வழிகாட்டல் என்பது வாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயல்பாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளவும் உளவியல் அணுகுமுறை அடிப்படையில் பயிற்சி பெற்றவர்களால் வழங்கப்படும் உதவியே வழிகாட்டல் ஆகும்.
ஆலோசனை என்பது ஆலோசனைநாடி தனது பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஆலோசகரை நேர்முகமாக சந்தித்து பேட்டி காணும் நுட்ப முறையினை கலந்துரையாடி அப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அணுகுமுறையை உருவாக்கி கொள்ளல் ஆகும்.
வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கல் பல்வேறு தேவைகளுக்காக பல்வேறுபட்ட நபர்களால் வழங்கப்படுகிறது. அவை ஆலோசனை வழிகாட்டல் பேதங்கள் என அழைக்கப்படுகிறது. அவற்றை வழிகாட்டல் ஆலோசனை வழங்களின் வகைகள் எனவும் அல்லது பிரிவுகள் எனவும் அழைக்கலாம். அவற்றில் சில
1)பாடப்புற செயல் சார் வழிகாட்டல் ஆலோசனை
2)உடல் நலம் சார் வழிகாட்டல் ஆலோசனை
3)உளவியல் சார் வழிகாட்டல் ஆலோசனை
4)தனியாள் சார் வழிகாட்டல் ஆலோசனை
5)குடும்ப ஆலோசனை வழிகாட்டல்
6)கல்வி சார் வழிகாட்டல் ஆலோசனை
7)தொழில் சார் வழிகாட்டல் ஆலோசனை
1.பாடப்புற செயல் சார் வழிகாட்டல் ஆலோசனை
இது ஓய்வு நேரத்தை பயனுள்ள முறையில் கழித்தல் தொடர்பானதாகும். மேலும் வகுப்பறைக்கு அப்பாலிலுள்ள பாடப்புற செயல்களில் ஈடுபடல், ஓய்வு நேரத்தை பயனுள்ளவாறு ஆக்கிக் கொள்ளல், பொருத்தமான ஓய்வு நேர செயல்களை உள சார்பு, நாட்டம் ஆகியன அடிப்படையில் தெரிவு செய்தல், பாடசாலை வளங்களை பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்ளல்;. உதாரணமாக விளையாட்டு சங்கங்களை எவ்வாறு பயன்படுத்துவது விளையாட்டு மைதானத்தை எவ்வாறு பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
2.தனியாள் சார் வழிகாட்டல் ஆலோசனை
தனிப்பட்ட வழிகாட்டல் என்பது உடல், உணர்வு, சமூக வளர்ச்சி, நல்லொழுக்கம் மற்றும் இணக்கம் ஆகியவற்றை மேம்படுத்த உதவுவதேயாகும். வில்சன் ( றடைளழn )
தனிப்பட்ட வழிகாட்டல் என்பது ஒருவரது புலன் உணர்வுகளுக்கும் புற வாழ்க்கை சூழலுக்கும் இடையே ஏற்படும் பரிமாற்றத்தில் செயல்படுவதாகும். மில் ( ஆடைட )
தனியாளின் சமநிலையான ஆளுமையை விருத்தி செய்தல், தமது நல்விருத்திக்கு தாமே பொருப்பேற்க ஊக்கப்படுத்தல், மனவெழுச்சி சமநிலையை பேண வழிகாட்டல் ஆலோசனை வழங்கல், தனியாள் பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனை வழங்கல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
3.குடும்ப வழிகாட்டல் ஆலோசனை
ஒருவர் குடும்பத்தின் அங்கத்தவர் என்ற முறையில் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் உரிய முறையில் நிறைவேற்றி வாழ்க்கையை வெற்றிகரமாகவும் திருப்தியாகவும் கொண்டு செல்ல உதவும் செயல்முறை இதுவாகும்.
உதாரணம்
1.குடும்ப மீள் ஒழுங்கமைப்பு.
