Breaking News

இயற்கை அனர்த்தம்

 



இயற்கை இடர்கள்

மக்களுக்கோ, பொருளாதார உடைமைகளுக்கோ அச்சுறுத்தலாக அமையக்கூடிய நிலைமைக்கு இட்டுச் செல்லக்கூடிய சுற்றாடல் நிகழ்வொன்று இயற்கை இடர் என அழைக்கப்படும்.

இயற்கை இடர்களின் வகைகள்

இயற்கை அனர்த்தம்

ஏதேனும் ௐர் இயற்கை இடர் காரணமாக ஒரு சமூகத்துக்கு அல்லது அவர்களின் பௌதிகச் சொத்துக்களுக்கு, மானிட செயற்பாடுகளுக்குத் தீங்கு விளைவிக்கப்படுமாயின் அது இயற்கை அனர்த்தம் என அழைக்கப்படும்.   இயற்கையாக ஏற்படும் பாதிப்பு இயற்கை அனர்த்தம் எனப்படும். பூமியதிர்ச்சி, வெள்ளம், காட்டுத் தீ, சூறாவளி, மின்னல், சூறைப் புயல், சுனாமி, எரிமலை வெடிப்பு என்பனவற்றை இயற்கை அனர்த்தங்களாக குறிப்பிடலாம். சமூகத்தின் மீது பாதிப்பினைக் கொண்டுவரும் யுத்தம், பயங்கரவாதம், கட்டடங்கள் இடிந்து விழுதல், வீதி விபத்துக்கள் ஆகியன அனர்த்தங்கள் எனும் வகைக்குள் அடங்கினாலும், அவை இயற்கை அனர்த்தங்கள் என்னும் வகைக்குள் அடங்குவதில்லை.

இயற்கை அனர்த்தங்களின் வகைகள்

இவ்வகைப்பாடு தவிர நிலநடுக்கம், எரிமலை, சுனாமி, சூறாவளி, மின்னல் தாக்கம் ஆகியன மனித தலையீடின்றி நிகழும் இயற்கை அனர்த்தங்கள் எனவும் நிலச்சரிவு, வரட்சி, வெள்ளம், காட்டுத் தீ, பனி மலைகள் உடைந்து விழுதல் போன்றவற்றை மனித செயற்பாடுகளால் தீவிரப்படுத்தப்படும் இயற்கை அனர்த்தங்கள் எனவும் வகைப்படுத்தப்படும்.

நிலச்சரிவு

நிலச்சரிவு என்றால் என்ன?

உயரமான  மலைச்சரிவொன்றின் மண், கல், தாவரங்கள் போன்றனவை சரிவின் வழியே திடிரென்று கீழ் நோக்கி நகர்தல் நிலச்சரிவு எனப்படும்.


நிலச்சரிவு ஏற்படும் இடங்கள்

Ø  மத்திய மலைநாட்டு பகுதிகள்

Ø  ஈரவலய மலைநாட்டு பகுதிகள்

நிலச்சரிவு அனர்த்தங்கள் ஏற்படுவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்

இயற்கை காரணிகள்

 

புவி நடுக்கம் ஏற்படல்.

இடைவிடாது தொடர்ந்து பெய்யும் கடும் மழை.

மலைச்சரிவுகளில் தீவிர அமுக்கம்.

பாறைகளின் அமைப்பும் பாறைப் படைகள் உக்கலும்.

பலவீனமான நீர் வடிகால் அமைப்பு.

தாவரப் போர்வை குறைவடைதல்.

மானிடச் செயற்பாடுகள்

முறையற்ற சாய்வுநிலப் பயன்பாடு.

சாய்வுநிலங்களில் காடழிப்பு.

இயற்கை நீர்வழிகளை மறித்தல்.

மலைநாட்டுப் பிரதேசங்களில் சுரங்கம் அகழ்தல்.

மண் மேடுகளை வெட்டுதல்,கல்லுடைத்தலும், வெடிக்கச் செய்தலும்.

மலைச் சாய்வுகளில் முறையற்ற நிர்மாணங்கள்.

நிலச்சரிவு இடரினை முன் கூட்டியே அறிந்துகொள்வதற்கான அறிகுறிகள்

ü  வீடுகளிலும், கட்டடங்களிலும் வெடிப்புக்கள் ஏற்படல்.

ü  குறிப்பிட்ட நிலத்தில் வெடிப்புக்களோ, கீழிறக்கங்களோ ஏற்படுதல்.

ü  அப்பிரதேசங்களிலுள்ள மரங்கள், மின் கம்பங்கள், தொலைபேசித் தூண்கள் ஆகியன சரிதல்.

ü  சாய்வு நிலங்களில் பெருமளவு தாவரங்கள் திடிரென இறத்தல், வாடுதல்.

