட்டம்.

1972 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட தொழில் முன்னிலை பாடம்.

1984 இல் பாடசாலை மட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை உருவாக்க.

1979 பெற்றோர் சாசனம்.

1976 ஆம் ஆண்டு நூறு பிள்ளைகளையும் ஒரு அல்லது இரு ஆசிரியர்களை கொண்ட சிறிய பாடசாலை அபிவிருத்தி திட்டம்.

போன்ற செயற்பாடுகளை கூறலாம் எனவே பாடசாலையுடன் பின்வரும் சமூகக் குழுக்கள் சட்டங்கள் அடிப்படையில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

யுனெஸ்கோ நிறுவனத்தால் 1970 இல் நியமிக்கப்பட்ட சர்வதேச ஆணைக் குழுவின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட வாழ்க்கைக்கான கல்வி எனும் அறிக்கையில் பாடசாலைகளில் இடம்பெறும் முன்னேற்றமானது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான வகபங்கினை கொண்ட செயல்முறை தொடர்புகள் உடனேயே நிகழ்வதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவேதான் மேற்கூறப்பட்ட சட்டதிட்டங்கள் பின்பற்றப்படுகின்றது.

 

பாடசாலை சமூக குழுக்களும் என்பதை நோக்கும்போது பாடசாலையும் ஒருவகையில் சமூகம் என  ஐவர் மொரிஸ் 1978  ஆண்டு எடுத்துக் கூறினார். பாடசாலைகளும் எதிர்பார்த்த நோக்கங்களை நிறைவேற்ற மாணவர் ஆசிரியர் மற்றும் பெற்றோர் குழுக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றனர்.

 

பாடசாலையில் முறைசார் நிர்வாக முறை சிறந்து விளங்குவதற்கு பின்வரும் விடயங்கள் இன்றியமையாதன அறிவு பேங்க்  எனும் அறிஞர்1976 ஆண்டு எடுத்துக் கூறினார் அவையாவன.

 

முதலாவது பாடசாலையின்

இரண்டாவது வகுப்பறையின் பருமன்

மூன்றாவது வகுப்பறைக் கற்பித்தல் - கற்றல் செயல்பாடுகள் ஒழுங்குமுறை

நான்காவது பாடசாலையின் பௌதிக மற்றும் நிதிசார் வழங்கல்

     என்பனவாகும்.

பாடசாலையில் உருவாகின்ற குழுக்கள்  முறைசார் குழுக்களாக அல்லது முறையில் குழுக்களாக இருக்கலாம்.இத்தகைய குழுக்கள் பாடசாலையில் செயற்படும் முறையில் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க செல்வாக்குச் செலுத்துகின்றன.

 

வகுப்பறை செயல்பாடுகளில் இயங்கும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் எவ்வாறு உள்ளனர் என்பது பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கு அவசியமானது.

 

வகுப்பறையில் ஒத்த வயது குழுக்கள்இநட்பு குழுக்கள்இ  விளையாட்டுக் குழுக்கள் உருவாகின்றன.குழுக்களின் செயல்படும் பாங்கு அதன் உறுப்பினர்களின் பாடசாலை வாழ்க்கை முறைகளை அவதானித்து அதன் வழி கற்றல் கற்பித்தலுக்கு ஒழுங்குபடுத்த முடியும். 

மாணவர்- மாணவர் தொடர்புஇ மாணவர்- ஆசிரியர் தொடர்பு என்பவற்றை வலுப்படுத்த வகுப்பறை சிறு சிறு குழுக்களாக இடம்பெறுதல் முக்கியம;

ஆசிரியர் மத்தியிலும் முறைசார் குழுக்கள்இ முறையில் குழுக்கள் செயல்படுகின்றன. ஆசிரியர் வாழ்க்கை முறைஇவாழ்க்கை தராதரம்இநடத்தைகள  என்பன குழுவின் செல்வாக்கு உட்படுகின்றன.

 

கற்பித்தல் முறைகள் இன் பயன்பாடுகள் கற்பித்தல் இலக்குகள் மாணவர்கள் சார்பாக ஆசிரியர்களின் மனப்பாங்குகள் மற்றும் அபிலாசைகள் குழுவில் செல்வாக்கால் மாற்றம் அடைகின்றன.

குழு முறை இயக்கமானது சமூகவியலாளர் கல்வியலாளர்கள் ஆளும் உளவியல் நோக்கில் மிகப்பரந்த முறையில் கையாளப் படுகின்ற போதிலும் அண்மைக்காலத்தில் கல்வியலாளர்கள்அதற்கு விளக்கம் அளிக்கும் முறையில் மாற்றங்கள் உள்ளன.

குழு முறை இயக்கமானது அதற்குரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நிகழுகின்ற மையால் பாடசாலைகளில் அல்லது வகுப்பறைகளில் இடம்பெறும் சகல விதமான கற்றலுக்கும் அதற்குப் பின்னணியாக உள்ள சூழ்நிலையும் முக்கியம் என்பதை ஆசிரியர்கள் அவதானித்துக் கொள்ளுங்கள் அவசியமானது.