2.இளம் தம்பதி திருமணம்.
3.குடும்ப உறவு முறிவடைதல்.
4.சுகாதார பழக்கவழக்கங்கள்.
5.பெற்றோரின் கட்டுப்பாடுகள்.
6.மது அருந்துவதால் ஏற்படும் விரக்தி.
7.பதற்றத்திலிருந்து விடுபட.
8.உள குழப்பங்களிலிருந்து விடுதலை பெற.
9.வெற்றிகரமான குடும்ப வாழ்வில் ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்க்க.
10.கட்டிளமைப் பருவத்தினரின் பிரச்சினைக்கான ஆலோசனை வழங்கல்.
கட்டிளமைப் பருவ மாற்றம்
இந்த வயதில் உடல் ரீதியான மாற்றங்கள் சம்பந்தமான கவலைகள் என்பவற்றை போக்கவும் இப்பருவ வளர்ச்சியுடன் தொடர்பான பாலியல் ரீதியான தகவல்களை வழங்கவும் இது உதவும். மேலும் எதிர்பாலார் பற்றிய மனப்பாங்கை விருத்தி செய்யவும் இவ்வயதில் ஏற்படும் கோபம்,பயம்,விரக்தி,பதற்றம் ஆகிய உணர்வுகளால் ஏற்படும் மனவெழுச்சியை கட்டுப்படுத்த உதவும்.
4.உளவியல் சார் வழிகாட்டல் ஆலோசனை
புதற்றம், அளவுக்கதிகமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதிலிருந்து விடுபட ஆலோசனை வழங்கல், ஒருவர் தன்னைத் தானே நன்கு விளங்கிக் கொள்ளவும் தனது பலத்தையும் பலவீனத்தையும் புரிந்து கொள்ளவும் ஒருவருக்கு உதவி செய்வது இதன் தொழிற்பாடாகும்.
இது ஒருவது உளவியல் தேவைகளை திருப்திப் படுத்துவதன் மூலம் சாதகமான உள ஆரோக்கியத்தை பேணச் செய்யும் உதவி ஆகும்;.
அதாவது உளவியல் சார் ஆலோசனை என்பது ஒருவரது உளவியல் தேவைகளை திருப்திப் படுத்துவதன் மூலம் சாதகமான உள ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகும்.
5.உடல் நலம் சார் வழிகாட்டல் ஆலோசனை
உடல் குறைபாடு இருப்பின் அவற்றை இனங்கண்டு சிகிச்சை பெற சிபாரிசு செய்தல். மற்றும் மாணவருக்கும் அவர்களது பெற்றோருக்கும் போசாக்கு, தடுப்பு மருந்துகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தல், பாலியற் கல்வி வழங்கல், உடல் அப்பியாசங்கள், விளையாட்டுக்களில் பங்கு கொள்ள ஊக்குவித்தல், போதைப்பொருள் மற்றும் புகைப்படித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களிலிருந்து விடுபடவும் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை மாணவர்களுக்கு உணர்த்துவதும் ஆகும்.
6.கல்விசார் வழிகாட்டல் ஆலோசனை
பள்ளி பாடத்திட்டத்;திலும் பள்ளி செயற்பாடுகளிலும் மாணவர்களுக்கு உதவி புரிந்து அவர்களுடைய கல்வி தொடர்புடைய தெரிவுகளையும் இணக்கங்களையும் மேம்படுத்த உதவுதல் கல்வி வழிகாட்டல் எனப்படும். ( ஆர்தர் ஜே.ஜோன்ஸ் )
ஒருவர் தனக்கேற்ற திட்டத்தை செயல்களை தேர்ந்தெடுக்க உதவுதல் கல்வி வழிகாட்டல் எனப்படும். ( ரூத் ஸ்டிரேங் )
மாணவர்களின் கல்வி தொடர்பான இலக்குகளை அமைத்துக் கொள்ள உதவுகிறது. மாணவரது உளச்சார்பு திறன்கள், நாட்டங்கள்,மனப்பாங்குகள், அடைவுகள் என்பன தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிப்பதும் அறிக்கைகளை பேணுவதும் இதன் முக்கிய பணியாகும்.
