1. தகுதி( validity )
2.நம்பகத்தன்மை ( Reliability )
3.நடைமுறை சாத்தியம் ( Practicability)
1. தகுதி( validity )
குறித்த செயலை செய்வதற்கு அளவீட்டு கருவி பொருத்தப்பாடே தகுதி என்பதாக கருதப்படுகின்றது. யாதேனும் குறிக்கோளை நிறைவேற்றி கொள்வதற்காகவே சோதனை நடத்தப்படும். உதாரணமாக மொழி ஒன்றினை கற்பதால் மாணவர் அடைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் எழுத்து, வாசிப்பு, பேச்சு , கேட்டல் ஆகிய திறன்கள் எந்த அளவுக்கு அடைய பெற்றுள்ளது என்பதை சோதித்து அறிய வேண்டியுள்ளதாயின் அதற்காக தயாரிக்கும் சோதனை இந்நான்கு திறன்களையும் அளப்பதற்கு பொருத்தமான ஒன்றாக அமைதல் வேண்டும். எழுத்து திறன் மாத்திரமே அளக்கப்படுமாயின் அச் சோதனையின தகுதி குறைவானதாகும்.
தகுதியே இரண்டு முறைகளில் அளக்கலாம் கோட்பாட்டு ரீதியில், தர்க்கரீதியில் தகுதியைக் கண்டறிவது அவற்றில் ஒரு முறை ஆகும். சோதனையின் குறிக்கோள்களுக்கு பொருத்தமான வினாக்கள் அதாவது உப்படிகள், சோதனையில் அடங்கியுள்ளனவா குறித்த பாட ப்பகுதிகள் எந்த அளவுக்கு வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டுள்ளது, குறித்த பாட கூறுகள் முக்கிய அம்சங்கள் பிரதிநிதித்துவப்படுத்த பட்டுள்ளனவா, என்றவாறாக தர்க்கரீதியில் விடயங்களை தேடி அறிதல் தகுதியை சோதிப்பதற்காக ஒரு முறையாகும்.
தகுதியை ஆராய்ச்சி ரீதியில் கண்டறிவது இரண்டாவது முறையாகும். இதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லதொரு சோதனையின்போது சோதனையின் தரவுகளுடன் எமது சோதனையின் தரவுகளை ஒப்பிட்டு புள்ளி விபரங்களை ஒப்பீட்டு ரீதியில் பகுத்தாய்தல் வேண்டும். அவ்வாறு ஒப்பிடுவதால் பெறும் தகுதி சுட்டி, சோதனையின் தகுதியை காட்டும் ஒரு சோதனையாக அமையும்.
மேற்குறிப்பிட்டவற்றுள். ஒரு முறையோ இரண்டு முறைகளையுமோ பின்பற்றி சோதனையின் தகுதியை கண்டறியலாம். சோதனை ஒன்றின் தகுதி பல்வேறு பேதங்களாக நோக்கப்படும் அவை வருமாறு:
*முகப்புத்தகுதி ( face validity )
சோதனைக்குறிய வினாத்தாள் ஒன்றினை பார்த்த மாத்திரத்தில் அது குறித்த குறிக்கோளை அளப்பதற்கு பொருத்தமானதா என்பதை கண்டறிவது முகப்பு தகுதி எனப்படுகின்றது. அனுபவமிக்க ஆசிரியர்களுக்கு வினாத்தாள் ஒன்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்த மாத்திரத்தில் அச்சோதனை தொடர்பாக கருத்தை பெற்றுக்கொள்ளலாம்.
*உள்ளடக்க தகுதி ( content validity)
குறித்த கல்விக் குறிக்கோள்களின் படி பாடத்திட்டத்தில் அடங்கியுள்ள பாட விடயங்கள் அளக்கப்படும் வகையில் சோதனை தயாரிக்கப்பட்டிருத்தலே உள்ளடக்க தகுதி எனப்படுகின்றது. சோதனை ஒன்றுக்கு அடிப்படையாக அமையும் யாதேனும் பாடத் திட்டம் ஒன்றின் சகல பாட விடயங்களும் உள்ளடங்கும் வகையில் வினாப்பத்திரம் ஒன்றை தயாரிப்பது இலகுவானதல்ல. எனினும் பாடத் திட்டத்தில் அடங்கும் சகல விடயங்களும் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் வகையில், ஒவ்வொரு தலைப்பினதும் முக்கியமான விடயங்கள் உள்ளடங்கும் வகையில் வினாத்தாளை தயாரிப்பதால் உள்ளடக்க தகுதியைப் பெறும் அளவுக்கு பேணலாம்.