பிள்ளைகளின் குணவியல்பு ஆளுமையும் சமூகத்தினால் உருவாக்கப்படுகின்றவிளைவுகளுக்கு இவை குழு முறையினாலும் தீர்மானிக்கப்படுகின்றன.

 

ஆயினும் குழு முறையில் இடம்பெறும் கலந்துரையாடல் தொடர்பாக சில பிரச்சனைகள் சார்ந்த குழுவின் இதை தாக்கம் 

நிகழ்ந்து செல்லும் போக்கு அது இடம்பெறும் நோக்கம் மற்றும் குழு உறுப்பினர்களின் ஆர்வம் ஆகியவற்றில் தங்கியுள்ளன.

 

குழுவின் சக்தி ஒன்று இணைக்கப்படும்போது குழு செயற்பாட்டின்விளைவுகள் பெரிதாக இருக்கும் உறுப்பினரின் உறுப்பினரின் வெளிப்பாட்டுத் தன்மை வினைத்திறன் மிகுந்து காணப்படும். மறுபுறத்தில் தனியார்களின் பணிகளில் விளைவுகளை மொத்தமாக காணலாம். 

குழு முறை இயக்கத்தின் வெற்றிகள் நன்மைகள் அக்குழுவினது என் நேரங்களில் உருவாகியது என்பதில் தங்கியுள்ளது மேலோட்டமாக வகைப்படுத்தும் போது ஒழுங்கமைக்கபடாத இடைத் தாக்கத்தில் ஈடுபடும் குழு விடயங்களை கலந்துரையாடுவதற்கென சேரும் குழு அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்ளும் நோக்கில் தர்க்கரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபடுதல் என்ற வகையில் குழு முறை இயக்கம்பல்வகைபடுகின்றது.

குறித்த பாடசாலையில் கல்வி பயில்கின்ற பிள்ளைகளின் பெற்றோர்களே பாடசாலை சமுதாயம் என முன்னர் கருதப்பட்டது எனினும் தற்போது பாடசாலை சமூகம் என்னும் எண்ணக்கரு பரந்துபட்ட விதமாக நோக்கப்படுகிறது.

 

பாடசாலை சமூகம் என்பதற்கு பதிலாக பாடசாலையின் பயனாளிகள் என்ற பதம் தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் காணப்படும் பிரதான பயனாளி குழுக்களாக பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்இ பழைய மாணவர்கள்,நலன்விரும்பிகள்இசமுதாய தலைவர்கள், அரசியல்வாதிகள், அலுவலர்கள் போன்றோரும்

மேலும் சமய தாபனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் அங்கத்தவர்கள் போன்றோர் விளக்குகின்றனர்.

பிள்ளைகளின் கற்றல் தேவைகளை பாடசாலைகளில் மாத்திரம் திருப்திபடுத்த முடியாது என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது மாணவர்களின் முன்பள்ளிஇ பாடசாலைக் காலங்களிலும்இ மற்றும் அதற்கு அப்பாலும் அவர்களின் அறிகை மற்றும் சமூக விருத்தியை எண்ணற்ற  கற்றல் இணைப்புகள் செழுமைப் படுத்துகின்றன.

பாடசாலையும் பாடசாலை அனுசரணை களான குடும்பங்கள்இமுன்பிள்ளைப் பருவ நிகழ்ச்சித்திட்டங்கள்இபாடசாலை நேரம் தவிர்ந்த மற்ற நேரங்களில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள், உயர் கல்வி வியாபாரம், நூலகங்கள்இ சுக நலம் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள்இஅரும்பொருட்காட்சியகம் மற்றும் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் போன்றனவும் இணைப்பில் உள்ளடக்கப் படுகின்றனர்.

இவ்வாறான பல குழுக்களினால் பிள்ளையின் கற்றலுக்கு வழங்கப்படுகின்ற ஒத்துழைப்பின் வலைப்பின்னல் ஆன மிகை நிரப்பு கற்றல் ஆனது,கடலானது பாடசாலை-சமுதாய உறவை வலுப்படுத்தி மாணவர்களின் கற்கும் ஆற்றலையும் கற்றல் பேறுகளையும் மேம்படுத்துகின்றது.

 

எனவே இறுதியாக நோக்கும்போது பாடசாலை சமூக குழுக்களும் என்ற தலைப்பின் கீழ் அவற்றுக்கிடையிலான தொடர்புகளும்இ நன்மைகளும் வேற்றுமைகளும் காணப்படுவதோடு ஒன்றில் ஒன்று தங்கி இருப்பதன் காரணமாகவும் இது ஒன்றுக்கொன்று அவசியமானது எனவும் கருதப்படுகின்றது.


THANK YOU 

NOTES BY ANBU

Post a Comment

2 Comments

THANK YOU COMMIN US

close