கல்வி ஆலோசனை வழங்கல் இரு தொகுதி அம்சங்களை அடிப்படையாக கொண்டது.
1) கற்றல் சார் அடைவுகள் மாணவரது வினைத்திறன் அடைவு சார் நிறைவு பற்றியது. ஏற்கனவே திருப்திகரமாக கற்றுக் கொண்டிருக்கும் மாணவனை மேலும் சிறப்பாக செயற்பட ஆலோசனை வழங்கப் படுகிறது.
2) தெரிவு செய்தலை திட்டமிட உதவுகிறது. ஒரு மாணவன் எந்த பாடநெறியை எந்த நிகழ்ச்சித் திட்டத்தை தெரிவு செய்ய உதவுகிறது.
கல்விசார் வழிகாட்டலின் நோக்கங்கள்
1)மாணவரின் முன்னேற்றத்தை தொடர்ந்து கவனித்து நெறிப்படுத்தல்;.
2)விசேட கல்வி தேவை உள்ள மாணவர்களுக்கு அத்துறைகளில் விசேட உதவி வழங்கல்.
3)விசேட கல்வி தேவையுடையோருக்கான பொருத்தமான கற்றல் முறைகளை கையாளுதல்.
4)மாணவரின் கற்றல் சார்பான ஊக்கல் நிலையை மேம்படுத்தல்.
5)தனிப்பட்ட பாடத்துறைகளில் குறைவாக உள்ள மாணவர்களுக்கு அத்துறைகளில் விசேட உதவி வழங்கல்.
6)உயர்கல்வியை தொடர்ந்து கற்கவும் கற்றலை இடைநிறுத்தாமல் இருக்கவும் ஆலோசனை வழங்கல்.
மனத்தடங்கல், கற்றல் குறைபாடுகள், உறுப்பக்கள் ஊனமுற்ற மற்றும் உணர்வு குழம்புகின்ற மாணவர்களை கையாள்வதற்கான கல்வியையே விசேட தேவை சார் கல்வி என்பர். சாதாரண தன்மை உடைய பிள்ளைகளை விட இவர்கள் வேறுபட்டவர்களாக காணப்படுவர். வகுப்பறை கற்பித்தல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு துலங்களை ஏற்படுத்த முடியாது. எனவே இவர்களுக்கு அத்துறைகளில் விசேட உதவி வழங்கப்படுகின்றது.
கல்வி சார் வழிகாட்டலின் சில பணிகள்
1)மாணவருக்கு தேவையான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டல்.
2)பல வகையான கல்வி நிறுவனங்கள் சார்ந்த தகவல்களை கொண்டு சேர்த்தல்.
3)பாடசாலை மாணவர்களுக்கான சலுகைகள் மற்றும் வசதிகளை பற்றி தெரியப்படுத்தல்.
4)குறைந்த புள்ளியை பெறும் பாடங்கள் தொடர்பாக கவனமெடுத்து விசேட பயிற்சி வழங்கலும் மேலதிக பயிற்சியில் ஈடுபடுத்தலும்.
7.தொழில் வழிகாட்டல் ஆலோசனை
இது கல்வி ஆலோசனை வழிகாட்டலின் தொடர்ச்சியாகும். தொழில் ஆலோசனை வழங்குவதில் ஒருவருக்கு அவரது சொந்த திறன்களையும் நாட்டங்களையும் அடையாளம் காணவும் அவற்றை மதிப்பிடவும் பொருத்தமான உதவி வழங்குகிறது.