ü  சாய்வு நிலங்களின் கீழ்ப்பகுதிகளில் நீர்மூலகங்கள், ஊற்றுக்கள் மாற்றமடைதல்.

ü  சகல விலங்கினங்களின் நடத்தைக் கோலங்கள் மாற்றமடைதல்.


வெப்பமான அயன மண்டலச் சமுத்திர மேற்பரப்பில் நிலவும் அதி தாழமுக்கத்தை மையமாகக்கொண்டு தோற்றம் பெறுகின்ற பெருமளவு வேகத்துடன் வீசும் காற்றுத் தொகுதியொன்று  சூறாவளி என அழைக்கப்படும்.


சூறாவளியொன்றின் தோற்றம் சுழல் மையமாகும்.  சமுத்திரப்பகுதியிலிருந்து  நிலப்பகுதியை நோக்கிவரும் வேகமான   காற்றுப்   பாரியளவு   சேதங்களை ஏற்படுத்துவதோடு   நிலப்பகுதியில் அதன் வலிமை குறைவடையும்.

சூறாவளி என்றால் என்ன?

சூறாவளி சமூத்திரத்திலிருந்து தரையை நோக்கி மிகவும் வேகமாக  நகருவதனால் சமுத்திர அலை, புயல் சீற்றம் கொண்ட அலையாக  மாற்றமடையும். அதன் மூலம் கரையோர நிலத்தோற்றத்துக்குப்  பெருமளவு பாதிப்புக்கள் ஏற்படுவதோடு, கடும் மழை மற்றும் சுழற் காற்றுக் காரணமாகப் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம்.

வங்காள விரிகுடாப் பகுதிகளில் விருத்தியாகும் புயல் மையங்கள் வங்காள விரிகுடாப் பகுதிகளிலிருந்து படிப்படியாக இலங்கையை நோக்கியோ அல்லது இந்தியாவை நோக்கியோ சூறாவளியாக நகர்ந்து செல்லும். குறிப்பாக ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் சூறாவளித் தாக்கம் காணப்படும்.

சூறாவளியினால் பாதிக்கப்படும் பிரதேசங்கள்

சூறாவளி தோற்றம் பெறுகின்ற சமுத்திரப் பகுதிகளை அண்டிக் காணப்படுகின்ற கரையோர நிலப்பகுதிகளைச் சூறாவளி விபத்து  நிகழக்கூடிய பிரதேசங்களாக அடையாளங்கணலாம். உலகின் சிறப்பான வானிலை நிலைமைகள் காணப்படுகின்ற அயன மண்டலப் பிரதேசங்கள்,இந்தோனேசியா, ஐக்கிய அமெரிக்காவின் தென் கரையோரப் பிரதேசங்கள், வங்காள  விரி குடா ஆகியன சூறாவளியினால் பாதிப்புக்களை எதிர்கொள்கின்ற பிரதான பிரதேசங்களாகும்.

சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புக்கள்

பௌதீக தாக்கங்கள்

சடுதியாகக் கடும் காற்று வீசுதல்

சூறாவளியுடன் கடும் மழை ஏற்பட்டு அதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படல்.

கடும்  மழையும் மின்னலும் ஏற்படல்.

கடும் மழையினால் மண்சரிவு ஏற்படல்.

நீர் மாசடைதல்.

சுழிக் காற்று ஏற்படல்.

மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்

வதிவிடமும்  உடமைகளும் சேதமடைதல்.

மின் வடங்களும் தொடர்பாடல் தொகுதிகளும் சேதமடைதல்.

நீர் மாசடைதலும் குடிநீர் தட்டுப்பாடும்.

தொற்று நோய் பரவுதல்.

       உதாரணம்-டெங்கு,மலேரியா.

மீன் பிடிக் கைத்தொழில் பாதிப்படைதல்.

சூறாவளி அனர்தத்தினை குறைத்துக்கொள்வதற்காக மேற்க்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்

சூறாவளி நிகழ்வுகள் ஏற்படக்கூடிய காலப்பகுதிகளில் வானிலைத் தகவல்கள், தொடர்பாக விழிப்புணர்வுடன் இருத்தல்.

வீடுகளுக்கு அண்மையிலுள்ள ஆபத்தான மரங்களை அகற்றுதல்.

வீடுகளின் கூரைகளை உறுதியாக அமைத்தல்.

வலிமையான காற்றுத்தடைகளை அமைத்தல்.

சூறாவளிகள் வீசும்போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுதல்.

சேதமடைந்த மின் கம்பிகள், பாலங்கள், கட்டடங்கள் உபயோகிக்கும் போது எச்சரிக்கையாகச் செயற்படல்.

