Breaking News

மொழித்திறன்கள்


 


மொழித்திறன்கள்- பேசுதல் திறன்  

மொழி கற்றலுக்கான திறன்களுள் செவிமடுத்தலுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெறுவது பேசுதலாகும். முதலில்  செவிமடுக்கப்பழகும் பிள்ளை படிப்படியாக பேசப் பழகிக் கொள்ளும். எமது எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தி ஏனையோருடன் தொடர்பாடும் பிரதானமான ஊடகம் .’பேசுதல்’ ஆகும் என சன்சம்  குறிப்பிட்டுள்ளார்.

 கூறுபவரையும் கூறுபவற்றை கேட்போரையும் தொடர்புபடுத்தும் செயற்பாடு பேசுதல் ஆகும். வளர்ந்தோர் பேசுவதைப்போல செய்வதற்காக இளையோர் செய்யும் முயற்சியின்போது மூத்Nhதர் காட்டும் துலங்களின் விளைவே மொழி கற்றலாகும் என ஸ்கின்னர், ஜென்சன், லிப்ஸ்ட் ஆகியோர் கூறியுள்ளனர். பேசக் கற்றலானது  பிள்ளையின் அயலில் இருக்கும் மூத்தோர் பேசும் மொழியைப் போலச் செய்கின்றமையால் நிகழுகின்றமை 

 இவ்வரைவிலக்கணத்தின் மூலம் தெளிவாகின்றது. தொடக்கப் பருவத்தில் குழந்தை பல்வேறு விதமான ஒலிகளை  எழுப்பிய போதிலும், சிறிது காலம் செல்லும்போது அக்குழந்தை தனது தாய்மொழியில் காணப்படும் ஒலிகளை  மாத்திரமே எழுப்பும். இதற்கான காரணம் பிள்ளை படிப்படியாக தனது பெற்றோரும், சகோதர சகோதரிகளும் உடன்  இருப்போரும் வெளியிடும் ஒலிகளைப் போலச் செய்தலாகும். பிள்ளையின் மொழித்திறன் விருத்தி மீது பெற்றோர்  பேசும் மொழியின் தன்மை, அவர்களது சமூகப் பொருளாதார பின்னணி, பெற்றோர் தமது பிள்ளையுடன் பேசும்  அளவு, செவிமடுத்தலுக்காக பிள்ளைக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் போன்றவை பெரிதும் செல்வாக்குச் செலுத்தும். 

பிள்ளைகளின் தொடக்கக்கால பேச்சுத் தன்மையானது தன்முனைப்பானது என்பது பியாஜேயினால் ஆராய்ச்சிமூலம்  எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. புpள்ளையின் வயது ஏறத்தாழ ஆறரை வருடங்களாகும்போது அதன் பேச்சு 47% தொடக்கம் 64% வரையில் தன்முனைப்பானதாகும். பிள்ளை படிப்படியாக முதிர்ச்சியடையும்போது  தன்முனைப்பான பேச்சிலிருந்து விடுபட்டு, சமூக முனைப்பான பேச்சின்பால் கவனம் செலுத்தும். 

தனது கருத்துகளை சொற்கள் மூலம் வெளியிடும் திறனைப் பெற்ற மாத்திரத்தில் ஒருவர் பேச்சுத்திறனைப்  பெற்றுள்ளார் எனக் கூறிவிட முடியாது. கூறுபவை பொருளுள்ளவையாக இருத்தல், மொழியை பொருத்தமானவாறு  கையாளல், தெளிவு, சரியான உச்சரிப்பு போன்றவை பேசுதல் தொடர்பான ©ரணமான திறனைப் பெற துணையாக  அமைகின்றன. எனவே பேசுதலை விருத்தி செய்தல் என்பது, நாப்பயிற்சி, உச்சரிப்பு பயிற்சி, குரல் கட்டுப்பாடு,  மனனஞ்செய்தல், பேச்சுப்பாணி ஆகியவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டதொன்று என்றில்லை, பொருளுள்ள வகையில்  சரியான உச்சரிப்புடன் பிள்ளைகள தமது எண்ணங்களை பேச்சு மூலம் வெளியிட வகை செய்வதே பேசுதல்திறன்  கற்பித்தலின் முக்கியமான குறிக்கோளாக அமைதல் வேண்டும். 