விடயத்திறன் அட்டவணை ஒன்றை பயன்படுத்தி வினாப்பத்திரத்தை தயாரித்தல்,
உள்ளடக்க தகுதியைப் பேணுவதற்காக கையாள னத்தக்க ஒரு நல்ல வழியாகும்.
மேலும் தயாரித்த வினாத்தாளில் உள்ளடக்க தகுதியை சோதிப்பதற்காகவும் விடயத்திறன் அட்டவணையைப் பயன் படுத்தலாம்.
*அமைப்புத் தகுதி ( construct validity )
தயாரிக்கப்பட்ட சோதனையானது எந்த அளவுக்கு, அச்சோதனையைத் தயாரிப்பதற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கோட்பாட்டுக்கு அல்லது விதிக்கு அமைவாக உள்ளது என்பதே அமைப்பு தகுதி எனப்படும். நுண்ணறிவு சோதனை, உளச்சார்பு சோதனை சோதனை, ஆளுமை சோதனை போன்ற போன்றவை தொடர்பாகவே, அமைப்பு தொகுதி முக்கியத்துவம் பெறும்.
உதாரணம்
நுண்ணறிவு சோதனை தயாரிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நுண்மதி கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அதனை தயாரித்தல் வேண்டும்.
ஏழு காரணிகளை அடிப்படையாகக் கொண்ட தேர்ஸ்டன் நுண்ணறிவு விதி உளவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இவ்வாறாக அங்கீகரிக்கப்பட்ட நுண்மதி விதியின் அடிப்படையில் சோதனை தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதே அமைப்பு சோதனை என்பதால் கருதப்படும்.
*உடன்பெறு தகுதி ( Corcurrent validity )
யாதேனும் சோதனையென்று சமகாலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சோதனை ஒன்றுடன் எந்த அளவுக்கு இணக்கத்தை காட்டுகின்றது என்பதைக் கண்டறிவதே உடன்பெறு தகுதி எனப்படும் இது உடன்பெறு தகுதி ஆராய்ச்சி ரீதியாகவே கண்டறியப்படும்.
* எதிர்வுகூறல் தகுதி ( Predictive Validity )
சோதனைக்கு உட்படுவோர் எந்த அளவுக்கு எதிர்காலத்தில் யாதேனும் செயலை செய்வதற்கு பொருத்தமானவர்கள் என்பதை எதிர்வு கூறுவதற்கு அச்சோதனை கொண்டுள்ள தகுதியையே இது குறிக்கின்றது.
5 ஆந்தரப் புலமைப் பரீட்சை மூலம் கற்பித்தலில் திறமை காட்டும் மாணவரை தெரிவு செய்துகொள்ள எதிர்பார்ப்பதாயின் இச்சோதனை எதிர்கால திறமைசாலிகளைத் தெரிவு செய்வதற்கு பொருத்தமான ஒரு சோதனை என்பதை எதிர்வு கூறுவதற்காக புலமைப்பரிசில் பரீட்சை புள்ளிகளை அம்மாணவர்கள் ஆறாம் ஏழாம் தரங்களில் சோதனைக்கு தோற்றி பெற்ற புள்ளிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
2.நம்பகத்தன்மை ( Reliability )
அளவீட்டு கருவி ஒன்றின் மூலம் பெரும் அளவீட்டில் ஒரு சீர்த்தன்மையே நம்பகத்தன்மை என்பதால் கருதப்படுகின்றது. சோதனை புள்ளிகளை கொண்டு பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படுவதுன்டு. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த அளவுக்கு சரியானது என்பது சோதனை புள்ளிகளின் நம்பகத் தன்மையில் தங்கியுள்ளது. எந்த ஒரு சோதனையினதும் புள்ளியானது மாணவனுக்கு கிடைக்க வேண்டிய சரியான புள்ளியை விட வேறுபட்ட இடம் உண்டு. அது சரியான புள்ளியிலும் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். யாதேனும் புள்ளியானது கிடைக்க வேண்டிய சரியான புள்ளியில் இருந்து குறைவாக அல்லது கூடுதலாக இருக்கும் அளவானது தவறுக்கூறு எனப்படும். புள்ளிகளின் தவறுக்கூறு குறைவடையும் அளவுக்கு அச்சோதனை நம்பகத்தன்மை அதிகரிக்கும் தவறுக்கூறு கூறுவதாயின் நம்பகத்தன்மை குறைவடையும்.