அசுத்தமடைந்த நீரைப் பருகுவதைத் தவிர்த்தல்.

பொருத்தமான இரசாயனங்களை பயன்படுத்தி கிணற்றை சுத்திகரித்தல்.

சாதாரண மக்களால் இவ்வனர்த்தம் ஏற்படுவதை முன் எதிர்வுகூற முடியாவிடினும், வானிலை ஆராய்ச்சியாளர்களால் செய்மதிகளின் உதவியுடன் இவ்வனர்த்தததினை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.இவ்வனர்த்ததிலிருந்து ௐரளவேனும் பாதுகாப்புப்பெறுவதற்கு வானிலை எதிர்வுகூறல்கள் பெரிதும் பயனுள்ளவையாக இருக்கும்.

புவியின் உட்பகுதியிலிருந்து வெளிவரும் மக்மா புவியோட்டில் காணப்படும் தகடுகளின் எல்லைகள்,பிளவுகள்,நொய்தலான பகுதிகளினூடாக வெளியே கக்கப்படல் எரிமலை கக்குகை என அழைக்கப்படும்.இவ்வாறு வெளியே பாய்ந்தோடும் மக்மா லாவா என அழைக்கப்படும்.

எரிமலைகளின் பரம்பல்

பெரும்பாலும் எரிமலைகள் புவித்தகடுகளின் எல்லைகளில் காணப்படுகின்றன.அதேபோல் அமிழும் தகட்டு வலயங்கள் மற்றும் தகட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வலயங்களிலும், எரிமலைகளைக் காணமுடிகின்றது.

உயிர்ப்பு எரிமலைகளில் 70% ஆனவை பசுபிக் சமுத்திரத்தைச் சூழவுள்ள பசுபிக் தகட்டு எல்லையில் பரம்பியுள்ளன.இவ்வலயம் பசுபிக் நெருப்பு வலயம்என அழைக்கப்படுகின்றது.

எரிமலைகளினால் ஏற்படும் பாதிப்புக்கள்

பனிப்பாறை வீழ்ச்சி

பனிப்பாறை வீழ்ச்சி என்றால் என்ன?

நீண்ட குளிர்க்காலம் நிலவும் மேல் அகலக் கோட்டு பிரதேசங்களிலும், மிக உயரமான மலையுச்சிகளிலும் காணப்படும், கடும் குளிர்க்காலங்களில், பனிப்பாறை உருவாகும். அதே சமயம், மேல் பிரதேசங்களில் இருந்து கீழ் நோக்கி பனிப்பாறைகள் விழுதல், பனிப்பாறைகள் விழுதல், பனிப்பாறை வீழ்ச்சி எனப்படும்.

பனிப்பாறை வீழ்ச்சி ஒரு இடராக அமைவது பனிப்பாறை  உருவாகும் பிரதேசங்களை அண்டி மனித குடியுருப்புக்கள் நிலவுதலும், போக்குவரத்து நடைபெறுதலுமாகும். விசேடமாக வட அத்லாந்தில் மற்றும் வட பசுபிக் சமுத்திர கப்பல் போக்குவரத்தின்போது இவ்வாறு வீழ்ச்சியடைந்த பனிப்பாறைகளால் கப்பற் பயணங்கள் தடைப்பட்ட சந்தர்ப்பங்கள் பலவாகும்

பூமி வெப்பமடைதலினால், பனிப்பாறைகள் உருகி பாரிய பனிப்பாறைகள் உயரமான பிரதேசங்களிலிருந்து கீழ் பிரதேசங்களுக்கு விழும்.

பனிப்பாறைச் சரிவு பௌதீக சூழலின் மீது செல்வாக்கு

பனிப்பாறை சரிவடைவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

இதனால் நீர் மாசடையக் கூடும். நீர் தட்டுப்பாடும் ஏற்படும்.

பாரிய பனிப்பாறைகள் சமுத்திரங்களினுல் விழுவதால் சுனாமி ஏற்படக் கூடும்.

பனிப்பாறைகளுக்கு அண்மையில் காடுகள் இருக்கும் போது அவை அழிவுறும்.

வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கை குறைக்கும் நடவடிக்கைகள்

வரட்சி

சுனாமியால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்

காட்டுத்தீ

ரொனாடோ

இடி மின்னல்

அனர்த்த முகாமைத்துவ வட்டம்

முன்தயார் நிலை

அனர்த்தங்களின் மீது  செல்வாக்குச் செலுத்தும் காலம், அனர்த்தம் தொடர்பான  எதிர்வுகூறும் ஆற்றல்,அனர்த்தங்களுக்கு துலங்குதல், சில வகை அனர்த்தங்களுடன் வாழக் கூடியவாறு செயற்படும் ஆற்றல்.