இன்று மனித வாழ்க்கையில் இடம்பெறும் மொழிச் செயற்பாடுகளுள் ஏறத்தாழ 90மூ மானவை கேட்டல், பேசுதல்  ஆகிய இரண்டினூடாகவும் நிகழ்வதாக அறியப்பட்டுள்ளது. தற்கால உலகு ஓர் அகிலக் கிராமமாக மாறி உள்ளது.  ஆட்களுக்கு இடையேயும் நாடுகளுக்கு இடையேயும் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதற்காகக் காணப்படும்  பல்வேறு ஊடகங்களுள் ‘பேசுதல்’ முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இன்று நாம் பேசும் உலகிலேயே வாழ்கின்றோம்.  வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி, திரைப்படங்கள் போன்றவை எல்லாம் பேசுதலின்பால் செல்வாக்குச்  செலுத்தும் தொடர்பாடல் சாதனங்களாகும். விவாதம், கலந்துரையாடல், விரிவுரை, நடித்தல் போன்றவை யாவும்  பேசுதலுடன் தொடர்புடையவை. கல்வி சார்ந்த கருமங்களின் வெற்றியில் இவை பெரிதும் பங்களிப்புச் செய்யும். 

ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள் போன்றோரின் தொழில்துறை வெற்றி பெரும்பாலும் அவரது பேச்சுத்  திறனிலேயே தங்கியுள்ளது. தத்துவஞானிகள், சமய போதகர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின் வாழ்க்கையிலும்  பேசுதல் திறன் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. எந்த ஒருவரதும் வாழ்க்கையின் வெற்றிக்கு பேசுதல் திறன்  பெரிதும் பங்களிப்புச் செய்யும் எனக் கூறலாம் 

வெற்றிகரமான பேசுதலின் இயல்புகள்  

1. குரலின் இனிமை 

2. குரலின்உரப்பு : குரலின் கூடிக்குறையும் தனமையே இதனால்கருதப்படுகின்றது. செவிமடுப்போர்  தொகை அவர்கள் இருக்கும் தூரம் போன்றவற்றுக்க ஏற்ற வகையில் குரலை உயர்த்தியோ தாழ்த்தியோ  பயன்படுத்தும் திறனைப் பெற்றிருத்தல் வேண்டும். 

3. தெளிவு: சரியான உச்சரிப்புடன் பேசுதலே இங்கு தெளிவு என்பதால் கருதப்படுகின்றது. 4. பொருளுடையதாக இருத்தல்.: முன்வைக்கும் கருத்தில் தொடக்கமும், நடுவும், முடிவும்  பொருந்தியமைவதோடு பொருள் விளங்கத்தக்கதாகவும் இருத்தல் அவசியமாகும். 

பேசுதல் திறன் விருத்திக்கான செயற்பாடுகள்  

  

 தரம் 1 

∙ இலகுவான பாடல்கள் பாடுதல் 

∙ இலகுவான செய்திகளைக் கொண்டு செல்லல் 

∙ கதைகளின் பாத்திரங்களைப் போன்று வேடம் தரித்து கதைக் கூறுதல் 

∙ படங்களைக் கொண்டு கதை உருவாக்கல்.  

 தரம் 2 

∙ பாட்டுப்பாடி ஆடுதல் 

∙ யாதேனும் இடம், பிரதேசம், ஊர் தொடர்பாகத் தேடியறிந்து தகவல்களை முன்வைத்தல்.  தரம் 3 

∙ பாட்டுப் பாடியவாறு கிராமிய விளையாட்டுகளில் ஈடுபடுதல்

∙ தர்க்க ரீதியில் பாட்டுப் பாடுதல் 

∙ யாதேனும் நிகழ்வு தொடர்பாக விவரங்களைத் தேடுதல் 

∙ தான் பார்த்த யாதேனும் ஒரு சம்பவத்தை அல்லது நிகழ்வைக் கூறுதல் 

 தரம் 4 

∙ நட்புடன் ஒருவரோடொருவர் உரையாடல் 

∙ நொடி சொல்லல் போட்டி நடாத்துதல் 

∙ தமது குழுவினால் ஆக்கப்பட்ட பாடல்களைப் பாடுதல். 

∙ செய்திகள், வர்த்தக விளம்பரங்கள், விளையாட்டு விவரணம் போன்றவற்றை முன்வைத்தல் ∙ தரப்பட்ட தலைப்பின்கீழ் பேசுதல். 

∙ செய்தியொன்றினை அதனைப் பெற வேண்டியவரிடம் சென்று, சரியாகக் கூறலும், அச்செய்தியைப் பெற்றவர் கூறும் பதிலைக் கிரகித்து திரும்பி வந்து உரியவரிடம் கூறுதலும். 

தரம் 5 

∙ பாடல்கள் பாடுதல் 

∙ விளக்கக் குறிப்புகளைக் கொண்டு குறுக்கெழுத்துப் புதிர்களை ©ர்த்தி செய்தல். 

∙ யாதேனும் சம்பவம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விபரத்தின்படி பிரச்சினைக்கான தீர்வைத் தேடுதல் ∙ தரப்பட்ட தலைப்பில் பேசுதல்

மொழித்திறன்கள் பற்றிய pdf ஐ பெற்றுக்கொள்ள இங்கே Click செய்யவும்

             👉👉👉👉👉👉👉  Download Pdf

THANK YOU  

NOTES BY ANBU

Post a Comment

0 Comments

close