சோதனைப் புள்ளிகளின்
தவறுக்கூறு கூடுவதில் / குறைவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
1. புள்ளி வழங்குவோரின் அதாவது பரீட்சகரின் ஆளுமை பண்புகளுடன் தொடர்புடைய காரணிகள் இவற்றுள் முக்கியமானவை ஆகும். சில பரீட்சகர்கள் இருக்கமானோராவர் மேலும் சிலர் இளக்காரமானோர். இளக்காரமானோர் இயல்பாகவே அதிக புள்ளிகளை வழங்க முனைவர். பரீட்சகருக்கு இடையே ஒரு சீர்த்தன்மை காணப்படாமையானது சோதனையின் நம்பகத்தன்மை குறைவடைய ஏதுவாகும்.
2. பரீட்சகரின் பண்புக் கூறுகளின் மீது தற்காலிகமாக செல்வாக்கு செலுத்தும் காரணிகளும் உள்ளன. விடைத்தாள் புள்ளியிடும் வேளையில் பரீட்சகர் கலைப்புற்றறிருத்தல் , மனச்சஞ்சலத்திற்கு உள்ளாகி இருத்தல் , உடல் கோளாறுகள், சோம்பல் போன்ற உடல், உள நிலைமைகளும் பங்களிப்பு செய்யும்.
3. குறித்த பாடம் தொடர்பாக பரீட்சகரின் அறிவு ,தொழில் சார்ந்த அனுபவம் போன்றவையும் புள்ளி
வழங்களில் செல்வாக்கு செலுத்தும்.
4.பரீட்சகருக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்கள் போன்றவையும் புள்ளி மாறலில் செல்வாக்கு செலுத்தும்.
சோதனை ஒன்றி நம்பகத்தன்மை எவ்வாறானது என அளந்தறிவதற்குச் சோதனை சிறப்பறிஞர்கள் பல நுட்ப முறைகளை உருவாக்கியுள்ளனர். அவை புள்ளிவிபரவியல் கணித்தல்களை அடிப்படையாகக் கொண்டவை. இக் கற்கை நெறியில் நம்பகத் தன்மையை சோதித்தறிவதற்காக புள்ளிவிபரவியல் முறைகள் விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றில் ஒரு சில மாத்திரம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
1. சோதனை மீள் சோதனை முறை
2. சமாந்தர சோதனை முறை
3. பாதி முறை
4. அகவாரியான ஒரு சீர்த்தன்மை முறை
சோதனை ஒன்றின் நம்பகத்தன்மையை விருத்தி செய்வதற்காக கையாளத்தக்கக சில வழிமுறகள்
1. புறவயத்தன்மை பேணப்படும் வகையிலான வினாக்கள் அதாவது இரு தேர்வு ,பல்தேர்வு உட்பட்ட தெரிவு வகை வினாக்களை அதிக அளவில் உள்ளடக்கி இருத்தல்.
2. நீண்ட கட்டுரைக்கு பதிலாக அமைப்புக் கட்டுரை வினாக்களை பயன்படுத்துதல்.
3. புள்ளி வழங்கும் பணிக்காக விரிவான புள்ளி வழங்கும் திட்டம் ஒனறு தயாரித்தல்.
4. விடைத்தாளுக்கு புள்ளி இடும்போது முழு விடைத்தாளையும் ஒரே தடவையில் பார்ப்பதை தவிர்த்து எல்லா விடைத்தாள்களிலும் குறித்த ஒரு வினாவுக்கு புள்ளியிட்டு முடித்த பின்னர் அடுத்த வினாவுக்குப் புள்ளி வழங்க தொடங்குதல்.
5. புள்ளி வழங்கும் பணிக்காக பாட அறிவுமிக்க , அனுபவமிக்க பரீட்சகர்களை ஈடுபடுத்துதல்.
6. புள்ளி வழங்கும் பணிக்காக போதிய வசதிகளை கொண்ட அமைதியான ஒரு சூழலை பயன்படுத்தல்.
3.நடைமுறை சாத்தியம் ( Practicability)
சோதனை ஒன்றில் காணப்படும் பௌதீக சமூக சூழலில் பயன்படுத்தப்படும் திறனே நடைமுறை சாத்தியம் எனப்படும். எழுதுவதற்கு தேவையான உபகரணங்கள் வசதிகள் இல்லாத ஒரு சூழலில் எழுத்து சோதனைகளை நடத்த முடியாது. இவ்வாறான நடைமுறைப் பிரச்சினைகளை கொண்ட சந்தர்ப்பங்களில் வினாக்களை கரும்பலகையில் எழுதி அல்லது வாசித்து சோதனை நடத்தும் சந்தர்ப்பங்களும் உள்ளன.


0 Comments
THANK YOU COMMIN US