தொழில் சார் ஆலோசனையும் ஒருவர் தனக்கு திருப்தி தருகின்ற தொழிலுக்கான வழிகளையும் அதே நடைமுறைக்கு தேவையான நடத்தைகளையும் ஒருவர் அடையாளம் காண உதவுகிறது. தொழில் வாய்ப்புக்கள், அவற்றிற்கான தகுதிகள் மற்றும் தொழில் நாடியிடம் இருக்க வேண்டிய ஆற்றல்கள், திறன்கள, ஆளுமைப் பண்பை வழங்குவதும் இதிலடங்கும்.
ஆலோசனை நாடி தான் எதிர்பார்க்கும் இலக்குகளை பெறுவதற்கும் தமது திறமைகளை வினைத்திறனுடன் பயன்படுத்தவும் ஆலோசகர் உதவுவார். எந்தவொரு தொழிலையும் உயர்ந்தது, தாழ்ந்தது என வகுத்து நோக்க முடியாது எனினும் இவ்விடயத்தில் மிக முக்கியமாவது தமக்கு பொருத்தமான சிறந்த ஒரு தொழிலை தெரிவு செய்வதும் தெரிவு செய்த தொழில் பற்றிய சுய திருப்தியுடன் மற்றும் வினைத்திறனுடன் அந்த தொழிலுடன் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவது ஆகும். இதற்கு தொழில் வழிகாட்டலானது உதவுகிறது.
தங்களது திறமைகளுக்கேற்ற தொழில் துறைகளை விருத்தி செய்து கொள்வதற்கான தகைமைகளை புரணப்படுத்த உதவும் அரச மற்றும் தனியார் நிறுவனம் பல நாடளாவிய ரீதியில் வியாபித்து காணப்படுகின்றன. அது பற்றி சரியான அறிவை பெற்றுக்கொள்ளவும் இது உதவுகிறது.
உதாரணம் :
1)விண்ணப்பம் தயாரிக்கும்; விதம்
2)தொழில் வாய்ப்பும் அதன் முக்கியத்துவமும்
3)தகைமைகளை பெறுவதில் முக்கியத்துவம்
4)ஆட்சேர்க்கும் திட்டமும் அது தொடர்பான ஒழுங்கு விதிகளும்
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான தொழிலுக்கான தயார்ப்படுத்தலில் தொழில் வழிகாட்டல் மிகவும் அத்தியாவசியமானதாக அமைகிறது.
மேலும் தான் செய்யும் வேலையில் ஒத்துப் போதல் மற்றும் வேலையில் வளர்ச்சியை ஏற்படுத்தலில் இது உதவுகிறது. பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையவும் தொழில் வழிகாட்டல் உதவுகிறது.
தொழில் வழிகாட்டல் தொடர்பாக கூறப்பட்ட கருத்துக்கள் சில :
மையர்ஸ் ( ஆலநசள )
தொழில் வழிகாட்டல் என்பது மனித வளத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தி அதனால் அவனுக்கு தொழிலில் வெற்றியும் திருப்தியும் ஏற்படுகின்றது. சமுதாயத்திற்கும் நலன் பயக்கின்றது.
டோனால்ட் இ.சூப்பர் ( னுழயெடன நு.ளுரிநச )
தொழில் வழிகாட்டல் என்பது ஒருவன் தன்னைப் பற்றியும் ஒரு தொழிலில் தனது பங்கு பற்றியும் அறிந்து கொள்ள உதவுவதாகும்.
தொழில் வழிகாட்டலுக்கான கோட்பாடுகள்
1.ஆன்றோவின் தொழில் ஆலோசனை வழங்கற் கோட்பாடு
இக்;கோட்பாட்டை நோக்கும் பொழுது “ தனிநபரின் தொழில் தெரிவுச் செயன்முறையில் பிள்ளைப் பருவ அனுபவம் செல்வாக்குச் செலுத்தும் ” என ஆன்றோ குறிப்பிடுகின்றார். எனவே இக் கோட்பாட்டின் அடிப்படையில் பிள்ளையின் ஆசைகள், விருப்பங்கள் என்பன நிறைவேற்றப்படல் என்பது முக்கியமானதாகும்.
