Breaking News

பாடசாலை இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் முக்கியத்துவம்

 பாடசாலை இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் முக்கியத்துவம்

சமூகப் பிராணியான மனிதன் தனது சமுதாய வாழ்க்கைக்கான பயிற்சியை பாடசாலையிலிருந்தே பெறுகின்றான். பாடசாலை வாழ்க்கையே அவனது சமுதாய வாழ்க்கைக்கான ஆரம்பமாகக் கூட அமைகின்றது. அதற்கேற்ற வகையில் மாணவர்களை சமுதாயத்திற்கு ஏற்றவர்களாக பாடசாலைகள் மாற்றவேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் முழுமையான பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இங்கு முழுமையான பயன் என்பது பாடசாலையில் வெறுமனே கல்வி அறிவை மட்டும் பெற்றுக் கொள்வதை மட்டும் நோக்காகக் கொள்ளாது மாற்றமுறும் சமுதாயத்திற்கேற்ப உடல், உள, சமூக பண்பாட்டு, ஆளுமை என சகல வளர்ச்சிகளுடன் கூடிய பூரண மனிதனாக வாழக் கூடிய ஆற்றலை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறான ஆற்றல்களை வகுப்பறையில் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டால் மட்டும் மாணவர்கள் பெறறுக் கொள்ள முடியாது. இவை பாடசாலைகளில் அமுல்படுத்தப்படும் பாட, இணைக் கலைத் திட்டச் செயற்பாடுகள் மூலமே அடையப்பட வேண்டும்.

இக்கருத்தினையே 18ம் நூற்றாண்டின் கல்விச் சிந்தனையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். அவர்களுள் மொண்டிசோரி முறையை உருவாக்கித்தந்தவரும் உள மருத்துவருமான மொண்டிசோரி அம்மையார் (ஆயசயை ஆழவெநளளழரசi) “அறிவுக்கு வழிதிறக்கும் வாசல்களான புலன்களுக்கும், தசைகளுக்கும் நன்கு பயிற்சி அளிக்கக் கூடியதாக கல்வி அமைதல் வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். அதே போன்று குழவிப் பூங்கா என்னும் கல்வி முறையை ஆரம்பித்து வைத்த புரோபல் (குசநைனெசiஉh குசழடிநட) “பிள்ளைகளின் வளர்ச்சிக்கு மதிப்பளித்து அவர்களை நல்வழிகளில் வளர்க்க விளையாட்டு மூலம் கல்வியளித்தல் அவசியம் என்னும் இம் முறையால் பிள்ளையின் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து வளர அது காரணமாக அமையும் எனக் கூறியுள்ளார். அத்துடன் அபிநயம், இசை, இயக்கம் என்ற அடிப்படையில் பிள்ளைகள் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். அதில் ஆர்வம் அதிகரிக்க அவர்களின் ஆற்றலும் அறிவும் வளர்ச்சியடைகின்றன. இவ்வாறான செயல்களால் கூட்டுமனப்பான்மை, மற்றவர்களை மதிக்கும் பண்பு, ஒழுக்கம் போன்ற பண்புகள் பிள்ளைகளிடம் இயல்பாகவே வளர்கின்றன என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார். மேலும் கீழைத்தேய கல்விச் சிந்தனை யாளரான மகாத்மா காந்தி அவர்கள் கல்வி என்பது குழந்தைகளிடமிருந்து முழுமனிதனை வெளிக்கெணர்வது. இதற்கு அவர்களின் உடல், உள்ளம், ஆன்மா, இருதயம் என்பவற்றை ஒருமித்த வகையில் விருத்தி செய்து ஆளுமையை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டமைய வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய அறிவுடன் பல்துறைசார் ஆற்றல்களையும் பெற்றுக் கொள்ளும் களமாகப் பாடசாலைகள் அமைய வேண்டும் என கல்விச் சிந்தனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் கூட்டு முயற்சிகளிலும் விளையட்டுகளிலும் ஆர்வத்துடன் பங்கு பற்றும் பிள்ளைகளே வகுப்பறைக் கற்றற் செயற்பாடுகளிலும் சுறுசுறுப்புடன் செயற்படுகின்றனர். என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் கற்றல் - கற்பித்தற் செய்றபாட்டுக்குப் புறம்பாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் முக்கியத்துவமும் அவசியமும் பற்றி இன்று பாடசாலைகளில் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் இணைக்கலைத்திட்டம் என்றால் என்ன? பாடசாலைகளில் நடைமுறைப்படுத்துகின்ற இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் எவை? அவற்றை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்துவதனால் பிள்ளைகளிடம் எவ்வகையான பண்புகளை வளர்க்கலாம்? இச் செயற்பாடுகளின் மூலம் ஆசிரியர்கள் பெறும் பயன்கள் யாவை? என்பவை பற்றி இங்கு ஆராயப்படுகின்றது.