உதாரணம்-வரட்சியுடன் வாழல்.

வரட்சிக்கு முன்னர்,வரட்சி வருவதற்கான முன்னறிகுறிகளை இனங்காணும் ஆற்றல்  இருத்தல் முக்கியமாகும். அவ்வாறாயின் அதற்கு முகங் கொடுக்கும் ஆற்றல் அவசியமாகும்.

அவ்வாறே அபாயத்தை குறைந்தளவாக்கும் வேலைத்திட்டங்களைத் தயாரித்துக்  கொள்ளல் முக்கியமாகும்.

மக்களை அறிவுறுத்தி அனர்த்தத்திற்கு தைரியமாக முகங் கொடுக்கத் தயார்ப்படுத்தல் வேண்டும். (நீரைச் சேமித்து வைத்தல் வறட்சிக்குப் பொருத்தமான பயிர்முறைகள், விவசாயத்திற்கு மாற்றிடான தொழில்களைத் தேர்ந்தெடுத்தல்) வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றல். ஏனைய இயற்கையான அனர்த்தங்களுக்கு இருக்க வேண்டிய முன் தயார்நிலைகள் தொடர்பாக  மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது

அனர்த்த துலங்களைக் காட்டும் சந்தர்ப்பம்

v  யாராயினும் அனர்த்தத்திற்கு துலங்களைக் காட்டும் தேவை ஏற்படுமாயின், அது அந்தந்த அனர்த்தத்திற்கு ஏற்ப வேறுபடும்.

     உதாரணம் : மண்சரிவு ஒரு அனர்த்தமாகும்.

v  அனர்த்தத்திற்கு ஆளான மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல். (பாதுகாப்பான இடத்திற்குச் செல்லல்)

v  விபத்திற்கு ஆளானோருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கல்.

v  முடியுமாயின் உடமைகளை அகற்றிக் கொள்ளல்.

v  மக்களுக்கு தற்காலிக வதிவிடங்களை அமைத்துக் கொடுத்தலும்,உணவு பானங்களை வழங்குதலும்.

v  அனர்த்தத்தை மதிப்பிடல்.

நிலைமையை சீர்செய்தல்

v  இச்சமயத்தில் மீள் கட்டியெழுப்பல் அல்லது புனருத்தாபனம் செய்தல் எனு‌ம் செயற்பாட்டைச் செய்தல் வேண்டும்.

v  மதிப்பிட்ட அனர்த்தத்தை இழிவளவாக்க முடியுமாயின் அதற்கான உபாய வழிகள்  பின்பற்றப்பட வேண்டும்.

v  இதனைக் குறுங்கால, நெடுங்கால திட்டமாகச் செயற்படுத்த வேண்டும்.

v  இங்கு மக்களை அறிவுறுத்தும் வேலைத் திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.

      உதாரணம்சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர்

v  அனர்த்தத்திற்குத் துலங்களைக் காட்டிய பின்னர், அனர்த்தத்திற்கு ஆளானோரின்  உள நிலையை சீரமைப்பதற்காக, நிவாரண வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.

அனர்த்த முகாமைத்துவ சுற்றுவட்டத்தின் அடுத்தக் கட்டம், முன் தயாராதலாகும்.  அனர்த்தத்தை இழிவளவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும் முன்தயாராகும் நிலையுடன் தொடர்புற்றிருக்கும். இதன் சில நடவடிக்கைகள் முன் தயாராகும் கட்டத்தில் செயற்பாடுகளாக  கொள்ளப்படும்.

v  அபாய நிலையை மதிப்பிடல்

v  விபத்தை அறிவிக்கும் தொகுதிகளை நிறுவுதல்.

v  அபாயத்தைக் குறைந்தளவாக்கும் கருவிகளை அறிமுகஞ் செய்தல்

v  அபாயத்தைக் குறைந்தளவாக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல்.

v  மக்களின் பங்களிப்பு

v  நிறுவனரீதியாக வலுப்படுத்தல்

v  அபாய அறிவிப்பும் காப்பாற்றலும்.

v  நட்டங்களை மதிப்பிடல்.

v  திடீர் நடவடிக்கைகள்.

v  நிவாரணம் வழங்கல்.

v  பலமான தொடர்பாடல்  பொறிமுறை

அனர்த்தத்தின் பின்னர்

v  அபாயத்தை மதிப்பிடல்.

v  சீரமைக்கும் உபாய வழிகளைப் பின்பற்றல்.

v  மீண்டும் கட்டியெழுப்பும் செயற்பாடுகள்.

v  அறிவுறுத்தல்கள்.

v  அபிவிருத்தியை முன்னெடுத்தல்.

 


THANK YOU

 

Post a Comment

0 Comments

close