இவ்விருப்பங்களில் பல ஆழ்மனத் தேவைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒருவர் தனது தேவைகளை நிறைவு செய்யும் முறைக்கேற்ப அவரது தொழிலில் இசைவாக்கம் பெறுதல் தனிநபர் அபிவிருத்தியாக இங்கு வெளிக்காட்டப்படும்.
2.டொனால்ட் சுப்பரின் தொழில் விருத்திக் கோட்பாடு
டொனால்ட் சுப்பரின் கோட்பாட்டின் படி தாம் தெரிவு செய்கின்ற தொழிலின் மூலம் தமது சுய எண்ணக் கருவை அடைந்து கொள்வதற்கு ஒருவர் எதிர்பார்க்கின்றார். தொழில் விருத்தி செயன்முறை ஒரு தொடர்ச்சியான செயன்முறை ஆகும்.
3.எளி கின்ஸ்பேர்க்கின் தொழில் தெரிவுக் கோட்பாடு
இவரின் கோட்பாட்டிற்கு அமைய நபர் ஒருவருக்கு எழுகின்ற தொழில் ஒன்றை தெரிவு செய்வது பற்றிய உணர்வானது நீண்ட கால செயன்முறையின் பெறுபேறாகும். ஒருவர் மேற்கொள்ளும் தொழில் தொடர்பான தீர்மானம் அவரது வயதிற்கு ஏற்ப வித்தியாசப்படும் என்பது இவரது நம்பிக்கை ஆகும்.
இவர் தனிநபரின் தொழில் தெரிவு செயன்முறையை மூன்று சந்தர்ப்பங்களாக வகுத்துள்ளார்.
1.கற்பனை தெரிவு பருவம் - 11 வயது வரை
2.செய்து பார்த்தல் மூலம் தெரிவு செய்யும் பருவம் - 11 தொடக்கம் 17 வயது வரை
3.யதார்த்த ரீதியாக தெரிவு செய்யும் பருவம் - 17 வயதிலிருந்து
4.கோலன்ட்டின் பண்புத்திறனும் காரணிகளும் கோட்பாடு
தொழில் தீர்மானம் எடுப்பதற்கான அடிப்படை காரணியாக தனியாள் ஆளுமை அமையும் என இவர் குறிப்பிடுகின்றார்.
மேலும் தொழில் தகவலை எவ்வாறு சேகரிப்பதற்கான மூலாதாரங்கள் பற்றிய விபரங்களும் ஆலோசனை மூலமாக அளிக்கப்படுகின்றன. அவற்றுள் சில :
1)தொழில் சந்தைகள்
2)கண்காட்சிகள்
3)தொழில் பயிற்சி முகாம்கள்
4)வானொலி
5)தொலைக்காட்சி
6)வலைப்பின்னல்
7)பத்திரிகைகள்
8)துண்டுபிரசுரங்கள்
9)வர்த்தமானி அறிவித்தல்கள்
10)விளம்பரங்கள்
இன்றைய உலகில் தொழில்; வழிகாட்டலின் முக்கியத்துவம் மிகவும் பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது. ஒரு பிள்ளை ஆரம்பத்தில் குழந்தையாக பிறக்கும் போது அவர்களுக்குரிய ஆரம்ப வழிகாட்டியாக பெற்றோர்கள் காணப்படுகின்றனர்.அதன் பிறகு பிள்ளை கல்வி சமூகத்தினை நாடுகின்றது. அப்போது பெற்றோருடன் இணைந்து ஆசிரியரிகள் வழிகாட்டுகின்றனர். இது முடிய தொழிலுக்கு செல்வதற்காக தன்னை தயார்ப்படுத்துகின்றது. எனவே இங்கு தொழில் வழிகாட்டல் அவசியமான ஒன்றாகும்.
மேலும் தொழில் வழிகாட்டல் மூலம் ஒருவர் தன்னைப் பற்றிய சுயமதிப்பீடு செய்யவும் இயலும். இதன் மூலம் ஒருவர் தனது ஆற்றல்களையும் ஈடுபாடுகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் இனங்காணலாம்.