பாடசாலை இணைக்கலைத்திட்டம்


பாடசாலையின் வகுப்பறைப் போதனைக்கப்பால் உடல்வளர்ச்சி, உளவளர்ச்சி, சமுதாய வளர்ச்சி, பண்பாட்டுவளர்ச்சி ஆகியவை வளர்க்கப்படக்கூடிய பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களில் மாணவர்களைப் பங்குபற்றச் செய்வதன் மூலம் மாணவரை ஒரு முழுமனிதனாக்கும் செயற்றிட்டமே இணைப்பாடவிதானக் கலைத்திட்டம் எனப்படும்.

இணைப்பாடவிதானச் செயற்பாடுகள்.

அந்த வகையில் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இணைப்பாடவிதானச் செயற்படுகளாவன : விளையாட்டுப் போட்டி, கலைவிழா, பரிசளிப்பு விழா, தமிழ்தின விழா (வலய ஃ மாவட்ட ஃ தேசிய மட்டத்தில்), கண்காட்சி (வகுப்பறை ஃ பாடசாலை மட்டத்தில்), வாழ்க்கைத் திறன் நிகழ்ச்சிகள், சமயம் சார்ந்த விழாக்கள் (நவராத்திரி ஃ ஒளிவிழா ஃ), நூல் வெளியீடு (சஞ்சிகை), சுவர் சஞ்சிகை, செய்திதாள் வெளியீடு, கலாசார நிகழ்வுகள் (புத்தாண்டுஃ தீபாவளி), கல்விச் சுற்றுலா, வெளிக்கள ஆய்வுப் பயணங்கள், சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சிகள், சிரமதானம் (மாணவர் பங்குபற்றல்), மரநடுகை இயக்கமும், மரநடுகையும், பூமரம் நாட்டலும், பராமரித்தலும், மூலிகை தோட்டம் அமைத்தலும், பராமரித்தலும், சாரணியம் பாசறை, முதலுதவி பாசறை, செஞ்சிலுவை சங்கம்,

மன்றங்கள்: இலக்கிய மன்றம், விஞ்ஞான மன்றம், ஆங்கில மன்றம், நுண்கலை மன்றம், நாடக மன்றம், நூலக மன்றம், சமய விருத்தி மன்றம். ஏனைய பாடங்கள் தொடர்பான மன்றங்கள்.

கழகங்கள்: எழுத்தாளர் கழகம், விவசாய கழகம், மெய்வல்லுனர் கழகம், விளையாட்டு கழகம். இவ்வாறாக நூற்றுக்கு மேற்பட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகள் பாடசாலைகளில் இடம்பெறுகின்றன. இவற்றை ஒழுங்கமைக்கும் போது பாடசாலையின் அமைவிடம், வளங்கள், ஆசிரியர்களது ஆர்வம், பாடசாலையை அண்டி சமூகத்தின் எதிர்பார்ப்பு என்பவற்றுக்கேற்ப ஏற்பாடு செய்தலே சிறந்தது.


இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் மாணவர்களிடம் வளர்க்கும் பண்புகள்.


உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே வளரச் செய்தல்


தன்னம்பிக்கை, சுயகௌரவம். சுயதிறன் விருத்தி என்பவற்றை ஏற்படுத்தல்


தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தல்


பிறருக்கு உதவும் மனப்பான்மையை உருவாக்குதல்


ஆரோக்கியமான குணநலன்கள், உயர்ந்த நோக்கம், சீரிய விழுமியங்கள் போன்றவை வளர உதவுதல்


குழு முயற்சி, கூட்டுறவு பண்பு என்பவற்றை வளர்த்தல்


நம்பிக்கை, விசுவாசம் கொண்டோரை உருவாக்குதல்


அமைதியின்மை, மனக்குழப்பம், ஆக்கிரமிப்பு, உணர்ச்சி, விரக்தி, தவறான மனநிலை, போன்றவற்றை இல்லாமல் செய்தல் மற்றோரிடம் புரிந்துணர்வை ஏற்படுத்தல்


உடல், உள, ஆன்மீக அபிவிருத்தியை ஏற்படுத்தல்


செயலூக்கத்தை ஏற்படுத்தல்


வெற்றி, தோல்வி என்பவற்றைச் சமமாக மதிக்கும் தன்மையை உருவாக்குதல்


நல்ல ஆளுமைப் பண்புகளை உருவாக்குதல்


கலையுணர்வை வளர்த்தல்


மொழித்திறனை விருத்தி செய்தல்


அழகியல் உணர்வினை விருத்தி செய்தல்


பல்வகையான கலாசார கோலங்களை அறிந்து அவற்றை மதிக்கச் செய்தல்


ஆக்கத்திறனை வளர்த்தல்


தேசிய ஐக்கியம். தேசிய ஒருங்கிணைப்பு போன்றவற்றை ஏற்படுத்தல்


நமது சுற்றாடலைப் பேண வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தல்


ஆசிரியர் - மாணவர், மாணவர் - மாணவர் என்போருக்கிடையில் நல்ல அந்நி


யோன்யத் தொடர்புகளை வளர்த்தல்


போன்ற பல பண்புகள், ஆற்றல்களை வளர்க்கின்றன. மேற்குறிப்பிட்ட பண்புகள், ஆற்றல்கள்; ஊடாக சவால்கள்; நிறைந்த இவ்வுலகில் பொருத்தப்பாடுடைய பூரண ஆளுமை கொண்ட பிள்ளைகள் உருவாகும் என்பது உறுதி.


ஆசிரியர் பெறும் பயன்கள்

அடுத்து இணைப்பாடவிதானச் செயற்பாட்டை பாடசாலையில் நடைமுறைப்படுத்துவதால் ஒரு ஆசிரியர் பெறும் பயன் எவ்வாறானது என பார்ப்போமாயின் பாடசாலையில் ஆசிரியர் வெறுமனே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுடன் (வகுப்பறைக்குள் மட்டும்) மட்டும் தமது பணியினை நிறுத்தி விடாது அதற்கும் அப்பால் உடல், உள்ளம், ஆன்மா ஆகிய மூன்றும் சமவளர்ச்சி பெற்று வாழகூடிய பிள்ளைகளை உருவாக்குவதே தமது நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும். இதற்கு ஆசிரியர் கற்றல் கற்பித்தலுக்குப் புறம்பாக பிள்ளைகளை இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் பங்குபற்றச் செய்வதுடன் தானும் தவறாது தன்னால் இயன்ற துறைகளில் அர்ப்பணிப்புடனும், உற்சாகத்துடனும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது பிள்ளைகளுக்கு ஒரு முன்மாதிரியாகக் கூட அமையும். இதன் மூலமாக பிள்ளைகள் பயனடைவது போன்று ஆசிரியரும் பல்வேறு பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவற்றுள் :


ஆசிரியர் - மாணவர்களுக்கு இடையிலான இடைத்தாக்கம் மேலும் வலுவடைதல் (அந்நியோன்ய உறவு), மாணவரை விளங்கிக் கொள்ள முடிதல் வகுப்பறையில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்குப் புறம்பாக அவர்களின் விN~ட ஆற்றல், திறன், மனப்பாங்கு என்பவற்றை விளங்கிக் கொள்ளலாம்)


தமது வகுப்பில் இல்லாத மாணவரையும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படுதல். (பாடசாலையில் உள்ள ஏனைய ஆற்றல்கள், திறன்கள் கொண்டோரையும் அடையாளம் கண்டு கொள்ளலாம்)