தொழில் வழிகாட்டல் சேவையின் பிரதான நோக்கம் மனித வளங்களை மிகப் பயன் மிக்கதாக மாற்றி அமைப்பதாகும்.
இது மட்டுமின்றி குறிப்பான சில பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழிகாட்டல் வழங்கப்படுகின்றது.
1)மனவெழுச்சி அதிர்ச்சி தொடர்பான ஆலோசனை வழங்கப்படுகின்றது. இது தனியாளுக்கு தனியாள் வேறுபடும்.
2)துயருற்றோருக்காக ஆலோசனை வழங்கப்படுகின்றது. இதில் உறவுகளை பிரிந்து வாழ்வோர், உறவுகளை இழந்தோர் போன்றோரை உதாரணமாக குறிப்பிடலாம்.
3)முதியோருக்கான ஆலோசனை வழங்கல்.
4)புற்று நோயால் பாதிக்கப்பட்;டவர்களுக்கான ஆலோசனை வழங்கலும் எயிட்ஸ்நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான ஆலோசனை வழங்கலும்.
5)போதைப்பொருள், மதுபாவனை, புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்களிலிருந்து விடுபட ஆலோசனை வழங்கல்.
6)ஓய்வு நேர பயன்பாடு சார்ந்த வழிகாட்டல் ஆலோசனை வழங்கல்.
7)நெறிமுறை சார்ந்த வழிகாட்டல் ஆலோசனை வழங்கல்.
8)மன மகிழ்ச்சி சார்ந்த வழிகாட்டல் ஆலோசனை வழங்கல்.
9)மதம் சார்ந்த வழிகாட்டல் ஆலோசனை வழங்கல்.
10)சமூகத்தில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கல்.
ஆலோசனை வழிகாட்டலின் பயன்பாடுகள் ( வகைக்கேற்ப )
1.ஆலோசனை வழிகாட்டல் தொழிலை தேர்ந்தெடுக்க உதவுகிறது.
இக்கருத்து 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மானிடவியல் கருத்துக்கள் மேலோங்கி இருந்த பின்னணியில் சில உளவியலாளர்களினால் விழிப்பு ஏற்பட்டதிற்கிணங்க ஆரம்பிக்கப்பட்டது.
2.ஆலோசனை வழிகாட்டலானது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதாகும்.
மாணவர்கள் பாடசாலையை விளங்கவும் கல்வித்துறையை தெரிவு செய்யவும் இது உதவும். அனைத்துக் கல்வி செயற்பாடுகளும் ஆலோசனை வழிகாட்டல்களாகவே உள்ளது. கலைத்திட்டம், கற்பித்தல் முறைகள், மதிப்பீடுகள் என்பவற்றிலிருந்து வழிகாட்டல்கள் பாரிய வேறுபாடுகள் கொண்டிருப்பதில்லை எனவும் கூறப்பட்டது. இதன்படி கல்வி தொடர்பாக பாடசாலையில் நடக்கும் செயற்பாடுகள் யாவுமே வழிகாட்டல்கள் என கொள்ளலாம்.
3.இசைவாக்கம், புரிந்து கொள்ளலுக்கு உதவுகின்றது.
பாடசாலையிலும் வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க வழிகாட்டல் சேவை கருத்தில் கொள்ளப்பட்டது. இங்கு மாணவர்களின் பாடத்தெரிவு, இணைப்பாட விதான செயற்பாட்டுத் தெரிவு, தொழில்நுட்ப கல்வி தெரிவு போன்றவற்றிற்கு வழிகாட்டப்படும். இது 2 அம்சங்களை கொண்டதாக காணப்படுகின்றது.
1)தன்னையும் சுற்றாடலையும் பற்றி அறிந்து அதற்கேற்ப தன்னை இசைவாக்கிக் கொள்வதில் சிரமமேற்படும் போது அதற்கு உதவியளித்தல்.
2)மாணவர் சூழலில் பெற்றுக் கொள்ளக் கூடிய தொழில், சமூக அந்தஸ்த்து, விழுமியங்கள், கலாசார பண்பாடு, பொருத்தமான பொழுதுபோக்கு முதலியவற்றை விளங்கி அதற்கேற்ப தொழிலை தெரிவு செய்ய உதவுதல். அதாவது தனது திறமையை அறிந்து அதற்கேற்ப செயற்பாட்டுத் தொழிலை பெற்று சமூகத்தில் உயரிய இடத்தை பிடிக்க ஏற்படும் சவால்களுக்கு வழிகாட்ட இது உதவும்.
4.வழிகாட்டல் உள ரீதியான ஆய்வு செயன்முறை ஆகும்.
உடல் சிகிச்சை அளிப்பது போன்று உள சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும். உள சிகிச்சை வழங்குவதற்கு முன்னோடியாக ஆலோசனை வழங்கப்படும். உளக் குறைப்பாட்டுக்கான காரணத்தை விளங்கவும் அதற்கேற்ப செயற்பாடுகளை மேற்கொள்ளவும் ஆலோசனை வழிகாட்டல் அவசியப்பட்டது.
5.தீர்மானமெடுக்கும் செயலை வளர்க்கும்.
சரியான தீர்மானத்தை எடுக்கவும் அதற்கேற்ப தம்மை இசைவாக்கிக் கொள்ளவும் பிரச்சினைகளை விடுவிக்கவும் சரியான முடிவுகளை எடுக்கவும் அம்முடிவு நீண்டகாலம் பொருத்தப்பாடு அடையவும் உதவுகின்ற செயற்பாடு வழிகாட்டல் எனப்படும். தொழிலை அல்லது கல்வியை அல்;லது பழக்கத்தை தேர்ந்தெடுப்பதில் சரியான பொருத்தமான முடிவை எடுப்பதை குறிப்பிடலாம்.
6.வழிகாட்டல் ஒரு ஒன்றிணைந்த சேவை
பாடசாலையில் சேவையாற்றுகின்ற அனைத்து ஆசிரியர்களுமே ஆலோசனை வழிகாட்டல் செய்யக் கூடியவர்களாவர். தமது அன்றாட பாடசாலை சமூக செயற்பாடுகளின் போது மாணவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல் செய்ய வேண்டிய தேவை அனைத்து ஆசிரியர்களுக்கு உண்டு. வழிகாட்டலுக்கு பொறுப்பான ஆசிரியர் பெருமளவு பங்கெடுத் தாலும் ஏனையோரும் இதில் இணைந்து செயற்படுவர்.
சாராம்சம்
ஆலோசனை வழிகாட்டலானது பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு நபர்களால் வெவ்வேறாக வழங்கப்படுகிறது. அவற்றை நாம் ஆலோசனை வழங்கலின் பேதங்கள் என அழைக்கலாம். ஆலோசனை வழிகாட்டலின் வகைகளாகவும் இதனை குறிப்பிடலாம். இவ்வாறாக பல்வேறு பயன்பாடுகளை கொண்டதாகவும் ஆலோசனை வழிகாட்டல் அமையும். இது ஆலோசனை வழிகாட்டல் நிலையங்கள், மதம் சார்ந்த நிலையங்களில் வழிகாட்டல், வைத்தியசாலைகளில் ஆலோசனை வழிகாட்டல், பாடசாலையில் ஆலோசனை வழிகாட்டல் வழங்கப்பட்டாலும் இவற்றிற்கெல்லாம் ஆரம்பமாக வீட்டில் வழங்கப்படும் ஆலோசனை வழிகாட்டலே அமையும்.
THANK YOU
NOTES BY ANBU👍👍👍👍

2 Comments
நன்றி
ReplyDeleteUr welcome
DeleteTHANK YOU COMMIN US