ஏனைய சக ஆசிரியர்களுடன் உறவுநிலை மேம்படவும், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன் மூலம் புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளவும்; முடிதல்


மாணவர்களுடனும், சக ஆசிரியர்களுடனும் சுதந்திரமாகவும், முறைசார முறையிலும் அனுபவங்களைப் பகிர வாய்ப்பு உருவாதல்


பாடசாலையில் பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தல்


செயற்பாடுகளைத் திட்டமிட ஒழுங்கமைக்க முகாமைசெய்ய - மதிப்பிட சந்தர்ப்பம் உருவாதல்


சுய ஒழுக்கம், சுய நம்பிக்கை என்பவற்றைக் கட்டியெழுப்ப வாய்ப்புக் கிடைத்தல்


தனது சுயம் பற்றி அறிந்து கொள்ளவும், தனது ஆளுமையை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தல்


தன்னிடம் உள்ள விN~ட ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தல்.


போன்றவைக் குறிப்பிடலாம்


இவ்வாறாக பாடசாலைகளில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக பிள்ளைகளும், ஆசிரியர்களும் பல பயன்களைப் பெற்றுக் கொண்ட போதும் இவற்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் போது ஆசிரியர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படலாம். இதனால் பல ஆசிரியர்கள் அச்செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி கொள்வது வழக்கம். எனவே அவை மிகச் சரியாக திட்டமிட்டு செயற்படுத்தப்படுமாயின் அதில் வெற்றி பெறுவது உறுதி. இதற்கு விN~டமாக பாடசாலைகளின் வசதிகள், பிள்ளைகளின் தேவை என்பவற்றுக்கேற்ப அவை தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். அத்துடன் அது ஒரு பொழுது போக்குச் செயலாக அமையாது பிள்ளைகளின் ஆளுமை விருத்திக்கு உதவுவதாக அமைவது மிக அவசியமாகும்.


மேலும் இணைப்பாட விதானச் செயற்பாட்டினை ஒழுங்கமைக்கும் போது குறிப்பிட்ட ஆசிரியர்கள் மட்டும் ஈடுபடுவதாக அல்லாமல்; அவ்வவ் துறைகளில் ஆர்வமுள்ள அனைத்து ஆசிரியர்களுடனும் கலந்தாலோசித்து அவர்களையும் அதில் இணைத்துக் கொள்வதுடன் அவர்களுடைய ஒத்துழைப்பையும் பெற்று நடைமுறைப்படுத்தின் அது நல்ல விளைதிறனை கொடுக்கும் செயற்பாடாக அமையும்.

முடிவுரை

பிள்ளையின் பூரண விருத்திக்கு இணைப்பாடவிதானச் செயற்பாடு இன்றியமையாதது என்பதால் வகுப்பறையில் கற்றல் - கற்பித்தற் செயற்பாட்டுக்குப் புறம்பாக அவற்றோடு இணைந்த வகையில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் கூடுதலான அக்கறையை வெளிக்காட்ட வேண்டியது அதிபர் ஆசிரியர்களது கடமையாகும். ஆயினும் பாடசாலை நேரசூசியில் இதற்கான நேரத்தை ஒதுக்குவதில் இடர்பாடு காணப்பட்டாலும் அதன் அவசியத்தை உணர்ந்து பாடசாலை நேரத்தில் வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை பாடவேளையை ஒதுக்கி அதில் பிள்ளைகளை ஈடுபடச் செய்யலாம். அல்லது பாடசாலை முடிந்த பின்னர் இம் முயற்சிகளுக்கு ஆசிரியர் சேவையை பெறக் கூடிய வகையில் அவர்களது நேரசூசியை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இதனை நடைமுறைப்படுத்தலாம். எவ்வாறாயினும் இணைப்பாட விதானச் செயற்பாட்டினை கூடிய வினைத்திறனைத் தரும் வகையில் அமுல்படுத்துவது அதிபர், ஆசிரியர் போன்றோரின் ஆர்வம், அர்ப்பணிப்பு என்பவற்றிலேயே  தங்கியுள்ளது

THANK YOU 

NOTES BY ANBU

Post a Comment

0 Comments

close